Published:Updated:

Enjoy Enjaami விவகாரம்: தலித் என்பதால் அறிவு ஒதுக்கப்படுகிறாரா, சந்தோஷ் நாராயணன் சாதி பார்க்கிறாரா?

எஞ்சாய் எஞ்சாமி

"சந்தோஷ் நாராயணன் சொல்வதை இன்னொருவரிடம் வேறு மாதிரியாகவும், இன்னொருவர் சொல்வதை சந்தோஷ் நாராயணணிடம் வேறு மாதிரியாகவும் சொல்லியே பிரச்னையை பெரிதாக்கிவிட்டார்கள்."

Enjoy Enjaami விவகாரம்: தலித் என்பதால் அறிவு ஒதுக்கப்படுகிறாரா, சந்தோஷ் நாராயணன் சாதி பார்க்கிறாரா?

"சந்தோஷ் நாராயணன் சொல்வதை இன்னொருவரிடம் வேறு மாதிரியாகவும், இன்னொருவர் சொல்வதை சந்தோஷ் நாராயணணிடம் வேறு மாதிரியாகவும் சொல்லியே பிரச்னையை பெரிதாக்கிவிட்டார்கள்."

Published:Updated:
எஞ்சாய் எஞ்சாமி
சினிமா தவிர்த்த தனி இசைப்பாடல்களுக்கென தனி மார்க்கெட் தற்போது உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதன் உச்சமாக கடந்த மார்ச் மாதம் வெளியான ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் தேசிய, மாநில, மொழி எல்லைகளை எல்லாம் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போதுவரை இந்தப் பாடல் யூடியூபில் 30 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் பாடலாக முதலிடத்தில் உள்ளது.

பூர்வக்குடிகளை நிலமற்றவர்களாக மாற்றிய அரசியலைப் பேசும் இந்தப் பாடலை மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருந்தவர் அறிவு. இந்தப் பாடலின் உயிரே இந்த வரிகள்தான். அரக்கோணத்தைச் சேர்ந்த அறிவு பா.இரஞ்சித்தின் ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் மூலம் புகழ்பெற்றவர். ராப்பராக இவர் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறார். ஆனால் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் ஆன்மாவான அறிவு இந்த ஆல்பத்தின் வெற்றியில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

அறிவு
அறிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயாணன். இந்தப் பாடலை வெளியிட்டிருப்பது கனடிய நிறுவனமான ‘மாஜா’. மாஜாவின் பேட்ரனாக இந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் வைக்கப்பட்டிருந்த ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் விளம்பரத்திலும் அறிவின் முகம் இல்லை என்பது சர்ச்சையானது.

இந்தச் சூழலில்தான் கடந்த வாரம் புகழ்பெற்ற இசை, பண்பாட்டு, கலாசார இதழின் அட்டைப்படத்தில் தீ மற்றும் கனேடிய பாப் பாடகரான ஷான் வின்சென்ட் டி பால் என இந்த இருவர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். ஆனால், ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை எழுதி, பாடி, நடித்த அறிவு இந்த இதழின் அட்டைப்படத்தில் இல்லை. இதழுக்குள்ளும் அறிவின் பேட்டி இல்லை. இதனால் அறிவு புறக்கணிக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பல தரப்பட்டவர்களும் தங்கள் கருத்துகளை எழுதிவருகிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித் ட்விட்டரில் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘’ ‘நீயே ஒளி’, ‘என்ஜாய் எஞ்சாமி’ என இரண்டு பாடல்களையும் எழுதி பாடியிருக்கும் அறிவின் பெயர் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த புறக்கணிப்பு எதனால்’’ என ட்வீட் செய்திருக்கிறார் பா.இரஞ்சித்.

‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சிஎஸ் அமுதன் இதுகுறித்து சந்தோஷ் நாராயணன், மாஜாவின் இந்திய முகமான ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெளிப்படையாகப் பேசவேண்டும் என எழுதியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மாஜா, சந்தோஷ் நாராயணன், அறிவு என மூன்று தரப்பிலும் அவர்களுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘’அறிவின் ஆட்டிட்யூட்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னையாக இருந்தது. அவராகவே தன்னை யாரோ அமுக்கப்பார்ப்பதாகவும், தனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மறுப்பதாகவும் பேச ஆரம்பித்தார். ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவரை வரவைப்பதற்குக்கூட பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டியிருந்தன. அறிவு மிகவும் இன்செக்யூர்டானவராக நடந்துகொண்டார். மாஜாவுக்கும் அவருக்கும் நேரடியாக எந்தப் பிரச்னையும் இல்லை. நடுவில் இருப்பவர்கள்தான் இருதரப்பிலும் விரிசலை உண்டாக்கிவிட்டார்கள்.

சந்தோஷ் நாராயணன் சொல்வதை இன்னொருவரிடம் வேறு மாதிரியாகவும், இன்னொருவர் சொல்வதை சந்தோஷ் நாராயணணிடம் வேறு மாதிரியாகவும் சொல்லியே பிரச்னையை பெரிதாக்கிவிட்டார்கள்.

அறிவுக்கு மட்டுமல்ல இந்த ஆல்பத்தில் யாருக்குமே சம்பளம் இல்லை. தயாரிப்பு செலவுகள் அனைத்தையும் மாஜா நிறுவனம் பார்த்துக்கொண்டது. அறிவு உள்பட கலைஞர்களுடனான ஒப்பந்தம் ரெவென்யூ ஷேரிங் அடிப்படையிலானது. இனிமேல்தான் கலைஞர்களுக்கான தொகை பகிர்ந்தளிக்கப்படும்’’ என்கிறார்கள் மாஜாவுக்கு நெருக்கமான சிலர்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் வட்டாரத்தில் பேசினோம். ‘’சந்தோஷ் நாராயணன் அறிவுக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். சினிமாவில் அவருக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கக் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், இப்போது சந்தோஷ் நாராயணணுக்கு சாதி அடையாளம் பூசுகிறார்கள். சந்தோஷ் நாராயணன் என்ன சாதியைச் சார்ந்தவர் என்பது இவ்வளவு காலமாகத் தெரியாதா?! இப்போது வேண்டும் என்றே சாதியைச் சொல்லி சந்தோஷ் நாராயணன் மேல் அவதூறு பரப்புகிறார்கள். தலித் முன்னெடுப்புகளுக்கு எப்போதும் சந்தோஷ் பக்கபலமாக இருப்பார். வாழ்நாள் முழுக்க அவருடைய பங்களிப்பு இருக்கும். சமூகம் ஒன்றாக எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்பதுதான் சந்தோஷின் விருப்பம். விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில்கூட சந்தோஷ் இசையில் அறிவு பாடல்கள் பாடியிருக்கிறார். சந்தோஷுக்கும், அறிவுக்கும் எந்தப் பிரச்னையுமே இல்லை. சிலர் வேண்டும் என்றே பிரச்னை செய்கிறார்கள். விரைவில் எல்லாம் சரியாகிவிடும்’’ என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாடகர் அறிவிடம் பேச பலமுயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அறிவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.
அறிவு
அறிவு

‘’எஞ்சாய் எஞ்சாமி பாடலை எழுதியவர் அறிவு. ஆனால், யூடியூபில் இருக்கும் கிரெடிட்ஸில் அறிவின் பெயரே இல்லை. இதில் இருந்தே பிரச்னை எங்கிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அறிவு போன் எடுக்கவில்லை, லேட்டாக வந்தார், ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்று சொல்பவர்கள் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்பதற்கான காரணத்தை கேட்கமாட்டார்கள். இவ்வளவு காலமாக இருந்த சந்தோஷ் நாராயணன் வேறு, இப்போதிருக்கும் சந்தோஷ் நாராயணன் வேறு. இவ்வளவு நாள்களாக அவருக்குள் மறைந்திருந்த சாதிய முகம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. அதுதான் பிரச்னையே. ‘நீங்கள் உங்கள் அரசியல் கருத்துகளைப் பரப்ப நான் ஏன் இசையமைக்க வேண்டும்’ எனப் பேசுகிறார். அவருடைய மகள் தீ-யை அறிவு தன் அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள பார்ப்பதாக நினைக்கிறார்’’ என்கிறார்கள்.

அறிவு ஏன் வெளிப்படையாக பேச மறுக்கிறார் என விசாரித்தபோது, ‘’பல படங்கள் கையில் வைத்திருப்பதால் அதற்கான பாடல் வேலைகளில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்’’ என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் சந்தோஷ் நாராயணன், அறிவு என இருவரும் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே உண்மைகள் வெளியேவரும். இருவரிடமும் தொடர்ந்து பேசும் முயற்சிகளை விகடன் எடுத்து வருகிறது. இருவரின் கருத்துகளையும் விகடன் வெளியிட தயாராக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism