Published:Updated:

‘தலைமுறைகள் கடந்தவை ஆன்மிகப் பாடல்கள்!’

ஜிப்ரான்
பிரீமியம் ஸ்டோரி
ஜிப்ரான்

ஆன்மிக இசையில் புதிய பயணம்

‘தலைமுறைகள் கடந்தவை ஆன்மிகப் பாடல்கள்!’

ஆன்மிக இசையில் புதிய பயணம்

Published:Updated:
ஜிப்ரான்
பிரீமியம் ஸ்டோரி
ஜிப்ரான்

ஜிப்ரான்... 20 ஆண்டுகளாக இசைத்துறையில் இருப்பவர். விளம்பரப் பாடல்கள் தொடங்கி, இன்று திரையுலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்த இசையமைப்பாளராக உருமாறியிருப்பவர். புகழ்பெற்ற பல பாடல் களுக்கு இசையமைத்திருப்பவர். இவரின் சமீபத்திய சாதனை, ஆன்மிக இசை. இசை நிறுவனம் ஒன்றோடு இணைந்து இவர் உருவாக்கும் `ஸ்பிரிச்சுவல் சீரீஸ்', யூட்யூபில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகளின் புகழ் பெற்ற ஆன்மிகப் பாடல்கள் பலவற்றை நவீன இசையோடு கலந்து தந்திருக்கிறார். இசைக்கு மதமும் மொழியும் இல்லை. அது மனிதனின் ஆன்மாவைத் தொடுவது என்பதை நிரூபிப்பவை ஜிப்ரானின் ஸ்பிரிச்சுவல் சீரிஸ். இந்தப் புதிய முயற்சி குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானோடு உரையாடினோம்

``ஜிப்ரான் ஸ்பிரிச்சுவல் சீரிஸ்... திரை இசையிலிருந்தவருக்கு, திடீரென்று ஆன்மிக இசை எண்ணம் எப்படி... எப்போது தோன்றியது?’’

``கோவிட்... உலகத்தையே முடக்கிப்போட்டது. வாழ்க்கையை எப்படி வாழணும்னு யோசிச்சிருப்போம். ஆனா வாழ்க்கை எப்படி முடியக்கூடாதுன்னு யோசிக்கவெச்சது இந்தக் கொரோனா காலம். நமக்குப் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தரக்கூடிய இடங்கள் ஆலயங்கள். அவையும் மூடியிருந்தது நிறையப்பேருக்கு வருத்தத்தையும் ஏக்கத்தையும் தந்தது.

‘தலைமுறைகள் கடந்தவை ஆன்மிகப் பாடல்கள்!’

அப்போ ஆன்மிக அனுபவத்தை வீட்டுக்கே கொண்டு வர முடியுமான்னு யோசிச்சோம். விளைவு, நல்ல மரபான தெய்விகப்பாடல்களை நவீன இசை யோடு கலந்து தரலாம் என்று தோன்றியது. காரணம், இசையைத் தாண்டி ஒரு வைப்ரேஷன், நேர்மறை எண்ணங்களைத் தரக்கூடிய சொற்கள் எல்லாம் ஆன்மிகப் பாடல்களில் இருந்தன.

‘திங் மியூசிக்’ நிறுவனம் ஏற்கெனவே ‘திங் டிவைன்’ சேனல் தொடங்கியிருந் தாங்க. அவர்களோட சேர்ந்து ஒரு நாலைந்து பாடல்கள் செய்யலாம்னுதான் முதலில் திட்டமிட்டோம். ஆனால் கிடைத்த வரவேற்பு மிகவும் அபரிமிதமாக இருந்தது. நாங்க இவ்வளவு பாடல்கள் போதும்னு நினைத்தாலும், அவற்றை கேட்டு மகிழ்ந்த ஆடியன்ஸ் ஒவ்வொரு பாடலா குறிப்பிட்டு, அதுவும் வேண்டும் என வேண்டுகோள் வைக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே பல மொழிப்பாடல்களையும் இசைக்க வேண்டியதானது.

கேட்கும் ஒவ்வொருத்தரும் ரொம்ப பாசிட்டீவா இருக்குன்னு சொல்லும் போது அதுல நமக்கு ஒரு கமிட்மெண்ட் உருவாகுது. அதனால் எவ்வளவுதான் சினிமா வேலைகள் இருந்தாலும் ஆன்மிகப் பாடல் களைத் தொடர்ந்து செய்வதுன்னு முடிவெடுத் தோம். அதுதான் ஜிப்ரான் ஸ்லிரிச்சுவல் சீரிஸ்னு தொடர்ந்து அந்தத் தளத்திலேயே இயங்க வைத்தது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நவீன இசையை ஆன்மிகப் பாடல்களில் கலப்பதென்பது கத்தி மேல் நடப்பதுபோன்றது. கொஞ்சம் பிசகினாலே கிண்டலையோ அல்லது கண்டனங்களையோ சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி இதைச் சமாளித்தீர்கள்?’’

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே நான் பல துறைகளுக்கும் இசை அமைச் சிருக்கேன். விளம்பரப் பாடல்கள், அரசியல் பாடல்கள், பக்திப் பாடல்கள்னு பலதுறை களுக்கும் இசை அமைச்சிருக்கிறதால, ஆன்மிக இசை குறித்த ஓர் அடிப்படை உண்டு.

ஆன்மிகப் பாடல்களுக்கு இசை அமைக்கும் போது நவீன இசையில் சில டியூன்கள் எடுத்தாலே... மியூசிக் டைரக்டர்ஸ், ‘இப்படி வேண்டாமே...’ என்று சொல்லி வழிகாட்டு வார்கள். அதெல்லாம்தான் அடிப்படை.

இந்த சீரீஸில் அனைத்தும் நவீன இசை என்று சொல்லமுடியாது. குடும்பத்தோட வீட்டில் அமர்ந்து கேட்கும் நபரின் பக்தி பாவத்தைக் கொஞ்சமும் மாற்றிவிடாத இசையாக அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். பாடல்வரிகளை இசை எந்த விதத்திலும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதால், பெரும் பரிசோதனைகள் எல்லாம் இல்லாமல், கேட்பவர்களின் மனநிலையை இசை மூலம் எப்படிச் சிறப்பாக்க முடியும் என்று யோசித்து அதற்கேற்ப செயல்பட்டோம்.''

‘தலைமுறைகள் கடந்தவை ஆன்மிகப் பாடல்கள்!’

``கால பைரவாஷ்டகத்துக்காக இசை அமைத்தது குறித்து...’’

``ஆன்மிகப் பாடல்களைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு பாடலையும் இசை அமைக்கும் போது, அதற்கான இசைக்கோவை அந்த வார்த்தை அமைப்புகளுக்கு உள்ளேயே இருக்கும். ‘என்னை இப்படிப் பண்ணிடு’ன்னு சொல்வதுபோல இருக்கும். அதன் சொற்களில் இருக்கும் வார்த்தை அமைப்புகளில், எழுத்துகளின் பயன்பாட்டில் ஒரு சந்தம் இயல்பாக இருக்கும்.

அந்தச் சந்தம்தான் அந்தப் பாடலைப் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றுவரைக்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. உதாரணமாக ஆதிசங்கரரின் கால பைரவாஷ்டகம். அதன் சொற்கள் எல்லாம் அதீதமான அதிர்வுகளைக் கொண்டவை. என்றென்றும் அது நிலைத்திருக்கும்.

அப்படி இருக்கும்போது அதற்கு இசை அமைக்க நாம் பிரத்யேகமாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதில்லை. அதைத் திரும்பத் திரும்ப படித்தாலே நமக்கு அந்த டியூன் கிடைத்துவிடும்.

கால பைரவாஷ்டகம் கேட்டுவிட்டு நிறைய பேர் அழைத்தார்கள். அறிமுகம் இல்லாத பெரிய ஆள்கள் எல்லாம் அழைத்து ‘தினமும் காலையில் அதைக் கேட்பது ரொம்ப பாசிட்டீவா ஃபீல் பண்ண வைக்குது’ என்றார் கள். ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.''

‘தலைமுறைகள் கடந்தவை ஆன்மிகப் பாடல்கள்!’

``பொதுவாகவே இசைக்கு மொழியில்லை என்று சொல்வார்கள். ஆனாலும் ஆன்மிகப் பாடல்களின் ஆன்மா அதன் சொற்களில் தானே ஒளிந்திருக்கிறது... நீங்கள் சம்ஸ்கிருதம், மராத்தி, கன்னடம் எனப் பல மொழிகளிலும் பாடல்களுக்கு இசை அமைக்கிறீர்கள். அப்படி இசை அமைக்கும்போது ஒவ்வொரு சொல்லின் பொருளும் உணர்ந்துதான் இசை அமைக் கிறீர்களா?’’

``ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு என்று ஒன்றிரண்டு மொழிப் பாடல்கள்தான் செய்யலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் இந்தப் பாடல்கள் அமைந்த முறையைக் கண்டு பிற மொழிப் பாடகர்கள் தாங்களே தன்னார்வமாக முன்வந்தார்கள், குறிப்பாக சம்ஸ்கிருதம் தெரிந்த பாடகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பாடல்களைப் பதிவு செய்யும்போது, முதலில் பாடலை மட்டும் தனியாகப் பதிவு செய்துகொள்வோம். காரணம் பாடல் வரிகள். அது தெளிவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பு முறையை யும் அந்தந்த மொழி அறிந்த நிபுணர்கள் மூலம் உறுதி செய்துகொள்வோம். அதன்பின்புதான் நான் பின்னணி இசையைச் சேர்ப்பேன்.

இது திரையிசைக்கு நேர்மாறான அமைப்பு முறை. முதலில் ஃபைனல் வாய்ஸ், பின்பு இசைக் கருவிகள். இதுதான் நல்ல பலனைக் கொடுக்குது.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரக் காரணம், இவை நம் காலத்தில் உருவான பாடல்கள் இல்லை. பல தலைமுறைகள் கடந்து நம் கையில் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை நாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகும்போது, அவற்றில் மாற்றங்களைச் செய்துவிடக் கூடாது. அப்போதுதான் சிதையாமல் இந்தப் பாடல்கள் அடுத்த தலைமுறைக்குப் போகும்.

இதில் வரிகள்தான் முக்கியம் என்பதால்தான் லிரிக் வீடியோவாகவே செய்தோம். சில நேரங்களில் அந்த வரிகளை எழுதும்போது சில எழுத்துக்கள் தவறாகி இருக்கிறது. ‘தி’ என்பதற்கு பதிலாக ‘த’ என்று வந்துவிடும்.

அப்லோடு ஆகியபிறகு, பார்வையாளர்கள் கமென்ட்களில் சுட்டிக்காட்டுவார்கள். உடனே மொத்த வீடியோவையும் டவுன் செய்துவிட்டு, பிழையைச் சரிசெய்து மீண்டும் ஏற்றுவோம். அதில் சமரசமே கிடையாது.

இந்த சீரீஸ், நிறைய கவனம் பெற்றிருக்கிறது. திரைத்துறை மட்டுமல்ல. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இதற்கு வாழ்த்து தெரிவிக்கிறாங்க. நவீன இசை மட்டுமே கேட்கிற தலைமுறையும் இதைக் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. இதெல்லாம்தான் இதைத் தொடர்ந்து செய்ய ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.’’

மனதைத் தொடும் இசையை வழங்கும் ஜிப்ரானுக்கு வாழ்த்துகள் சொல்லி விடை பெற்றோம்.

நால்வர் காட்டிய வழி!

சைவப் பெருமக்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தில்லை ஆலயத்துக்குள் தனித் தனி கோபுர வாயில்கள் வழியே சென்று இறைவனை தரிசித்தனர்.

சம்பந்தர் தெற்குக் கோபுர வாயில் வழியா கவும், நாவுக்கரசர் மேற்குக் கோபுர வாயில் வழியாகவும், சுந்தரர் வடக்குக் கோபுர வாயில் வழியாகவும், மாணிக்கவாசகர் கிழக்குக் கோபுர வாயில் வழியாகவும் சென்றனர். எந்த வழியே சென்றாலும் இறுதியில் நாம் சென்றடையும் இடம் இறைவனது திருவடி என்பதைக் காட்டவே, இப்படி நான்கு வழிகளில் சென்றனர்.

சம்பந்தர் - ‘சத்புத்ர மார்க்கம்’ எனும் தந்தை மகன் நெறியிலும், நாவுக்கரசர் - ‘தாச மார்க்கம்’ எனும் ஆண்டான் -அடிமை நெறியிலும், சுந்தரர் - ‘சக மார்க்கம்’ எனும் தோழமை நெறியிலும், மாணிக்கவாசகர் ‘சன்மார்க்கம்’ எனும் தலைவன் -தலைவி நெறியிலும் நின்று இறைவனை வழிபட்டு முக்தி பெற்றனர்.

- எம்.வி.குமார், மதுராந்தகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism