Published:Updated:

`திருப்பாச்சி' முதல் `தாராள பிரபு' வரை... - வெவ்வேறு இசையமைப்பாளர்கள் ஒன்றாக இணைந்த படங்கள்!

இசையமைப்பாளர்கள்
இசையமைப்பாளர்கள்

கடந்த 20 வருடங்களில் எந்தெந்த படங்களில் இது போன்று பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

ஆந்தாலஜி படம், பல இயக்குநர்கள் ஒரே படத்தில் சேர்வது எனப் பல புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், பல இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒன்றிணைவது அந்தப் படத்தின் கதைக்கும் பாடல்களுக்கும் கூடுதல் சிறப்பு.

Srinivas - Anirudh
Srinivas - Anirudh

இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்துள்ள படம் `தாராளபிரபு’. 8 இசையமைப்பாளர்கள் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள் என அப்டேட் தந்திருக்கிறது படக்குழு. அந்த வகையில் கடந்த 20 வருடங்களில் எந்தெந்த படங்களில் இது போன்று பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

ஏய், நீ ரொம்ப அழகா இருக்க!

ஏய், நீ ரொம்ப அழகா இருக்க!
ஏய், நீ ரொம்ப அழகா இருக்க!

முக்கோணக்காதல் கதையைக் கலகலப்பாகவும் ரசிக்கும்படியாகவும் படமாக்கியிருப்பார் இயக்குநர் வசந்த். ஷியாம், சினேகா, விவேக் நடிப்பில் ரொமான்டிக் ஜானரில் வெளிவந்த இந்தப் படம், 90’ஸ் கிட்ஸ்ஸின் நாஸ்டால்ஜியா! பொதுவாக, தன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் வசந்த், இந்தப் படத்தில் பல இசையமைப்பாளர்களைப் புகுத்தியிருந்தார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் தனித்தனி இசையமைப்பாளர்கள், பின்னணி இசைக்குத் தனி இசையமைப்பாளர் எனப் படம் ரசிகர்களுக்கு ஒரு மியூசிக்கல் ட்ரீட்டாக அமைந்தது.

அதுவரை பின்னணிப் பாடகராக மட்டுமே அறியப்பட்ட ஸ்ரீனிவாஸ், முதல்முறையாக `இனி நானும் நானில்லை’ பாடலை கம்போஸ் செய்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். பாடகி சுஜாதாவுடன் இணைந்து பாடியதோடு, பாடகி சுனிதா சாரதியையும் அறிமுகப்படுத்தினார். அதேபோல, `தொட்டுத் தொட்டு’ பாடலை கம்போஸ் செய்து பாடிய ரமேஷ் விநாயகம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானதும் இதில்தான். பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமுடைய சகோதரர் `பொய் சொல்லலாம்’ பாடலை கம்போஸ் செய்ய, படத்தின் மற்ற இரண்டு பாடல்களான `யாமினி யாமினி’, `காதல் வந்துச்சோ’ பாடல்களை அரவிந்த் சங்கரும், ராகவ் ராஜாவும் கம்போஸ் செய்திருந்தனர். படத்திற்கு பின்னணி இசை சபேஷ்-முரளி.

திருப்பாச்சி

திருப்பாச்சி
திருப்பாச்சி

குடும்ப சென்டிமென்ட் படங்களில் மிக முக்கியமானவர், இயக்குநர் பேரரசு. அந்தப் பாணியில் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம், `திருப்பாச்சி’. விஜய்யின் கமர்ஷியல் சினிமா கிராஃபில் இது முக்கியமான படம்.

படத்தின் ஏழு பாடல்களையும் இயக்குநர் பேரரசு எழுத, `கட்டுக் கட்டு’ பாடலை தேவிஸ்ரீபிரசாத்தும், `கண்ணும் கண்ணும்’ பாடலை மணிஷர்மாவும், மற்ற பாடல்களுக்கு தீனாவும் இசையமைத்திருப்பார்கள். இதில் `கண்ணும் கண்ணும்’ பாடலை ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் ஆகியோரோடு சேர்ந்து பிரேம்ஜியும் பாடியிருப்பார்.

அங்காடித்தெரு

அங்காடித்தெரு
அங்காடித்தெரு

பல்பொருள் அங்காடிகளில் வேலை எனும் பெயரால் நடக்கும் கொடுமைகளையும், தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் `அங்காடித்தெரு’ மூலம் பார்வையாளர்களுக்குச் சொல்லியிருப்பார், இயக்குநர் வசந்தபாலன். இதுபோன்ற அழுத்தமான ஒன்லைன்கொண்ட கதைக்கு, விஜய் ஆண்டனியும், ஜி.வி.பிரகாஷும் தங்கள் இசையால் பாடல்களில் தந்திருப்பது மயிலறகு மெலடிஸ்.

ஒவ்வொரு மெட்டுக்கும் ஏற்ப, தன் இயல்பான வரிகள் மூலம் பாடல்களை இன்னும் அழகாக்கியிருப்பார் கவிஞர் நா.முத்துக்குமார். படத்தில் மொத்தமுள்ள ஆறு பாடல்களில், `அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, `எங்கே போவேனோ’ பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்க, மற்ற பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருப்பார்.

டேவிட்:

டேவிட்
டேவிட்

விக்ரம், ஜீவா முதன்முறையாக இணைந்த படம் டேவிட். இந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது ட்ராக். இதற்காக ஒன்பது இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். அனிருத் தவிர இதில் இசையமைத்த இசையமைப்பாளர்கள் அனைவரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனியிசைக் கலைஞர்கள்.

சோலோ

சோலோ
சோலோ

நான்கு வெவ்வேறு கதைக்களங்களைக்கொண்ட ஆந்தாலஜியாக வெளிவந்த படம் `சோலோ’. பிரசாந்த் பிள்ளை பின்னணி இசையில் பணியாற்ற, ஒவ்வொரு கதையின் பாடல்கள், கேரக்டருக்கான ட்ராக் எனத் தாய்க்குடம் பிரிட்ஜ், மசாலா கஃபே, ஃபில்டர் காபி, சீஸ் ஒன் தெ பீட், அகம் என அத்தனை குழுக்களும் அசத்தியிருப்பார்கள்.

தாராள பிரபு

தாராள பிரபு
தாராள பிரபு

2012-ல் பாலிவுட்டில் வெளியான `விக்கி டோனர்' படம் செம ஹிட்டடித்தது. ரொமான்டிக் ஜானரில், விந்தணு தானம் என போல்டான ஒரு ஒன்லைன் பிடித்து உருவாகியிருந்த இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, யாமி கௌதம் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். `தாராள பிரபு' எனப் பெயரிப்பட்டிருக்கும் இப்படத்தை, கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.

அனிருத், `சங்கத்தமிழன்', `பட்டாஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த விவேக்-மெர்வின், பரத்ஷங்கர், ஜே.சி, பிரதீப் குமார், தபாஸ் நரேஷ் ஆகிய நான்கு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழ் ராக் பேண்டான ஊறுக்கா, சமீபத்தில் `பேட்ட' படத்தில் `உல்லாலா' பாடலைப் பாடிய பிரிட்டிஷ் ப்ளேபேக் சிங்கர் இன்னோ கெங்கா, மேட்லி ப்ளூ பேண்ட்ஸ், தனியிசைக் கலைஞர் கேபர் வாசுகி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் இந்தப் படத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு