பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்!”

Sid Sriram
பிரீமியம் ஸ்டோரி
News
Sid Sriram

‘`சித்கிட்ட இருந்து இப்படியொரு பரிமாணத்தை யாரும் எதிர்பார்க்கலையே?’’

ரு ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருக்கும்போது சித் ஸ்ரீராம் பாடும் பாடல் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தால், நிச்சயம் மெய்மறந்து விடுவோம். உருகுவது நாம் வாங்கி வைத்திருக்கும் ஐஸ்க்ரீமா, இல்லை சித்தின் குரலா என்பதெல்லாம் தெரியாத வண்ணம் நம்மை இசையில் கட்டிப்போட்டிருப்பார்.

மணிரத்னம் எழுதி தயாரிக்கும், இயக்குநர் தனசேகரின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.

‘`சித்கிட்ட இருந்து இப்படியொரு பரிமாணத்தை யாரும் எதிர்பார்க்கலையே?’’

“இசையமைப்பாளர் ஆகணும்கிறது என் நீண்ட நாள் கனவு. ஆனா, இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைக்கவேயில்லை. கொஞ்ச காலம் போகட்டும்னுதான் இருந்தேன். அந்தச் சமயத்துலதான் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ல இருந்து அழைப்பு வந்தது. இந்த வாய்ப்பு சரியான நேரத்துல வந்ததா நான் நம்புறேன். அதனால, உடனே இசையமைக்க ஓகே சொல்லிட்டேன்.’’

சித் ஸ்ரீராம்.
சித் ஸ்ரீராம்.

‘`பாடகர் சித், இசையமைப்பாளர் சித்தா மாறும்போது என்ன மாதிரி தயார் செஞ்சுக்க வேண்டியிருந்தது?’’

‘`பாடகர் சித், இசையமைப்பாளர் சித்தெல்லாம் இங்க கிடையாது. ஒரே ஒரு சித் மட்டும்தான். அவனுக்கு இசை மட்டும்தான் தெரியும். அந்த இசை வெவ்வேறு வடிவத்துல வெளிப்படும்.’’

“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்!”

‘` ‘மறுவார்த்தை பேசாதே’ பாட்டு வெளியாகி 1,000 நாள்களுக்கு மேல் ஆகிடுச்சு. சமீபத்துல ஒரு பேட்டியில பேசும்போது அந்தப் பாட்டுதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் இன்னும் உயிர்ப்போட இருக்கக் காரணம்னு கெளதம் மேனன் சொல்லியிருந்தார்... என்ன நினைக்கிறீங்க?’’

“அந்தப் பாட்டு உருவான சமயத்துலயே அது ஸ்பெஷலா வரப்போகுதுனு என்னால உணர முடிஞ்சது. நிறைய கச்சேரிகள்ல பாடிக்கிட்டு இருந்த சமயம் அது. அப்போ கெளதம் சார் கூப்பிட்டு இந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னார். இசையமைப்பாளர் தர்புகா சிவாவுக்கும் கெளதம் மேனன் சாருக்கும் ஒரு சில வரிகள் பாடிக்காட்டினேன். அவங்களுக்குப் பிடிக்கவும் உடனே ரெக்கார்டிங் போய்ட்டோம். தாமரை, சிவா, கெளதம் மூணுபேரும் சேர்ந்து உருவாக்குன மேஜிக் அந்தப் பாட்டு.’’

“மணிரத்னத்துடன் வேலைபார்க்கும்போது, அவர் மனசுல நினைக்கிற மாதிரி ட்யூன் வரும்வரைக்கும் விட மாட்டார்னு சொல்வாங்க. உங்க அனுபவம் எப்படி?’’

“அவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா படைப்பாளிகளுமே அப்படித்தான். ஆனா நமக்கு அந்தச் சூழலுக்குள்ள என்ன சுதந்திரம் கொடுக்குறாங்கன்னு பார்க்கணும். அந்த விதத்துல மணிரத்னம் சாரும் தனசேகரனும் இந்தப் படத்துக்கான இசையை வாங்குறதுல எடுத்துக்கிட்ட மெனக்கெடல் ரொம்பவே அதிகம். அதுக்காக எனக்கு அவங்க தந்த படைப்புச் சுதந்திரம், புதிய முயற்சிக்குத் தரப்பட்ட நேரம், இடம் எல்லாமே குறிப்பிடத்தகுந்தது.’’

“இசையமைப்பாளரா ஒரு பாட்டை ரீமிக்ஸ் பண்ணணும்னா எந்தப் பாட்டை ரீமிக்ஸ் பண்ணி நீங்களே பாடுவீங்க?’’

“எனக்கு ரீமிக்ஸ் பண்றதுலயோ, ரீமிக்ஸ் பாட்டைப் பாடுறதுலயோ பெரிய உடன் பாடில்லை. ஆனா நிச்சயம் பழைய பாடல்களைப் பாடணும்னு ஆசை இருக்கு. குறிப்பா ‘கர்ணன்’ படத்தோட ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாட்டை மீண்டும் பாடணும்னு ஆசை இருக்கு. கூடிய சீக்கிரம் ஒரு மேடையில் பாடுவேன்.’’