Published:Updated:

தமிழ்நாட்டு ‘கானா’வை பரப்ப, வெளிநாட்டு ‘ராப்’!

ரூபிணி, கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
ரூபிணி, கோபிநாத்

மாத்தியோசித்த வடசென்னைப் பாடகி

தமிழ்நாட்டு ‘கானா’வை பரப்ப, வெளிநாட்டு ‘ராப்’!

மாத்தியோசித்த வடசென்னைப் பாடகி

Published:Updated:
ரூபிணி, கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
ரூபிணி, கோபிநாத்

“ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி ராப் பாடல்கள், வெளிநாட்டு கலாசாரத்தோட பிரதிபலிப்பா இருந்துச்சு. நம்முடைய நாட்டுப்புற பாடல்களும் கலாசாரத்தைப் பரப்ப உருவானவைதான். ஆனா, தமிழ்ல இருக்குறதாலயே நாட்டுப்புறப் பாடல்களுக்கும், கானா பாடல்களுக்கும் இன்னமும் முழுமையான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கல. அதனால நாட்டுப்புற பாடல், கானா பாடல் உள்ளிட்ட தமிழ்க் கலாசாரத்தை உலகம் முழுக்கப் பரப்ப, வெஸ்டர்ன் இசையை நான் தேர்வு பண்ணேன்” - உணர்ச்சிபூர்வமாக ஆரம்பிக்கிறார் ரூபிணி.

ரூபிணியும் அவருடைய கணவர் கோபிநாத்தும் ராப் பாடும் முதல் இந்திய தம்பதியர். ‘மிஸஸ் கோ அண்ட் மிஸ்டர் கோ' என்ற பெயரில் இவர்கள் ராப் இசை பாடும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பிரபலம்.

உடல் முழுவதும் டாட்டூ, மாடர்ன் ஆடைகள், வித்தியாச மான ஹேர் ஸ்டைல் என ராப் பாடகர் களுக்கான பொது வான இலக் கணத்தை உடைத்து பட்டுப்புடவை, மல்லிகைப்பூ என கலக்குகிறார் ரூபிணி. வெற்றிக் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் இருவரும்.

தமிழ்நாட்டு ‘கானா’வை பரப்ப, வெளிநாட்டு ‘ராப்’!

“ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் சென்னை. நான் வடசென்னை பொண்ணு. நான் பார்த்து, ரசிச்ச, என் மனசுல பதிஞ்சிருந்த எங்க மக்களோட கலா சாரத்தை பாட்டா எழுதி வைப்பேன். எத்திராஜ் காலேஜ்ல பி. ஏ சுற்றுலாத்துறை படிச்சேன். கலைத்துறையில ஏதாவது சாதிக்கணும்ங்கிற ஆசையில கலாசாரம் சார்ந்து நிறைய விஷயங்களைத் தேடித்தேடி படிச்சபோதுதான் ராப் இசை எனக்கு அறிமுகம் ஆச்சு'' என்ற ரூபிணி, அந்தப் பயணம் பற்றி பேச ஆரம்பித்தார்.

``வெஸ்டர்ன் கலாசாரத்துல இருக்குற ராப் பாடல்களை தமிழ் கலாசாரத்தை மையப்படுத்தி பாடினா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல ஒரு தமிழ்ப்பாடலை எழுதி ராப் ஸ்டைல்ல பாடினேன். எல்லாரும் பாராட்டினாங்க. அந்த ஊக்கத்துல நிறைய பாடல்களை எழுதி, பாட ஆரம்பிச்சேன். எதேச்சையா ஒரு நிகழ்ச்சியில ராப் பாடகரான கோபி நாத்தை சந்திச்சேன்” என்று ரூபிணி நிறுத்த, கணவர் கோபிநாத் தொடர்கிறார்.

``ரெண்டு பேருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரி இருந்ததால கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பணம் குறைவா கிடைச்சாலும் பரவாயில்லைனு நிறைய இசை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பிச் சோம். நானும் ராப் சிங்கர்தான். ஆனா மனைவிக்காக இசை நிகழ்ச்சியில் பீட் பாக்ஸிங் (மூச்சுக் காற்றைப் பயன்படுத்தி வாயின் மூலம் இசைக்கருவிகளின் ஓசையை எழுப்புவது) பண்ண ஆரம்பிச் சேன். எங்களைக் கேலியா பார்த்தவங்க மனநிலையை, மேடையேறுன சில நிமிஷத்துலயே ரூபிணி மாத்திருவாங்க” என்கிறார் பெருமையாக.

தமிழ்நாட்டு ‘கானா’வை பரப்ப, வெளிநாட்டு ‘ராப்’!

“ராப் பாடல்களுக்கான அடையாளத்தை மாத்துன எனக்கு மக்களோட மனசை மாத்துறது இன்னுமே சவாலாதான் இருக்கு. சேலை கட்டிட்டுதான் ராப் பாடுவேன். ‘இந்த டிரஸ்ல ராப் பாடப் போறீங்களா’னு வித்தி யாசமா பார்ப்பாங்க. திறமைக்கும், உடைக்கும் சம்பந்தம் இல்லைனு புரியவைக்க இப்பவும் முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். தமிழ் கலாசாரத்தை ராப் மூலமா உலகம் முழுக்க பரப்பணும். திரைப்படங்கள்ல பாடணும், ராப் பாடும் பெண்கள் நிறைய பேரை உருவாக்கணும்னு நிறைய கனவுகள் இருக்கு. நம்பிக்கையோட உழைச்சிட்டிருக்கோம்'' என்று விடைபெறுகிறார்கள் ராப் தம்பதியர்.