Published:Updated:

``தமிழுக்குத்தான் இலக்கணம் இருக்கு, கானாவுக்கு இல்லை!” - ‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய் பேட்டி!

‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்

“நான் பெரும்பாலும் சூழலுக்கு ஏற்ற கானா தான் பாடுவேன்... டெக்னிக்கல் வார்த்தைகள் பயன்படுத்த நினைப்பேன், மத்தவங்களவிட மாறுபட்டு இருக்கனும்ன்னு நினைப்பேன்."

``தமிழுக்குத்தான் இலக்கணம் இருக்கு, கானாவுக்கு இல்லை!” - ‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய் பேட்டி!

“நான் பெரும்பாலும் சூழலுக்கு ஏற்ற கானா தான் பாடுவேன்... டெக்னிக்கல் வார்த்தைகள் பயன்படுத்த நினைப்பேன், மத்தவங்களவிட மாறுபட்டு இருக்கனும்ன்னு நினைப்பேன்."

Published:Updated:
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்
வடசென்னை என்றால் நம்மில் பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது கானா தான். இப்போது திரைப்படங்களிலும் தவறாமல் இடம்பெறத் தொடங்கிவிட்ட கானா, கேட்பவர்களைத் தாளமிடச் செய்து மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கிறது. கானா பாடல்கள் மூலம் ட்ரெண்ட் ஆகிறவர்களுக்கு மத்தியில், பெயரிலேயே ‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய் தன்னுடைய பெயரில் இருந்தே ‘ட்ரெண்டிங்’ஐத் தொடங்கியிருக்கிறார்.
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்

“அதென்ன ‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்?”

“காலேஜ் படிக்கும்போது பஸ்ல ரூட் அடிச்சுட்டுப் பாடிட்டு போவேன். அப்புறம் ஜல்லிகட்டு, நீட்ன்னு முக்கியப் பிரச்னைகள் சம்பந்தமா கானா பாட்டு எழுதி அதை சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணோம். அதுக்கு நாங்க எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்துச்சு. அதுக்கு அப்பறம், சமூகத்துல ட்ரெண்ட் ஆகிற விஷயங்களை மையப்படுத்தி பாட்டு கம்போஸ் பண்ண ஆரம்பிச்சோம்... அதுக்காக நாங்க ஆரம்பிச்ச குழுவுக்குப் பேருதான் ‘ட்ரெண்ட் கானா டீம்’. அதுவே என் பேரோட ஒட்டிக்கிச்சு. ‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்ன்னு லேபில் ஆகிருச்சு” - அட்டகாசமாகச் சிரிக்கிறார் சஞ்சய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.பி.ஏ. முடித்திருக்கும் சஞ்சய், ஐ.டி. கம்பெனி ஒன்றில் இப்போது பணியாற்றுகிறார். கானா மீது சிறுவயதில் ஏற்பட்ட ஆர்வம், இன்று பெயரோடு கானாவைச் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அம்மா லட்சுமி, அப்பா முரளி, தம்பி விஜய் - மூவரும் தான் இவரது கானா ஈடுபாட்டுக்குத் துணை.

‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்

“நாங்க நடுத்தரக் குடும்பம் தான். அப்பா, அம்மா என்னையும் என் தம்பியையும் நல்லா படிக்க வச்சாங்க. நாங்க இப்ப வேலைக்கு வந்துட்டோம். அதனால குடும்பச் சூழல் முன்னவிட இப்ப ரொம்ப மேம்பட்டிருக்கு. கானா என்னோட பெருங்கனவு... புரட்சிகரமான கருத்துக்கள கானா மூலமா மக்களுக்குக் கொண்டுபோறதுதான் என்னோட நோக்கம். நான் இப்போ அததான் செஞ்சிட்டு இருக்கேன். நான் என்னோட கனவைப் பின்தொடர்றதுக்கு என் குடும்பம் தான் காரணம்,” சஞ்சய் முகம் பெருமையில் விரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கானாவும் ஒரு கலை வடிவம்தான். வடசென்னையில கானா ரொம்பப் பிரபலம். பெரிய விஷயத்த உரையாடல் மூலமா கொண்டுபோய் சேர்ப்பது கஷ்டம். ஆனா அதோட மையக் கருத்தை மட்டும் எடுத்துட்டு ரெண்டு நிமிஷப் பாடலா மக்கள்ட்ட சுலபமாக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். அந்த மாதிரிதான் கானாவும். தமிழுக்கு இலக்கணம் இருக்கு. கானா தமிழ்ல தான் பாடறோம். ஆனா, கானாவுக்குன்னு தனியா எந்த இலக்கணமும் இல்லை. இரங்கல் கானா, புரட்சி கானா, நண்பர்களோட ஜாலியாக பாடும் சந்தோஷ கானான்னு இதுல பல வகைகள் இருக்கு....,” என்று கானாவின் பிண்ணனியை விளக்குகிறார் சஞ்சய்.

‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்

“நான் பெரும்பாலும் சூழலுக்கு ஏற்ற கானா தான் பாடுவேன்... டெக்னிக்கல் வார்த்தைகள் பயன்படுத்த நினைப்பேன், மத்தவங்களவிட மாறுபட்டு இருக்கனும்ன்னு நினைப்பேன். நாம பொதுவா ஏதாவது பேசும்போது கேலியா தான் தொடங்குவோம். அதுக்குன்னு ஒரு எல்லை கோடு இருக்கு. அதை எப்பவும் தாண்டக்கூடாது. கானாவுலயும் அப்படித் தான். எதைப் பத்தி பேசறமோ அதை நாம கேலி பேசுவோம். ரொம்பக் கருத்தா போனா கேட்க நல்லா இருக்காது. அதுக்காக கேலியை பயன்படுத்திக்கறோம்,” என்கிறார்.

சினிமாவில் கானா தொடர்ச்சியாக இடம்பெறத் தொடங்கியிருப்பது குறித்துப் பேசும்போது, “கானாவுக்கு இப்போ நிறைய அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கானாவை இப்போ மக்கள் அதிகம் விரும்புறாங்க. ஒரு ஆல்பம் பாட்டு 5 லட்சம் செலவுல எடுத்தாலும் 10 லட்சம் வீயூஸோட நின்னுடுது. ஆனா நாங்க பத்தாயிரம் ரூபாயில எடுக்கற கானா பாட்டுக்கு மில்லியன் வியூஸ் கிடைக்குது. இதனால்கூட சினிமால கானா பாட்டை விரும்பி வைக்கறாங்கன்னு நினைக்கிறேன்,” என்கிறார்.

‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்
‘ட்ரெண்ட்’ கானா சஞ்சய்

“நார்த் மெட்ராஸ்னாலே படிக்காத, முரட்டுப் பசங்கங்கிற மனநிலை இன்னனும் நிலவுது. நான் இப்போ ரெண்டு டிகிரி முடிச்சிட்டு ஐ.டி-ல வேலை பார்க்கிறேன். எங்க அப்பா, அம்மா படிக்கல தான். ஆனா, பசங்க நாங்க எல்லாம் படிச்சு அடுத்த நிலைக்கு போயிட்டு இருக்கோம். நிச்சயம் வளர்ந்திருக்கோம்... வளர்ந்திட்டு இருக்கோம். காலேஜ் முடிச்சுட்டு கேம்பஸ்ல எனக்கு வேலை கிடைச்ச டைம்ல, இப்போ இருக்கற மாதிரி கானாவுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. அப்போ யாரும் கச்சேரிக்கும் கூப்பிடல. அப்போ ஜாலிக்காக பாடுவேன். இப்போ வேலையும் பார்க்கிறேன், கானாவும் பாடுறேன்!” சஞ்சயின் வார்த்தைகளில் நம்பிக்கை தெறிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism