லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பிடித்ததைச் செய்ய அனுமதித்த பெற்றோர்... பிரமாதமாகக் கலக்கும் சலோமி

கெட்சியா சலோமி
பிரீமியம் ஸ்டோரி
News
கெட்சியா சலோமி

போகப் போக, போட்டி போட்டுப் படிச்சோம். ஒருகட்டத்துல நான் அப்பாவை விட வேகமா அடுத்தடுத்து கத்துக்க ஆரம்பிச்சேன். `அப்பா நீங்க மெதுவா கத்துக்குறீங்க, உங்களால அடுத்த கிளாஸ் எனக்கு லேட் ஆகுது. நானே கத்துகிறேன்’னு சொன்னேன்.

``பொதுவா பிள்ளைகளை மார்க்ஸை நோக்கித் தள்ளுற பெற்றோர்கள் மத்தியில, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்னு சொல்ற பெற்றோர் எனக்கு கிடைச்சதால, இந்த 16 வயசுல நான் ஒரு டிரம்ஸ் கலைஞரா கலக்கிட்டு இருக்கேன். தமிழ்நாடு முழுக்க வாசிச்சிருக்கேன். பெங்களூரு, சிங்கப்பூர்னு வாய்ப்புகள் விரியுது. மதுரைல இருந்துட்டு இவ்ளோ பண்றீங்களானு பலரும் ஆச்சர்யமா கேட்பாங்க. திறமையும் ஆர்வமும் இருந்தா எதுவும் சாத்தியம்தான்’’ - பதின் வயதுக்கே உரிய வேகத்துடன் படபடவெனப் பேசுகிறார், கெட்சியா சலோமி.

“அப்பாவுக்கு இசையில் ஆர்வம். எனக்கு அஞ்சு வயசு இருந்தப்போ, அப்பாவுக்கு ஒரு டிரம்ஸ் செட் கிஃப்டா கிடைச்சது. அதை தட்டி தட்டி விளையாடிதான் எனக்கு இதுல ஆர்வம் வந்தது. கத்துக்கலாம்னு மாஸ்டரை தேடினோம். கிடைக்கல. முறையான வகுப்பு களும் இல்ல. அப்பாவே அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு எனக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாரு. நான்காம் வகுப்புப் படிச் சப்போ, ஒரு மாஸ்டர் கிடைச்சாங்க. ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும் வகுப்பு. க்ளாஸ்ல எதுவாச்சும் எனக்குப் புரியாம போனா பொறுமையா சொல்லிக் கொடுக் கிறதுக்காக, அப்பாவும் என்கூட வகுப்புல சேர்ந்தார். போகப் போக, போட்டி போட்டுப் படிச்சோம். ஒருகட்டத்துல நான் அப்பாவை விட வேகமா அடுத்தடுத்து கத்துக்க ஆரம்பிச்சேன். `அப்பா நீங்க மெதுவா கத்துக்குறீங்க, உங்களால அடுத்த கிளாஸ் எனக்கு லேட் ஆகுது. நானே கத்துகிறேன்’னு சொன்னேன். இதை நான் எப்போ சொல்வேன்னு எதிர் பார்த்த அப்பா, சிரிச்சுட்டே க்ளாஸ்ல இருந்து விலகிட்டார். இன்னொரு பக்கம், டிரம்ஸ்ல எனக்கு அப்பா ஆல் இன் ஆல் ஆனார். எப்படி டிரம்ஸ் செட் பண்ணனும், வாசிக்கணும், ரெக்கார்டு பண்ணனும்னு எல்லாத்துக்கும் அப்பாதான் வழிகாட்டி. திடீர்னு போன் பண்ணி, டிரம்ஸ் போர்ஷன்ஸ் நிறைய இருக்கிற ஏதாச்சும் ஒரு சினிமா பாட்டை சொல்லி, வாசிச்சு ரெக்கார்டு பண்ணி வைக்க சொல்லுவார் அப்பா. வந்ததும் கேட்டுட்டு, அதுல இருக்கிற மிஸ்டேக்ஸை ரெண்டு பேருமா சேர்த்து திருத்துவோம்’’ என்று சிரிப்பவருக்கு, முதல் மேடை அவர் பள்ளியில் கிடைத்துள்ளது.

பிடித்ததைச் செய்ய அனுமதித்த பெற்றோர்... பிரமாதமாகக் கலக்கும் சலோமி

‘`ஐந்தாம் வகுப்புப் படிச்சப்போ, ஆண்டு விழாவில் டிரம்ஸ் வாசிக்கிறேன்னு ஸ்கூல்ல சொன்னேன். ஆனா, அவங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்ல. அப்பா டிரம்ஸை எல்லாம் ஸ்கூலுக்கு எடுத்துட்டு வந்து, பிரின்சிபால் ரூம்ல செட் பண்ணி, வாசிக்க வெச்சார். எல்லாரும் ஆச்சர்யமாகி கைதட்டி, ஆண்டு விழா மேடையில ஏத்திட்டாங்க. அதுக்கப்புறம் ஒரு திருமண விழாவில் வாசிச்சேன். அது எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிப்போக, பொண்ணு, மாப்பிள்ளைக்குக் கொடுக்க வாங்கிட்டு வந்த பரிசுகளை எல்லாம் பலரும் எனக்குக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. தொடர்ந்து, மதுரை மேஸ்ட்ரோ மற்றும் சைமன் சாரோட குழுவில் இணைந்து நிறைய கத்துக்கிட்டேன். அதன் மூலமா நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. கோயம்புத்தூர்ல ஒரு பெரிய கச்சேரியில வாசிச்சேன். ரொம்ப பெரிய மேடை. மேடையோட ஆரம்பத்தி லிருந்து கடைசி வரைக்கும் இசைக்கலைஞர்கள் இருந்தாங்க. சின்னதா தப்பு விட்டா கூட எல்லாரும் நோட் பண்ணுவாங்களேனு ரொம்ப பயந்துட்டே வாசிச்சேன். இன்னொரு பக்கம், சூப்பர் சிங்கர் பிரபலங்கள் தர் சேனா, முத்துச்சிற்பி, திவாகர், பிரியங்கானு இவங்க கூடவெல்லாம் வாசிக்கும் சந்தோஷம். இப்படி ஒவ்வொரு மேடையிலும் என் தன்னம்பிக்கை கூட ஆரம்பிச்சது’’ என்பவர்,

``லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் டிரம்ஸ்ல 6 கிரேடு முடிச்சுருக்கேன். அந்த கோர்ஸுக்கு, லண்டன்ல இருந்து எக்ஸாமினர்ஸ் இங்க வருவாங்க. அவங்க கொடுக்கிற நோட்ஸை குறிப்பிட்ட நேரத்துக் குள்ள வாசிச்சு, மனசுல வாங்கிட்டு, அதை அப்படியே வாசிச்சுக் காட்டணும். 98 மதிப் பெண் எடுத்தேன். அடுத்த தேர்வு நவம்பர்ல. ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக்குப் போய்தான் படிச்சேன். இப்போ நிறைய கச்சேரிகளுக்குப் போறதால, டென்த் போர்டை ப்ரைவேட்டா படிச்சு எழுதினேன். பகல்ல கச்சேரி இருந்தா மாலையிலும், இரவில் கச்சேரி இருந்தா பகல்லயும் படிப் பேன். இதுலாம் எனக்கு கஷ்டமாவே தெரியல. விளையாடிட்டு ஓடிவந்து படிக்க உட்காரு வோம்ல... அப்படித்தான் எனக்குக் கச்சேரிகள்’’ - டிரம்ஸை செட் செய்தபடி தொடர்ந்தார் கெட்சியா.

‘`மதுரை, ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூர், சென்னைனு நிறைய ஊர் கள்ல வாசிச்சுருக்கேன். பெங்களூருல ஒரு கச்சேரியை முடிச்சுட்டு வந்து மேத்ஸ் எக்ஸாம் எழுதினேன். மலேசியாவில் தேவா சார் இசைக்குழுவில் வாசிக்கக் கிடைச்ச வாய்ப் பால ரொம்ப உற்சாகமாகிட்டேன். என்னை மாதிரி, எல்லா குழந்தைகளுக்குள்ளேயும்

ஒரு திறமை இருக்கும். அது வளர பெற்றோர் வழிவிடணும், உரம் போடணும். அப்புறம் பாருங்க நாங்க எப்படி உயரப் பறக்கிறோம்னு’’

- தடதடவென டிரம்ஸை அதிர அடிக்கிறார் கெட்சியா.