Published:Updated:

`பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு, அறுவை சிகிச்சை செய்ய முடிவு' : குடும்பத்தினர் தகவல்!

பாம்பே ஜெயஶ்ரீ

பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீ மூளையில் ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:

`பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு, அறுவை சிகிச்சை செய்ய முடிவு' : குடும்பத்தினர் தகவல்!

பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீ மூளையில் ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பே ஜெயஶ்ரீ

கர்னாடக இசைக் கலைஞரும் பின்னணிப் பாடகியுமான பாம்பே ஜெயஶ்ரீ, `மின்னலே' படத்தில் `வசீகரா ‘பாடல் பாடியதன் மூலம் தமிழில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.விபிரகாஷ் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

பாம்பே ஜெயஶ்ரீ
பாம்பே ஜெயஶ்ரீ

இவர் இசைக் கச்சேரி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்குச் சென்றுள்ளார். அப்போது திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலில் மயங்கி விழுந்துள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அளிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பாடகி ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் பாடகியின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாம்பே ஜெயஶ்ரீ
பாம்பே ஜெயஶ்ரீ

தற்போது மருத்துவமனையில் அவருக்கு கீ ஹோல் அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம் மற்றும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஜெயஶ்ரீயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாம்பே ஜெயஸ்ரீ வெள்ளிக்கிழமை மாலை லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லெனான் மையத்தில் உள்ள டங் ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.