Published:Updated:

ரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து!

வித்யாசாகர்
பிரீமியம் ஸ்டோரி
வித்யாசாகர்

15 வருடங்கள் இசைக்கலைஞராக, 30 வருடங்கள் இசையமைப்பாளராக என இசைத்துறையில் 45 ஆண்டுகளாகப் பயணித்துவருகிறார், வித்யாசாகர்.

ரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து!

15 வருடங்கள் இசைக்கலைஞராக, 30 வருடங்கள் இசையமைப்பாளராக என இசைத்துறையில் 45 ஆண்டுகளாகப் பயணித்துவருகிறார், வித்யாசாகர்.

Published:Updated:
வித்யாசாகர்
பிரீமியம் ஸ்டோரி
வித்யாசாகர்

ந்த இசைப் பயணத்தைப் பற்றி அவரிடம் பேசப் பல விஷயங்கள் இருக்கின்றன. பல மெல்லிசைப் பாடல்களைப் பதிவு செய்த, அவரது தி.நகர் ஸ்டூடியோவில் சந்தித்துப் பேசினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`முதல் பட வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘`1975-ல இருந்து நான் பல இசையமைப்பாளர்களுக்கு கிட்டார், கீபோர்டுன்னு இசைக்கருவிகள் வாசிச்சிருக்கேன். `கிழக்கே போகும் ரயில்’தான் நான் இசைக்கலைஞரா வாசிச்ச முதல் படம். அப்போ எனக்கு 12 வயசு இருக்கும். அப்படி ஒரு நாள் இரட்டையர்கள் ராபர்ட் ராஜசேகர் இயக்கிய `பாலைவனச்சோலை’ படத்துல நான் வாசிச்சேன். அப்போ எனக்கும் அவங்களுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. நான்தான் அந்த இசைக்குழுவிலேயே சின்னப் பையனா இருப்பேன். அதனால, என்கிட்ட நிறைய பேசிட்டிருப்பாங்க. அப்போதுல இருந்து தொடர்ந்த எங்க நட்பு, அவர்களோட `பறவைகள் பலவிதம்’ படத்துல பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்கப்புறம் ராபர்ட்டும் ராஜசேகரும் பிரிஞ்சு தனித்தனியா படங்கள் பண்ணுனாங்க. அந்தப் படங்களுக்கும் நான்தான் இசையமைச்சேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘` ‘ஜெய்ஹிந்த்’ தான் உங்களைப் பிரபலமாக்கிய படம்... அதைப்பற்றிச் சொல்லுங்க?’’

``தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு இண்டஸ்ட்ரிக்குள்ள போயிட்டேன். என்னை மீண்டும் தமிழுக்குள் கொண்டுவந்த படம்தான் ‘ஜெய்ஹிந்த்.’ இந்தப் படத்துக்காக முதல்ல கம்போஸிங்ல உட்கார்ந்தப்போ ஒரு வாரமாகியும் எந்த ட்யூனும் வரலை. நான் எப்போதுமே ரொம்ப வேகமா கம்போஸ் பண்ற ஆள். ஒரு வாரம் உட்கார்ந்து ஒரு பாட்டுகூட வராம இருந்ததே இல்லை. அப்போ அர்ஜுன்கிட்ட, ‘இந்த இடம் சரியில்லை. ஏதோ நெகட்டிவா தோணுது. நாம வேற இடத்துக்கு கம்போஸிங்கை மாத்திடலாம்’னு சொன்னேன். அவரும் அடுத்த நாளே வேற இடத்துல கம்போஸிங் வெச்சார். ஒன்றரை மணி நேரத்துல அந்தப் படத்தோட மொத்தப் பாடல்களையும் கம்போஸ் பண்ணிட்டேன்.

ரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து!

`கர்ணா’ படத்துல மறுபடியும் இதே கூட்டணி அமைஞ்சது. அந்தப் படத்துலேயும் எல்லாப் பாடல்களும் நல்ல ஹிட். குறிப்பா `மலரே மெளனமா’ பாட்டு இன்னைக்கு வரைக்கும் பேசப்படுது. முதலில் இந்தப் பாட்டை நான் ஒரு தெலுங்குப் படத்துக்காக கம்போஸ் பண்ணிக் கொடுத்தேன். அந்தப் படத்துல இந்தப் பாட்டை சரியாப் பயன்படுத்தலை. அவங்க பண்ணியிருந்த விஷூவல்ஸ் எதுவுமே எனக்குப் பிடிக்கலை. அப்பவே, இந்தப் பாட்டைத் தமிழுக்கு யூஸ் பண்ணணும்னு நினைச்சிருந்தேன். `ஜெய்ஹிந்த்’ பண்ணும்போதும், அர்ஜுன்கிட்ட இந்தப் பாட்டைப் பாடிக் காட்டினேன். `இந்தப் படத்துல இவ்வளவு மெதுவான பாட்டு வேணாம். நாம அடுத்த படத்துல யூஸ் பண்ணிக்கலாம்’னு சொன்னார். அதே மாதிரி `கர்ணா’ படத்தோட கம்போஸிங்ல உட்காரும்போதே, `அந்தப் பாட்டை எடுங்க. இதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்’னு சொல்லிட்டார்.

பாலு சாரும், ஜானகி அம்மாவும் இந்தப் பாடலைப் பாடி முடிச்சிட்டு, ‘இந்தப் பாட்டு குறிஞ்சிப்பூ மாதிரி. எப்போதாவதுதான் இப்படி ஒரு பாட்டு வரும். காலத்துக்கும் இந்தப் பாட்டு அழியாது. இதைப் படமாக்கும்போது, தயவுசெய்து சுமாரா எடுத்துடாதீங்க. எப்போ பார்த்தாலும் அந்தப் பாட்டு அழகா இருக்கிறமாதிரி படமாக்குங்க’ன்னு இயக்குநர்கிட்ட சொன்னாங்க. அவரும் அதே மாதிரி படமாக்கினார்.’’

‘`பெரும்பாலும் பல முன்னணி இயக்குநர்களுடைய முதல் படத்துக்கு நீங்கள்தான் இசையமைத்திருக்கிறீர்கள். அவர்களோடு வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?’’

``சுந்தர்.சி, தரணி, கரு.பழனியப்பன், ரமணா, விக்ரம் குமார்னு பல இயக்குநர்களோடு முதல் படத்தில் நான் வேலை பார்த்திருக்கேன். எந்த இயக்குநரா இருந்தாலும் முதல் படத்தில் தன்னுடைய முழு எனர்ஜியையும் கொட்டுவார். அந்த எனர்ஜியோடு நாமளும் ட்ராவல் ஆகணும்னுதான், அறிமுக இயக்குநர்களோடு அதிகம் வேலை பார்த்திருக்கேன். அதே சமயம், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், பாரதிராஜான்னு பெரிய இயக்குநர்களோடும் வேலை பார்த்திருக்கேன். கே.பாலசந்தர் சாரோடு `பொய்’ படத்தில் வேலை பார்த்தேன். இதுதான் அவர் இயக்கிய கடைசிப் படம். பாரதிராஜா சாரோட `பசும்பொன்’ படத்தில் வேலை பார்த்தேன். கலைஞர்களை மதிக்கத் தெரிஞ்சவர் அவர். சிவாஜி சாரோட `பூப்பறிக்க வருகிறோம்’ படத்துக்கும் இசையமைத்திருந்தேன். அவரோட வேலை பார்த்ததை நினைக்கிறேன்.’’

ரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து!

‘`ரஜினி, கமல், விஜய், அஜித்னு பல முன்னணி நடிகர்களின் கரியரில் மிக முக்கியமான படங்களுக்கு நீங்கள் இசையமைத்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

``ஸ்ரீதர் சார் இயக்கிய `இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் நான் ஆர்கெஸ்ட்ராவில் வாசிச்சிருக்கேன். அப்போ ஸ்ரீதர் சாரோட உதவி இயக்குநர்தான்

பி.வாசு. அப்போதிருந்து நாங்க பழக ஆரம்பிச்சோம். ஒரு தமிழ்ப் படத்தில் இருந்த தெலுங்குப் பாடலுக்கு மக்கள் அவ்வளவு பெரிய வரவேற்பைக் கொடுத்தாங்க. சின்னக் குழந்தை வரைக்கும் சந்திரமுகி படத்தின் `ரா ரா...’ பாட்டு ரீச்சாச்சு.

எப்படி எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜானகி குரல்களை 25 வருஷத்துக்கும் மேலாகக் கேட்டுட்டிருக்கோம். அது இப்போ குறைஞ்சிட்டு வருதோன்னு தோணுது.’’

கமல் சாரோடு `அன்பே சிவம்’ படத்தில் வேலை பார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது. அஜித்துக்குப் பல படங்களில் இசையமைச்சிருக்கேன். அதில் `பூவெல்லாம் உன் வாசம்’ ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதே மாதிரி விஜய்க்கு `கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்திலிருந்து `காவலன்’ படம் வரைக்கும் பல படங்கள் பண்ணியிருக்கேன். அதில் `கில்லி’ இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியாது.’’

‘`தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் இளம் இசையமைப்பாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

``ஆல்ரெடி பண்ணின ஒரு விஷயத்தையே திரும்ப, திரும்பப் பண்ணிட்டிருக்காங்க. ‘இதுதான் என் ஸ்டைல்’னு அதுக்கு ஒரு பெயரையும் வெச்சுக்கிட்டாங்க. ஒரே விஷயத்தைத் திரும்ப, திரும்பப் பண்ணும்போது ரெண்டு, மூணு முறை மக்கள் விரும்பிக் கேட்பாங்க. அதுக்கப்புறம் இவங்களுக்கு `இதுதான் வரும்போல’ன்னு கலாய்க்க ஆரம்பிச்சிடுவாங்க. 20, 30 வருஷங்கள் கழிச்சும் கேட்கிற மாதிரியான பாடல்கள் இப்போது வரதில்லைன்னு நினைக்கிறேன். அதே மாதிரி பாடகர்களிலும் எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜானகி, சித்ரா, மனோ, சொர்ணலதா எனப் பல பாடகர்களின் குரல்களில் ஒரு தனித்தன்மை இருந்தது. ஆனால், இப்போதிருக்கும் பாடகர்களில் ஒரு சிலரின் குரல்களுக்குத்தான் தனித்தன்மை இருக்குன்னு சொல்றாங்க. அவர்களும் ஒரே ஸ்டைல் பாடல்களைத்தான் பாடிட்டிருக்காங்க. அப்படி ஒரே ஸ்டைலுக்குள் அடைபட்டு இருக்கும்போது, அந்தக் குரல்களைச் சில வருஷங்களுக்கு மேல கேட்க முடியாது. எப்படி எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜானகி குரல்களை 25 வருஷத்துக்கும் மேலாகக் கேட்டுட்டிருக்கோம். அது இப்போ குறைஞ்சிட்டுவருதோன்னு தோணுது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism