Published:Updated:

இசை திறந்து...

இசை திறந்து...
பிரீமியம் ஸ்டோரி
News
இசை திறந்து...

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிகளைத் தொடந்து `மடைதிறந்து’ இசைநிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனமும் கலர்ஸ் தமிழ் சேனலும் இணைந்து நடத்துகின்றன.

ந்த வரிசையில் முதல்நிகழ்ச்சிக்கு #ChilliPepper என்று பெயரிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகிகளான ஆண்ட்ரியா மற்றும் சின்மயி கலந்துகொண்டு இசைவிருந்து படைத்தனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் நிகழ்வுகள் இங்கே...

  • ``முதல்முறையாக இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்கு இது அதிர்ச்சி யாகக்கூட இருக்கலாம்’’ என்ற பீடிகையோடு இளையராஜாவின் `ஆசை அதிகம் வச்சு மனச அடக்கிவைக்கலாமா என் மாமா...’ என ஆண்ட்ரியா பாடத் தொடங்கியபோதே அவ்வளவு எனர்ஜி. எஸ்.ஜானகி குரலிலேயே கேட்டுப் பழகிய அந்தப் பாடலின் வேறொரு பரிமாணத்தை இசைப்பிரியர்களுக்குத் தனது குரல்வழி கடத்திக்கொண்டிருந்தார் ஆண்ட்ரியா. அப்போது `மறுபடியும்’ ரோகிணிக்கு டஃப் கொடுத்து ஆடத் தொடங்கியிருந்தார் முன்வரிசையில் அமர்ந்திருந்த நாற்பது வயதைக் கடந்த ரசிகை ஒருவர்.

இசை திறந்து...
  • மனைவியுடன் இசை நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தார் `96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அவர் முன்னிலையில் `96’ பாடல்களை சின்மயி பாட, ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். சின்மயி பாடிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் மொத்தமாக செல்போன் டார்ச் அசைத்து நெகிழ்ந்தனர்.

  • இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிகில் டிரெய்லர் திரையிடப்பட்டது. அப்போது பிகிலின் சிங்கப் பெண்கள் அனைவரும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியோடு மேடையேற்றி கௌரவிக்கப்பட்டனர். `இது பெண்களுக்கான படமாக இருக்கும்’ என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியதை ரசிகர்கள் கரகோஷத்துடன் ஆமோதித்தனர். ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவே பெரிய திரையில் பிகில் டிரெய்லர் இரண்டாவது முறையாகத் திரையிடப்பட்டது.

  • புற்றுநோயாளிகளுக்கு உதவிவரும் வி.எஸ்மெடிக்கல் டிரஸ்ட்டுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அந்த டிரஸ்ட்டின் தலைவரும் புற்றுநோய் மருத்துவருமான சுப்பிரமணியத்திடம் அர்ச்சனா கல்பாத்தி, ஆண்ட்ரியா, சின்மயி ஆகியோர் அளித்தனர். அப்போது மைக் பிடித்த மருத்துவர் சுப்ரமணியம், `புற்றுநோய்த் தாக்கு தலிலிருந்து 65 சதவிகிதம் பேர் மீண்டுவரும் சூழலில், அடுத்த 15 ஆண்டுகளில் இது 90 சதவிகிதமாக அதிகரிக்கும்’ என்று நம்பிக்கை விதைத்தார்.