Published:Updated:

கௌதம் மேனனை இந்தப் படம் டைரக்ட் பண்ண வேணாம்னு சொன்னேன்!

தர்புகா சிவா
பிரீமியம் ஸ்டோரி
தர்புகா சிவா

`சிவா’ன்னு போட்டா ரொம்ப சாதாரணமா இருக்கும். ‘எந்த சிவான்னு யாருக்குத் தெரியும். உனக்குப் பிடிச்ச இசைக்கருவி என்ன?’ன்னு கேட்டார்.

கௌதம் மேனனை இந்தப் படம் டைரக்ட் பண்ண வேணாம்னு சொன்னேன்!

`சிவா’ன்னு போட்டா ரொம்ப சாதாரணமா இருக்கும். ‘எந்த சிவான்னு யாருக்குத் தெரியும். உனக்குப் பிடிச்ச இசைக்கருவி என்ன?’ன்னு கேட்டார்.

Published:Updated:
தர்புகா சிவா
பிரீமியம் ஸ்டோரி
தர்புகா சிவா
Mr.X எனத் தமிழ் இசையுலகிற்கு அறிமுகமாகி, பின் தனது இசையால் நம்மை ‘மறுவார்த்தை’ பேசவிடாமல் மெளனமாக்கி ரசிக்க வைத்தவர், இசையமைப்பாளர் தர்புகா சிவா. தற்போது, ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இசையமைப்பாளரா இருந்த உங்களுக்கு இயக்குநராகணும்னு எப்போ தோணுச்சு?’’

“இடையில ஒரு வருஷம் மியூசிக் பண்ணாமல் இருந்தேன். அப்போ ஒரு கதைக்கான ஐடியா தோணுச்சு. அதை ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லும்போது ‘நல்லாருக்கு. இதை அப்படியே படமா பண்ணு’ன்னு சொன்னாங்க. அப்போதான் இது ஒரு படத்துக்கான கதைனே எனக்குப் புரிஞ்சது. அதுக்குப் பிறகுதான், இதுக்கு ‘முதல் நீ முடிவும் நீ’ன்னு டைட்டில் வெச்சு இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன்.

நான் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை செஞ்சதில்லை. நான் நடிச்ச ‘ராஜதந்திரம்’ படமும் ஒரு இண்டிபெண்டன்ட் படம்தான். அதுல நடிக்கும்போது கத்துக்கிட்ட விஷயங்கள்தான் எனக்கு அடிப்படையா இருந்தது. நான் இசையும் முறைப்படி கத்துக்கலை. கேட்டுக்கேட்டு வாசிச்சு அப்படியேதான் வந்தேன். நிறைய நாடுகள்ல இருக்கிற தியேட்டர் பிளே சம்பந்தப்பட்டவர்கள்கூட பயணிச்சது எனக்கு படம் இயக்க மிகப்பெரிய உதவியா இருந்தது.”

``உங்க படத்தைப் பத்தி கெளதம் மேனன்கிட்ட பேசினீங்களா?’’

“ `எனை நோக்கி பாயும் தோட்டா’ பண்ணும்போது இந்தப் படத்துக்கான கதைக்கருவைச் சொன்னேன். ‘நல்லாருக்கு. நான் டைரக்‌ஷன் பண்ணட்டுமா?’ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். ‘இதுல என் பர்சனல் லைப் விஷயங்களும் சேர்த்து எழுதியிருக்கேன். அதனால, நானே பண்றேன்’னு சொல்லிட்டேன். அப்புறம் அப்பப்போ ‘படம் எப்படிப் போயிட்டிருக்கு, எப்படி வந்திருக்கு’ன்னு அடிக்கடி கேட்பார். படம் 90கள் இறுதியில நடக்கிற கதை. அந்தக் காலகட்டம்தான் டிஜிட்டல் டெக்னாலஜியுடைய வளர்ச்சி ஆரம்பமான தருணம். உலகம் தன்னை மாத்திக்கிறதைப் பார்த்து வளர்ந்த நாள்கள் அவை. அதெல்லாமே படத்துக்குள்ள இருக்கும். படத்துடைய டைட்டில் பார்த்து எல்லோரும் லவ் படமான்னு கேட்டாங்க. ஆனா, காதலைத் தாண்டி நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. நிச்சயமா பார்க்குறவங்க எல்லோருக்கும் கனெக்டாகும்னு நம்புறேன்.”

``உங்க ப்ரெண்ட் உங்ககிட்ட இசை நிகழ்ச்சிக்கான பத்திரிகையில பெயர் போடக் கேட்கும்போது ‘தர்புகா’ சிவான்னு சொல்ல என்ன காரணம்?’’

“அதுதான் என்னுடைய முதல் தனி ஷோ. அதுவரைக்கும் பேண்டோட பண்ணிட்டிருந்தேன். `சிவா’ன்னு போட்டா ரொம்ப சாதாரணமா இருக்கும். ‘எந்த சிவான்னு யாருக்குத் தெரியும். உனக்குப் பிடிச்ச இசைக்கருவி என்ன?’ன்னு கேட்டார். அந்த நேரத்துல நான் தர்புகாதான் நிறைய வாசிச்சிட்டிருந்ததனால ‘தர்புகா’ன்னு சொன்னேன். ஓகேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்புறம், அந்தப் பத்திரிகையில பார்த்துதான் ‘தர்புகா சிவா’ன்னு இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ரேடியோ மிர்ச்சி போன பிறகு, எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சது. நானும் மிர்ச்சி சிவாவும் சேர்ந்து ஒரு ஷோ பண்ணினோம். அப்போ நான் தர்புகா, அவர் சிவான்னு பேசுவோம். அது அப்படியே செட்டாகிடுச்சு.”

தர்புகா சிவா
தர்புகா சிவா

``இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர்னு பல விஷயங்கள் பண்ணுறீங்க. எது பிடிச்சிருக்கு?’’

“என்னால அப்படிப் பிரிச்சுப் பார்க்க முடியலை. நான் இசை மாதிரிதான் எல்லாத்தையும் பார்க்கிறேன். எனக்கு அந்த ப்ராசஸை ரசிச்சுப் பண்ணணும் அவ்ளோதான். நம்ம ஸ்டீரியோடைப்பை உடைக்கணும். புது ட்ரெண்டை உருவாக்கணும்னு நினைச்செல்லாம் எதுவும் ஆரம்பிக்கிறதில்லை. நாம பண்ற விஷயங்கள் நமக்கு சுவாரஸ்யமா இருக்கணும். அது மக்களுக்கும் சுவாரஸ்யமா இருக்கணும் அவ்ளோதான்.”

``தனியிசை - சினிமா இசை, எப்படிப் பார்க்குறீங்க?’’

“சினிமாவுல வொர்க் பண்ணுன பிறகு, அதனுடைய தாக்கம் என்னன்னு முழுமையா தெரிஞ்சது. தனியிசை பண்ணும்போது நமக்கான ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருப்பாங்க. ஆனா, சினிமா இசை பலதரப்பட்ட மக்களுக்கும் போய்ச் சேருது. எனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்றேன். எனக்கான ரசிகர்கள் இருந்தால் போதும்னு நினைச்சா தனியிசை பண்ணலாம். இது என்னுடைய கருத்து. சினிமா வேண்டாம்னுதான் ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா, நான் பண்ற மியூசிக் ஸ்டைல் வேணும்னு நினைக்கிற இயக்குநர்களைச் சந்திச்ச பிறகுதான், சினிமாவுல வொர்க் பண்ணணும்னு நம்பிக்கை வந்தது.”

``அடுத்து என்ன?’’

“ `முதல் நீ முடிவும் நீ’ இயக்க ஆரம்பிச்சதனால அதுலயே முழுக் கவனமும் இருந்தது. இது ஒரு மியூசிக்கல் ஸ்கிரிப்ட். அப்புறம், ‘ராக்கி’ இருக்கு. இது தவிர, ‘ராஜதந்திரம்’ டீமுடன் ஒரு படம், ‘கிடாரி’ இயக்குநர் பிரசாத் முருகேசனுடன் ஒரு படம் இருக்கு. இன்னும் இரண்டு படங்கள்ல கமிட்டாகியிருக்கேன். அது யார் படம்னு இப்போ சொல்லமுடியாதே!”

``இந்த ஹீரோவுக்கான என்ட்ரிக்கு மாஸா ஒரு பேக் கிரவுண்ட் ஸ்கோர் பண்ணணும்னு நினைச்சதுண்டா?’’

“அந்த மாதிரி ஒரு மாஸ் பேக் கிரவுண்ட் ஸ்கோரை நான் பண்ணுனா எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கேன். ‘கிடாரி’ படத்துல ஒரு சின்ன போர்ஷன் பண்ணியிருப்பேன். அப்படிப் பண்ணணும்னா, மோகன்லால் சாருக்குப் பண்ணணும்னு நினைக்கிறேன்.”