சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!

தனியிசைப் பாடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தனியிசைப் பாடல்கள்

கென் கருணாஸின் ‘வாடா ராசா’ ஆல்பம் ஒன்றரைக் கோடிப் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.

சினிிமாவில் நுழைய குறும்படங்கள் எடுத்துத் திறமையைக் காட்டியது போல, இப்போது மியூசிக் ஆல்பங்கள். தனியிசைப்பாடல்களில் ஹிட் அடித்த சிலரிடம் பேசினேன்.

‘` `என்ஜாய் எஞ்சாமி’க்குப் பிறகு நிறைய பேரின் கவனம் தனிப்பாடல்கள் பக்கம் போயிட்டிருக்கு. லாக்டௌன் காரணமா தியேட்டர்கள் இல்லாத சூழல். அதனால் டி.வி, மொபைல் ஆகியவை தனியிசைப் பாடல்களுக்கான களங்களாக இருக்கின்றன.நான் விஜய் சார் நடிச்ச ‘ஜில்லா’, ‘வேலாயுதம்’னு சில படங்கள்ல உதவி இயக்குநரா இருந்திருக்கேன். விளம்பரப் படங்கள் இயக்கியிருக்கேன். அந்த அனுபவத்தோடு பண்ணின ஆல்பம் இது. அஞ்சு நிமிஷ பாடல்ல எல்லாருமே லவ் சீக்குவென்ஸ் தான் சொல்வாங்க. ஒரு பாட்டு, அதுக்கு டான்ஸ் ஆடுறதுன்னு போகாமல் ஒரு கதையையே சொல்லியிருக்கேன்’’ என்கிறார் டி.ஆர்.பாலா. ‘சார்பட்டா’ சந்தோஷ் நடித்த ‘ஏன் கனவே’ ஆல்பத்தை இயக்கியவர் இவர்.

‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!

விஜய் டி.வி-யின் ‘குக்கு வித் கோமாளி’க்குப் பின் ‘அடிப்பொலி’, ‘குட்டிப்பட்டாஸ்’ என ஆல்பங்களில் ஆடி ஹீரோவாகிவிட்டார் அஸ்வின். ‘அடிப்பொலி’ வீடியோவுக்கு இசையமைத்து, இயக்கியிருப்பவர் சித்து குமார்.

‘`படங்களுக்கு இசையமைக்கும்போது ஒரு சுதந்திரம் கிடைக்காது. ஏன்னா, கதைக்கான சிச்சுவேஷனுக்கு ஏற்ப மியூசிக் பண்ண வேண்டியிருக்கும். ஆனா, தனிப்பாடல்கள் நம்மளோட கற்பனைங்கறதால நமக்குப் பிடிச்ச மாதிரி பண்ணமுடியும். ‘அடிப்பொலி’யில் முதல்ல ட்யூன் தான் வந்துச்சு. அதன்பிறகு அந்த ட்யூனுக்கு எந்த மாதிரி கான்சப்ட் பண்ணலாம்னு யோசிச்சேன். அப்படித்தான் இந்த வீடியோ உருவாச்சு’’ எனச் சொல்லும் சித்து குமார், சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர்.

கென் கருணாஸின் ‘வாடா ராசா’ ஆல்பம் ஒன்றரைக் கோடிப் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது. அதன் இசையமைப்பாளரான ஈஸ்வர், “இசை ஆல்பங்களுக்கு வெளிநாடுகள்ல நல்ல வரவேற்பு எப்பவுமே உண்டு. இப்ப அப்படி இங்கேயும் எல்லாரும் கொண்டாடுறது சந்தோஷமா இருக்கு. கென்னும் நானுமே இப்ப நிறைய எழுதி, இசையமைச்சிட்டு இருப்போம். அறிவு ‘என்ஜாய் எஞ்சாமி’ல அவங்க பாட்டியோட கதையைச் சொன்னதுக்கு செம ரீச். அதே போல எங்களோட ஒவ்வொரு பாடல்லேயும் ஒரு கான்சப்ட் கொண்டுவர்ற ஐடியா இருக்கு. ‘வாடா ராசா’வுக்கு முன் கென்னோடு சேர்ந்து நிறைய பாடல்கள் கொண்டு வந்திருக்கேன். கருணாஸ் அங்கிள் அதைக் கேட்டுட்டு எங்களை என்கரேஜ் பண்ணுவார். ‘வாடா ராசா’ பல்லவியை ஒரே நைட்ல முடிச்சிட்டோம். சரணம் மத்த விஷயங்கள்னால ஒரு வாரம் டைம் எடுத்துக்கிச்சு’’ என்கிறார் ஈஸ்வர்.

‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!
‘தட்றோம் தூக்குறோம்’ - தனியிசைப் பாடல்கள்!

இப்போது நடிகர், அரசியல்வாதி என அறியப்படும் கருணாஸ் ஒரு காலத்தில் தனிப்பாடல் உலகில் ஸ்கோர் அள்ளியவர். 20 ஆல்பங்களுக்கு மேல் பாடல் எழுதி, பாடி இசையமைத்துக் கலக்கியவர். தான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘கானா கருணா’வாக ராப் இசைப் பாடகராகப் பெயரெடுத்தவர். சிம்பொனி ஆடியோ நிறுவனம் 1991-ல் வெளியிட்ட ‘ஐசாலக்கடி மெட்டுதானுங்க’ இவரது முதல் இசை ஆல்பம்.

‘`நான் கல்லூரியில் படிக்கும்போது ‘கானா கருணா’வாகப் பெயர் வாங்கினாலும், நான் சென்னைக்காரன் கிடையாது. கிராமத்துல இருந்து புறப்பட்டு வந்தவன். அதன்பிறகு ‘ராசாத்தி’, ‘ரோசாப்பூ’, ‘வெட்டி வேரு வாசம்’னு 20 கிராமியப் பாடல்களும் எழுதி இசையமைச்சேன். 2000-ம் வருஷம் மில்லியனியத்தை வரவேற்று ஒரு ஆல்பம் பண்ணியிருந்தேன். அதுல இறந்து போன இளவரசி டயானாவுக்காக ‘போய் வா இளவரசி’ன்னு ஒரு பாடலும் பண்ணியிருக்கேன். 1996-ல தனிப்பாடலை மியூசிக் வீடியோவா பண்ணியிருக்கேன். அதன்பிறகு புளூமேட் பின்னணியில் 75,000 செலவுல ‘ஓகேலா’ன்னு ஒரு ஆல்பம் பண்ணினது. அப்ப அதை டி.வி சேனல்ல ஒளிபரப்ப முயற்சி பண்ணினேன். யாரும் கைகொடுக்கல. அதன் பிறகு சினிமா, நடிப்புன்னு துறை மாறிடுச்சு. எனக்குத் தெரிஞ்சு சினிமாப் பாட்டுன்னு இல்லாம, தனிப்பாடலா ஹிட் ஆனது, சிலோன் மனோகர் பாடிய ‘சுராங்கனி... சுராங்கனி’ பாடல்தான். அதே மாதிரி டி.கே.எஸ்.நடராஜன் பாடிய ‘என்னடி முனியம்மா’வும் பிரபலமாகி, பின்னாளில் சினிமாவுலேயும் ஹிட் ஆச்சு. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பரவை முனியம்மா, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமின்னு பலரும் கவனம் ஈர்த்திருக்காங்க. இப்ப என் மகன் கென்னும், அவனோட நண்பன் ஈஸ்வரும் சேர்ந்து ‘வாடா ராசா’ பண்ணியிருக்காங்க. அமோக வரவேற்பு கிடைச்சதுல அப்பாவாகவும் சந்தோஷப்படுறேன்’’ எனப் பெருமிதமடைகிறார் கருணாஸ்.

ஈஸ்வர்
ஈஸ்வர்
கிரேஸ் - கருணாஸ்
கிரேஸ் - கருணாஸ்
டி.ஆர்.பாலா
டி.ஆர்.பாலா
சித்து குமார்
சித்து குமார்
அசல் கோலார்
அசல் கோலார்

டீன் ஏஜ் வட்டாரத்தில் ‘ஜோர்த்தாலே’ மாஸ் ஹிட். சென்னைத் தமிழில் ராப் பாடலாகக் கலக்கிவருகிறது. அந்தப் பாடலை எழுதி, இசையமைத்திருப்பவர் அசல் கோலார்.

“சினிமாவுக்குள் என்ட்ரி ஆகணும்னு நான் இந்தப் பாடல்களைப் பண்ணல. பாட்டு பண்ணணும்னு தோணுச்சு. அது சினிமாவுக்கும் தேவையானதா இருந்ததால, படத்துலேயும் பாட்டு எழுதினேன். ஆல்பம் பண்ற பலர், சினிமாவுக்குப் போகணும்ங்கற ஆசையிலேயும் வர்றாங்க. சினிமாவே தேவையில்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க. நான் இந்த ரெண்டுக்கு நடுவுல இருந்து எழுதி, பாட்டிட்டு இருக்கேன்’’ எனச் சொல்லும் அசல் கோலார், சந்தானத்தின் ‘பாரீஸ் ஜெயராஜி’ல் ‘புளிமாங்கா’வை எழுதியவர்.

தனிப்பாடல்களுக்கான வரவேற்பு குறித்து முன்னணி ஆடியோ நிறுவனம் ஒன்றிடம் பேசினால், ‘`ஒவ்வொருத்தர் ரசனைக்கு ஏத்த மாதிரி தனிப்பாடல்கள் ரசிக்கப்படுது. எந்த ஜானர்னாலும் பரவாயில்ல. ஆனா, ஒவ்வொரு பாடலையும் கேட்ட பிறகே வாங்கிக்கறோம். எதாவது ஒரு விஷயம் மக்களைக் கவர்ந்தாலே போதும். ஜெயிச்சிடலாம்’’ என்று தம்ஸ்-அப் காட்டுகின்றனர்.

அப்புறமென்ன... புறப்படட்டும் புதிய படைகள்!