Published:Updated:

``இமான், சந்தோஷ், ஜி.வி.பிரகாஷ்லாம் சேர்ந்திருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்!'' - ஜிப்ரான்

யூடியூபில் இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தப் பாடலின் வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். பாடலை உருவாக்கிய இளம் இசைக்கலைஞன் ஜிப்ரானிடம் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜிப்ரான் இசையில் கமல்ஹாசனுடன் இணைந்து 49 பாடகர்கள் பாடிய `அன்பும் அறிவும்' பாடல் செம ஹிட். யூ-ட்யூபில் இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பாடலின் வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். பாடலை உருவாக்கிய இளம் இசைக்கலைஞன் ஜிப்ரானிடம் பேசினோம்.

''முழுக்க முழுக்க கமல் சார்னாலதான் இது சாத்தியமாச்சு. இப்படியொரு பாட்டு பண்ணலாம்னு சார்தான் சொன்னார். ரெண்டு பேரும் சும்மா போன்ல பேசிட்டிருந்தப்ப, `ஒரு விழிப்புணர்வு பாட்டு பண்ணலாமா'னு கேட்டார். `ஓகே சார் பண்ணலாம்'னு சொன்னேன். உடனே பாட்டு எழுதி அனுப்பி வெச்சார். முதல்ல அதுக்கு ட்யூன் போட்டேன். அவருக்கு ஏதோ செட்டாகாத ஃபீல் வந்திருக்கும் போல. அதனால, `ஏதோ ரெஸ்ட்ரிக்ட் பண்ற மாதிரி இருக்கு. அதனால நீங்க டியூன் போட்டு அனுப்புங்க. அதுக்கு நான் பாட்டு எழுதுறேன்'னு சொன்னார். சரினு சொல்லிட்டு ட்யூன் அனுப்பி வெச்சேன். 'ரெண்டு நாளைக்கு அப்புறம் பேசுவோம்'னு சொன்னார்.

இதுல, பாம்பே ஜெயஶ்ரீ, அனிருத், யுவன், ஆண்ட்ரியா, சித்தார்த், ஶ்ரீத் ஶ்ரீராம், தேவி ஶ்ரீ பிரசாத், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பிக் பாஸ் முகேன் போன்றவர்களோட சேர்ந்து நானும் பாடியிருக்கேன்.
ஜிப்ரான்
`சம்பளமும் இல்லை; வேலையும் இல்லை!' -நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியவரின் வேதனை

"ரெண்டு நாள்னு சொன்னவர், ரெண்டு மணிநேரத்துல பாட்டு வரிகளை அனுப்பிட்டார். இந்த விஷயத்தை முதல்ல ஆரம்பிச்சப்போ எனக்கும், சாருக்கும் இவ்வளவு பெரிய டீமை உள்ள கொண்டு வருவோம்னு தெரியாது. ஏன்னா, மூன்றாவது உலகப் போர்ல இருக்குற மாதிரிதான் நாம எல்லாரும் இப்ப இருக்கோம். பெரிய சிக்கலாதான் எல்லாமே போயிக்கிட்டு இருக்கு. பெருசா சிலருக்கு எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா, வெளியே போனா எது வேணும்னாலும் நடக்கலாம்னு போயிட்டு இருக்கு. சொல்லப்போனா, கொரோனாவுக்கு முன்னாடி மற்றும் கொரோனாவுக்கு பின்னாடினு ரெண்டா உலகத்தை பிரிக்கலாம் போல. இந்த சூழல்ல புதுசா உருவாகப் போற உலகத்துக்காக அன்புதான் பிரதானம் அப்படிங்குற விஷயத்தை கையில எடுத்துட்டு இந்தப் பாட்டை உருவாக்கினோம். சமூகவிலகல் காரணமா எல்லாரும் தனிச்சிருந்தாலும் உள்ளத்தால ஒண்ணா இருக்கணும்னு நினைச்சி இதைப் பண்ணோம்.

ஜிப்ரான்
ஜிப்ரான்

இந்தப் பாட்டுல எங்கேயும் கொரோனாங்குற வார்த்தை இடம் பிடிச்சிருக்காது. இதுல, பாம்பே ஜெயஶ்ரீ, அனிருத், யுவன், ஆண்ட்ரியா, சித்தார்த், ஶ்ரீத் ஶ்ரீராம், தேவி ஶ்ரீ பிரசாத், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பிக் பாஸ் முகேன் போன்றவர்களோட சேர்ந்து நானும் பாடியிருக்கேன். இவங்ககூட லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிச்சு இருக்கார். இடையில ஒரு கோரஸ் செக்‌ஷன் வரும். இதுல நூறு பேர் பாடுனா எப்படியிருக்கும்னு நானும், கமல் சாரும் யோசிச்சோம். இதை எப்படி சாத்தியம் ஆக்குறதுனு தெரியல. சமூகவிலகல் காரணமா கோரஸ் செக்‌ஷன் ரெக்கார்ட் எப்படி பண்றதுனு தெரியல. அதனால, என்னோட சோஷியல் மீடியால, 'வீட்டுல ஸ்டூடியோ செட்அப் பண்ணி வெச்சிருக்குற சிங்கர்ஸ் யாராவது இருக்கீங்களா'னு கேட்டு போஸ்ட் போட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுக்கு கனடா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன்னு உலக முழுக்க இருந்து ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இதுல 37 பேரை செலக்ட் பண்ணேன். இவங்க எல்லாரும் சேர்ந்து கோரஸ் பாடியிருக்காங்க. முதல்ல, நானொரு டம்மி ட்ராக் பாடி எங்க 12 சிங்கர்ஸூக்கும் அனுப்பி வெச்சிருவேன். அப்புறம் 37 பேருக்கும் நான் பேசுன வீடியோ அனுப்புவேன். அதுல எந்த மாதிரியான ஃபீல்-ல இந்த ட்ராக் இருக்கணும்னு சொல்லுவேன்.

ப்ளாங்கட் சேலஞ்ச் சமீரா; விர்ச்சுவல் சேலஞ்ச் ஆண்ட்ரியா! - சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது?

ஏன்னா, ஸ்டுடியோவுல ரெக்கார்ட் பண்ணுனா என்னால எல்லாத்தையும் ஒருங்கிணைக்க முடியும். எப்படியிருக்கணும்னு முகத்தை பார்த்து சொல்லித் தரமுடியும். ஆனா, ஆன்லைன்ல கொஞ்சம் கஷ்டம். அதனால, இவங்க எல்லார்கிட்ட இருந்தும் கோரஸ் செக்‌ஷன் வாங்கி எடிட் பண்ணி முழுமையா உருவாக்க கொஞ்சம் சிரமமா இருந்தது. இருந்தாலும் ரொம்ப லவ் பண்ணி, ரசிச்சு இதைப் பண்ணேன். இதெல்லாம் ஒரு பத்து நாள்ல முடிச்சிட்டோம். மியூசிக் டைரக்டர்ஸ் நிறையப் பேர் வீட்டுல ஸ்டுடியோ வெச்சிருந்ததனால சுலபமா அனுப்ப முடிஞ்சது. சிலர் மொபைல் போன்ல பாடி அனுப்பி வெச்சாங்க. எல்லாத்தையும் சரியா சின்க் பண்ணி, எடிட் பண்ணுனோம்.

இடையில நம்ம சிங்கர்ஸ் யாரும் ஒரு கான்ஃபிரென்ஸ் போன்கால்லகூட பேசிக்கல. எல்லார்கிட்டயும் தனித்தனியா நான்தான் பேசியிருப்பேன். இதுல கொஞ்சம் சிரமமா இருந்த விஷயம் பாட்டு வரிகள் கொஞ்சமாதான் இருக்கும். இதை 49 பேருக்கும் பிரிச்சுக் கொடுக்குறது கஷ்டம். ஏன்னா, எல்லாருமே பெரிய ஆளுங்க. ஒருத்தரைவிட மத்தவங்களுக்கு வரிகள் அதிகமா இல்லை குறைவா இருந்தாலும் சங்கடமா இருக்கும். யாரும் வருத்தப்படக் கூடாதுனு கவனமா இருந்தோம். இவ்வளவு பெரிய லெஜன்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, அவங்க அவங்க வீட்டுக்குள்ள இருந்தே இதை உருவாக்கினோம்.

அறிவும் அன்பும்
அறிவும் அன்பும்

இதுல நிறைய அனுபவம் கிடைச்சது. ஒரு பெரிய சினிமா பாட்டுக்கு பண்ற எல்லா விஷயத்தையும் இதுல பண்ணியிருக்கோம். மாறிட்டு இருக்குற ஆன்லைன் உலகத்துக்கு ஏத்த மாதிரி இருந்தது. இக்கட்டான சூழல்லயும் வேலை செய்ய கத்துக் கொடுத்திருக்கு. இனி வாழப் போற புதிய உலகத்துக்கு நல்ல விஷயமா இந்தப் பாட்டு இருக்கும். ஆனா, ஒரு சின்ன வருத்தமும் இருக்கு. என்னனா, இதுல நம்ம சந்தோஷ் நாராயணன், இமான், ஜி.வி. இவங்க எல்லாரும் இருக்கணும்னு நினைச்சோம். அப்போ, சந்தோஷ் சாருக்கு உடம்பு சரியில்லமா போயிருச்சு. இமான் சார் மனைவிக்கு உடம்பு சரியில்லாம இருந்தது. சைந்தவிக்கு பிரசவத்துக்கான நேரம். அதனால ஜி.வினால கலந்துக்க முடியல'' என்றார் ஜிப்ரான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு