Published:Updated:

மார்கழியில் மக்களிசை: "நீலம் பண்பாட்டு மையத்துக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கு!"- பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்

"தனி இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற, மக்களிசைப்பாடகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான மேடைகளை அமைத்து தருவதுதான் நீலம் பன்பாட்டு மையத்தின் நோக்கம்."- பா.இரஞ்சித்

மார்கழியில் மக்களிசை: "நீலம் பண்பாட்டு மையத்துக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கு!"- பா.இரஞ்சித்

"தனி இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற, மக்களிசைப்பாடகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான மேடைகளை அமைத்து தருவதுதான் நீலம் பன்பாட்டு மையத்தின் நோக்கம்."- பா.இரஞ்சித்

Published:Updated:
பா.இரஞ்சித்
இசையும் பாட்டுமாக வாழ்வைக் கழிக்கும் மதுரை மாநகர மக்கள், இதுவரை அனுபவித்திராத பலவகையான இசை வடிவங்களை மேடையேற்றி மகிழ வைத்துள்ளது நீலம் பண்பாட்டு மையம்.
மார்கழியில் மக்களிசை
மார்கழியில் மக்களிசை

தன் திரைப்படம் மூலம் அரசியல், சமூகப் பிரச்னைகளை ஆழமாகப் பேசி வரும் இயக்குநர் பா.இரஞ்சித், கலை இலக்கியத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நீலம் பண்பாட்டு மையம் மூலம் கவனிக்கப்படாத இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இசை மாதம் என்று கொண்டாடப்படும் மார்கழியில் சென்னையில் மக்களுக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர், தற்போது மதுரை, கோவை மக்களுக்கு அந்த அனுபவத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார்.

சு.வெங்கடேசன் எம்.பி.யுடன் பா.இரஞ்சித்
சு.வெங்கடேசன் எம்.பி.யுடன் பா.இரஞ்சித்

மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்குபெறும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பா.இரஞ்சித், "நீலம் பண்பாட்டு மையம் மூலம் கல்ச்சுரல் சம்பந்தமாக பல விஷயங்களை பன்ணிட்டு வர்றோம். கடந்தாண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை பரிட்சார்த்த முறையில் சென்னையில் ஆரம்பித்தோம். நடத்திய 8 ஷோவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது வலைதளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. நிறைய கலைஞர்கள் உத்வேகத்தோடு கலந்து கொண்டார்கள். புதுப்புது நாட்டார் கலைவடிவங்களை மேடையோற்றினோம்.

மார்கழியில் மக்களிசை கலைஞர்கள்
மார்கழியில் மக்களிசை கலைஞர்கள்

கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து பண்ண முடிவெடுத்தோம். சென்னையை மையமிட்டு ஏன் நடத்துறீங்க, மற்ற ஊர்களிலும் நடத்தலாமே என்று சிலர் கேட்டார்கள். அதனால், இந்தமுறை கூடுதலா மதுரையிலும் கோவையிலும் நடத்த முடிவெடுத்தோம்.

இதன் மூலம் இப்பகுதி மக்களின் கலை வடிவங்களை மேடையேற்றுகிறோம். மதுரை, கோவை நிகழ்ச்சிகளுக்குப்பின் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னையில் நடத்துகிறோம். அங்குள்ள பல சபாக்களில் மார்கழி மக்களிசையை நடத்துகிறோம். இதில் பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். பயனடையாகிறார்கள். கலையை மக்களுக்கானதாக மாற்றுகிற முயற்சிதான் இது.

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

தனி இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற, மக்களிசைப்பாடகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான மேடைகளை அமைத்து தருவதுதான் நீலம் பன்பாட்டு மையத்தின் நோக்கம். மதுரை கோவையில் இலவச அனுமதியை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

31-ம் தேதி கவனிக்கப்படாத சிறந்த மூத்த இசைக்கலைஞர்கள் 8 பேருக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கவிருக்கிறோம். இந்த நிகழ்வில் இன்னும் சில விஷயங்களை செய்யவிருக்கிறோம். மொத்தத்தில் இசை மக்களுக்கானது, அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம் அவ்வளவுதான்.

நிகழ்ச்சி நடத்த மார்கழி மாதத்தை தேர்வு செய்ய வேறு எந்தக் காரணமும் இல்லை. மார்கழி, தமிழ் சமூகம் அனைவருக்கும் பொதுவானதுதான். குறிப்பாக மார்கழியில் இசை, பஜனை பாடுவது என்பது மக்களுடன் இணைந்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பு  - மார்கழியில் மக்களிசை
செய்தியாளர் சந்திப்பு - மார்கழியில் மக்களிசை

மார்கழி மாதம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல. மங்கள இசையும், மற்ற இசையும் எந்த வகையிலும் தகுதி குறைந்தது அல்ல. சமமானதுதான். இரண்டு கலைகளும் நமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதன் தன்மை ஒரேவிதமானதுதான்.

இந்த இரண்டு வகையான இசையையும் மக்களிடம் கொண்டு போகவேண்டும். இரண்டு கலைஞர்களையும் ஒற்றுமையாக்க வேண்டும்.

நம் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்டு கவனிக்கப்படாமல் போன இசை வடிவங்களுக்கு மேடை அமைத்து கொடுத்து ஆடியன்ஸை கனெக்ட் பண்ணக்கூடிய முயற்சிதான் இது. கலைஞர்களுக்கு இந்த பிளாட்பார்ம் ரொம்ப உதவியா இருக்கும்.

பல சபாக்களில் நடக்கும் திரை இசை பிரபலங்கள் நிகழ்ச்சிகளுக்கு அதிகமான ஆடியன்ஸ் ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க தயாராக இருக்கிறார்கள். அதேபோன்ற வேல்யூ இந்தக் கலைஞர்களுக்கும் வரவேண்டும். பல கலைஞர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. மதுரை மாவட்ட ஒப்பாரி கலைஞர்களை மேடையேற்றணும்னு விரும்பினேன். காரணம், வட தமிழகத்தை சேர்ந்த நான், அங்குள்ள ஒப்பாரி வடிவத்தைக் கேட்டிருக்கிறேன். அதைவிட இங்குள்ள ஒப்பாரி அருமையான கலை வடிவமாக உள்ளது. இவற்றை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்.

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

நாட்டுப்புறக் கலைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகவும், இதை விட்டுசென்ற இந்தத் தலைமுறையினர் மீண்டும் இக்கலையை தேடி வரவும் இந்த மேடை, வாய்ப்பை ஏற்படுத்தும். பல நல்ல கலைஞர்களைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாக உள்ளது. அதைவிட சோஷியல் மீடியாவின் ஸ்பேஸ் பெரியது. அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டுப்புறக் கலைகளை மேடைக்கேற்ற வகையில் ஒரு வடிவமாக மாற்ற இந்த மேடை பயன்படுகிறது.

இதில் பங்குபெறும் கலைஞர்களின் பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்போகிறோம். அதில் கிடைக்கும் பணத்தை அவர்கள் நேரிடையாக அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். மக்கள் இசைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நன்றாக ரீச்சாகியுள்ளது. அதிலும் பறை இசைக்குழுக்களைப் பல கல்லூரிகளில் அமைத்துள்ளார்கள். நாட்டுப்புறக் கலை, மக்கள் இசை மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கல்லூரிகளில் இதற்கான விழிப்புணர்வை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தேன்.

"இசை வடிவங்களைக்கூட சாதி ரீதியாக பிரித்து வைத்துள்ள சமூகத்தில் அதை மாற்றக்கூடிய வாய்ப்புள்ளதா?"

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில்...
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில்...

"அப்படி சிஸ்டமா இருக்கிறதை உருவாக்கியது யார் என்ற பல கேள்விகள் உள்ளன. ஆனால், அதை மாற்றுவதற்கான ஸ்பேஸ் இப்போது உள்ளதாக நினைக்கிறேன். எல்லாம் மாறும்."

"நாட்டுப்புறக் கலைகளுக்கு கலை இரவு மேடைகள் வாய்ப்பளித்தன. தற்போது தாங்கள் வாய்ப்பளிக்கிறீர்கள், இதில் அரசு என்ன செய்ய வேண்டும்?"

"அரசு தரப்பு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். அதேநேரம் இது ஒருபக்கம் மட்டுமே நடக்குற வேலை இல்லை.

இப்ப நீலம் பண்பாட்டு மையத்துக்கு சில அரசியல் நோக்கங்கள் இருக்கு. மக்கள்கிட்ட கலையை கொண்டு போய் சேர்க்க வேண்டும். கலையை ஜனநாயகப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இருக்கு. அப்பத்தான் மக்களைக் கலையோடு சேர்த்து இன்ட்ராக்ட் பண்ண முடியும். அதனால இதை பண்றோம். சென்னை சங்கமம் மீண்டும் தொடங்கப்படும் என்று கனிமொழி கூறியிருக்கிறார். இதன் மூலம் பல கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும்" என்று பதில் அளித்துவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க கிளம்பினார் பா.இரஞ்சித்.

மார்கழியில் மக்களிசை - மதுரை நிகழ்வில் பா.இரஞ்சித்துடன், எம்.பி.சு.வெங்கடேசன், பாடகர் அறிவு மற்றும் நிறைய மக்கள் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism