ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்

ஆ.சரண்யா

காலேஜ் பொண்ணுங்க ஹார்ட்டோட ‘லப்டப்’பை ஹார்மோன்கள் எப்பவும் ஒரு ரிதத்தோடயேதான் வெச்சிருக்கும்; அவங்களுக்குப் பாடல்கள் மேல ரொம்ப ஈர்ப்பிருக்கும்.`உங்களுக்கு பிடிச்ச ஆண் பாடகர்கள் யாருப்பா..?’னு ஆவடி, பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொண்ணுங்ககிட்ட கேட்டோம். மியூஸிக்கல் ரிப்போர்ட் இங்கே...

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

காதல் தாலாட்டு... எங்க சாக்கோ பாய் - சித் ஸ்ரீராம்

‘`சித் ஸ்ரீராம் டார்லிங்கை பிடிக்க முக்கிய காரணம், அவரோட மெலோடியஸ் வாய்ஸ்தான். அவரு பாடின `என்னோடு நீ இருந்தால்’ பாட்டை எப்போ கேட்டாலும் என்னை அறியாம கண்ணுல நீர் வடியும்”னு கண்ணீ ரோட சொல்லிட்டுப் போனாங்க ஒரு ஃபேன் கேர்ள்.“ ‘கண்ணான கண்ணே’னு அவர் பாடினா குழந்தைக்குத் தாலாட்டு; ‘என்னடி மாயாவி நீ’னு அவர் பாடினா காதல் தாலாட்டு. அவர் பாடுற எல்லா பாடல்களும் கர்னாடக சங்கீத நோட்கள் டாப்பிங்ஸோட ஈர்க்கும். ‘ரொம்ப லெங்க்த்தா போகுது...’னு அதையே விமர்சனமா சொல்றவங்க சொல்லிக்கட்டும்... எங்களுக்கு அது பிடிச்சிருக்கு”னு நெகிழ்சியா சொன்னாங்க சிலர். “‘மறுவார்த்தை பேசாதே’, ‘தள்ளிப்போகாதே’னு குரல்லயே எக்ஸ்பிரஷன் ஸைக் கொட்டுற இவரோட பாடல்கள் சிங்கிள்ஸ் மனசுல ஏக்கத்தைக் கொடுக்கும்!”னு ஃபீலிங்ஸோட சொன்னாங்க இன்னொரு குரூப்.

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

அனிருத் - சிங்கராவும் இவரு ராக்ஸ்டார்!

‘மரணம்.. மாஸு மரணம்.. டஃப்பு தரணும்.. அதுக்கு அவன்தான் பொறந்துவரணும்’னு பாடிக்கிட்டே துள்ளலா ஒரு கூட்டம் வந்துச்சு. மெலடிக்கு ஒரு சிங்கர், குத்து பாட்டுக்கு இன்னொருத்தர், மோட்டிவேஷனல், செலிபிரேஷன் பாடல்கள்னு வெவ்வேறு ஜானருக்கு வெவ்வேறு குரல்கள் பொருந்தும் பலரும் நினைப்போம். ஆனா, ‘ஆல் ஏரியால ஐயா கில்லிடா’னு சொல்றமாதிரி எந்த ஜானர் பிளேலிஸ்ட் கேட்டாலும் அனிருத் குரல் ஆளும். ‘வாத்தி கம்மிங்’, ‘காத்திரு என்று நீ சொல்லிப் போனால் அதுவே போதும்... மறந்திடு என்று சொல்ல நேர்ந்தால் உயிரே போகும்’னு அவர் குரல்ல கேட்கும்போது மனசெல்லாம் ஏதேதோ பண்ணும். தீம் மியூஸிக்கைகூட ஹம் பண்ணி, அதை எங்களையும் ஹம் பண்ண வைக்க முடியும்னா, அது அனி ப்ரோவாலதான் முடியும். சென்னைக்காக அவர் பாடின ஆல்பம் சாங் ‘சான்ஸே இல்ல’... நம்ம தோள் மேல கைபோட்டுக்கிற தோஸ்து. அனி... எங்களுக்காகப் பிறந்தவரு!”னு ஒரு ‘ஜலபுலஜங்கு’ கேங் குதூகலிச்சாங்க.

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

பிரதீப் - குரலுக்கு நாங்க அடிமை!

‘`பிரதீப்புக்கு கேம்பஸ் பசங்க சார்பா அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துட்டோம்ங்க. ‘நீ கவிதைகளா’னு அவரு குரல்ல கேட்கும்போது, ‘யப்பா... என்னப்பா இந்த மனுஷன் இப்படி உயிரைக் கரைக்கிறாரு’னு தோணும். இப்போ இருக்க சிங்கர்ஸ்லயே தமிழோட அழகை சிதைக்காமல் நேர்த்தியா பாடுற பாடகர்கள்ல பிரதீப் ரொம்ப முக்கியமானவர். 2கே கிட்ஸ்ன்னாலே ரொம்ப கொண்டாட்டமான, கலர்ஃபுல்லான காதல் பாடல்களா கேட் போம்னுதான் எல்லாரும் நினைப்பீங்க. ஆனா, எங்களுக்கு ஆத்மார்த்தமா ஒரு காதல் பாடல் கேக்கணும்னா, அதுக்கு பிரதீப்குமார் பிளேலிஸ்ட்தான் ஃபேவரிட் சாய்ஸ். ‘இரவிங்கு தீவாய்’ பாட்டுல ‘மலை களின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்; வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்’னு வர்ற வரியை அவ்வளவு நெகிழ்ச்சியோட பாடியிருப்பாரு”னு அவரோட பாட்டுல ஊறிப்போன ஒரு ரசிகை சொன்னாங்க. ‘மாயநதி’, ‘ஆகாயம் தீ புடிச்சா', ‘பூ அவிழும் பொழுதில்’, ‘கண்ணம்மா கண்ணம்மா’னு பிரதீப் குரலைக் கேட்டா, மனசு தவிக்கும், மிதக்கும். அவரோட தனித்துவமான குரல்ல ஏதோ ஒண்ணு இருக்கும்!”னு கவித்துவமா பேசினாங்க பிரதீப் ஃபாலோவர்ஸ்.

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு - ‘ஹிப் ஹாப்’ ஆதி

“ஆதி அண்ணன்னாலே மொதல்ல எனக்கு ஞாபகம் வர்றது அவரோட எனர்ஜிதான். அதுலயும் அவரோட ராப் சாங்ஸ்லாம் கொலவெறி தெறியா இருக்கும். தமிழ்ல பெஸ்ட் ராப்பர் இவர்தான்”னு ஃபயரா பேசினாங்க கேர்ள்ஸ். “அவரோட ‘வாடி புள்ள வாடி’ ஆல்பம் அப்போவே வைரலாகி `யூத் ஆன்தம்’ ஆகிடுச்சு. லவ் ஃபெயிலியர் பாய்ஸ், கேர்ள்ஸ் எல்லாரோட பிளேலிஸ்ட்லயும் அந்தப் பாட்டுத்தான் ரிப்பீட் மோடுல போகும்”னு எமோஷனலா சொன்னாங்க ஒரு ஆதி ஃபேன். “நடுத்தர குடும்பப் பையன், பெருசா சினிமா பின்னணியும் இல்லை... இந்தச் சூழல்ல, திறமையை மட்டுமே நம்பி வந்து இன்னிக்கு அவரு அடைஞ்சிருக்க இடமும் அவரோட பாட்டு மாதிரியே எங்களுக்கு மிகப்பெரிய மோட்டிவேஷனா இருக்கு” - ஆதி ஆர்மி நெகிழ்ச்சியோட சொல்லுது. “பாரதியாரை மோட்டோவா வெச்சு பாடுவாரு பாருங்க... அது எங்கள மாதிரி 2கே கிட்ஸுக்கு அவ்ளோ உத்வேகமா இருக்கும். இண்டிபென்டன்ட் மியூஸிக்கையும், இண்டிபென்டன்ட் மியூஸிக்ல ஜெயிக்கலாம்ங்கிறதையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த யூத் தமிழன் எங்க ஆதி அண்ணா!”னு ‘மீசைய முறுக்கு’ போஸ்ல சொன்னாங்க நம்ம கேர்ள்ஸ்.

2K kids: ‘எங்க பிளேலிஸ்ட்ல யார் குரல்கள்..?!’ - கேம்பஸ் ரிப்போர்ட்

‘தெருக்குரல்’ - அறிவு

“பாடல்கள்னு சொன்னாலே பெரும்பாலும் அது பொழுது போக்குக்காகத்தான்னு இருந்து வர்ற சூழல்ல, அதோட சேர்த்து சமூகக் கருத்தையும் சொல்லி ‘வாத்தி ரெய்டு’ காட்டினாரு நம்ம அறிவு. மாஸ் ஹீரோக்களுக்கு மாஸா பாட்டு எழுதி, அதுல சிலதை அவரே பாடினு, `பருந்தா மாறின ஊர்க்குருவி’ அவரு. ‘அண்ணாத்த’, ‘மாநாடு’னு தீம் மியூஸிக் பாடல்கள்ல தீ பறக்க விட்டாரு’’னு மாஸா சொன்னாங்க அறிவு ஃபேன்ஸ். “உள்ளூர்ல மட்டுமே தெரிஞ்சவரு ‘என்ஜாயி என்ஜாமி’ பாடல் மூலமா வேர்ல்டு லெவல்ல ஃபேமஸானாரு. இண்டிபென்டன்ட் ஆல்பம் சாங்ஸ் மூலமாக அரசியலையும் மக்கள் வாழ்வியலையும் கலந்து தனி ரோடு போட்டுக்கிட்டு இருக்காரு. இது அவரோட ஆரம்பம்தான். மெயின் பிக்சர் இனிமேதான்”னு கூஸ்பம்ஸோட சொல்லிட்டுப் போனாங்க கேர்ள்ஸ்.