Published:Updated:

``அரசியல் மட்டுமல்லாம மனித உணர்வுகளையும் இசை மூலமா பதிவு செய்யணும்!" - `ஒத்த செவுரு' ஓப்பன் டாக்

'ஒத்தசெவுரு'- தருண், பிரவேகா

`இன்னைக்குத் தேதியில சினிமாங்கிறது பவர்ஃபுல்லான மீடியா. தனியிசைக் கலைஞர்கள் சினிமாக்குள்ள போகும்போது இயக்கம், கலைனு அவங்க கத்துக்கிறதுக்கான வெளி விரிவடையும். இதுதான் சினிமாக்குள்ள போனா கிடைக்கிற ப்ளஸ்.’

``அரசியல் மட்டுமல்லாம மனித உணர்வுகளையும் இசை மூலமா பதிவு செய்யணும்!" - `ஒத்த செவுரு' ஓப்பன் டாக்

`இன்னைக்குத் தேதியில சினிமாங்கிறது பவர்ஃபுல்லான மீடியா. தனியிசைக் கலைஞர்கள் சினிமாக்குள்ள போகும்போது இயக்கம், கலைனு அவங்க கத்துக்கிறதுக்கான வெளி விரிவடையும். இதுதான் சினிமாக்குள்ள போனா கிடைக்கிற ப்ளஸ்.’

Published:Updated:
'ஒத்தசெவுரு'- தருண், பிரவேகா

கனவுகள் சுமக்கும் கோடம்பாக்கத்தின் ஒரு குறுகிய மாடி அறைக்குள் பரந்து இறைந்திருக்கிறது `ஒத்தசெவுரி'ன் இசை. பிரவேகா மற்றும் தருண் எனும் இரு நண்பர்கள் இணைந்து உருவாக்கிய இண்டிபெண்டன்ட் பாண்ட்.

பிரவேகா, தருண்
பிரவேகா, தருண்

சமீபத்தில், `சென்னை ஸ்மார்ட் சிட்டி’ புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக, பரபரப்பான பாண்டி பஜாரில் ஸ்ட்ரீட் மியூசிக் நடத்த, மக்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்தது. இதமான மாலை வேளையில் குதூகலிக்கும் இசையோடு அவர்களை சந்தித்துப் பேசினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஒத்தசெவுரு' உருவான கதை?

தருண், பிரவேகா
தருண், பிரவேகா

``நானும் தருணும் ஆர்க்கிடெக்சர் ஸ்டூடண்ட்ஸ். இயற்கை, சமூகப் பிரச்னை, எங்களுடைய குழப்பங்கள்னு எங்களைச் சுத்தி நடக்கிற பல விஷயங்களைக் கவனிச்சு, எங்களுக்குப் பிடிச்ச இசையில, எளிய வரிகளைச் சேர்த்து பாடிட்டு வந்தோம். அது எங்க நண்பர்களுக்கும் பிடிச்சது. ஒரு நாள் மதுரை, வைகை ஆறு பக்கத்துல இருந்த ஒத்த சுவர் மேல உட்கார்ந்து பாடிக்கிட்டிருந்தோம். அப்போ நண்பர் ஒருவர் எங்க மியூசிக் பாண்ட்ட ரிஜிஸ்டர் பண்றதுக்காக, `பாண்டுடைய பெயர் என்ன’னு கேட்டார். அந்த ஒத்த சுவர்ல நாங்க இருந்ததால அதையே பாண்டுக்குப் பெயரா வெச்சிட்டோம்."

சமீப காலமாதான் இண்டிபெண்டன்ட் இசை நம்ம ஊர்ல பரவலா கவனம் பெற ஆரம்பிச்சிருக்கு. இந்த வளர்ச்சி எப்படி இருக்கு?

தருண், பிரவேகா
தருண், பிரவேகா

``கானா, கிராமியப் பாடல்கள்னு தனியிசை நம்ம ஊருக்குப் புதுசு கிடையாது. ஆனா, அது ஒரு ஒழுங்குமுறைக்கு வந்து, பரவலா கவனம் பெற ஆரம்பிச்சிருக்கிறது நீங்க சொல்ற மாதிரி சமீப காலமாதான். குறிப்பா, இணைய பயன்பாடு பரவலா இருக்கிறதும் இதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாம, சென்சார்ங்கற விஷயம் இதுல இல்லை. தனியிசைக் கலைஞர்கள் என்ன சொல்லணும்னு நினைக்கறாங்களோ, அந்தக் கருத்தை எந்தவித தடையும் இல்லாம சொல்றதுக்கான வெளியும், அது மக்கள்கிட்ட போய் சேர்றதுக்கான வழியும் கிடைச்சிருக்கு. இது மூலமா இசை மக்களை இணைக்கும்."

சினிமா இசை, பாடல்கள் தாண்டி தனியிசைக்கான தேவை என்னவா இருக்கு?

casteless collective
casteless collective

``அடிப்படையில சினிமா இசைங்கிறது அந்தக் கதைக்கான தேவையாதான் இருக்கும். `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' மேடையில மக்கள் பிரச்னைகள், அரசியல்னு பாடல்களா பண்ணின பல விஷயங்கள் சினிமா இசையில் கொண்டு வர்றதுக்கான ஸ்பேஸ் இன்னும் கிடைக்கலை. அரசியல்னு மட்டுமல்லாம தனி மனிதனுக்கான குழப்பங்கள், சந்தோஷம் இவற்றையெல்லாமும் இசை மூலமா ஜாலியா பதிவு செய்யலாம்."

தனியிசையை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கிறது எவ்வளவு சவாலானதா இருக்கு?

தருண், பிரவேகா
தருண், பிரவேகா

``என்னதான் இணைய பயன்பாடு இப்போ அதிகரிச்சிருந்தாலும், இளைஞர்கள்கிட்டதான் தனியிசை அதிகமாபோய்ச் சேர்ந்திருக்கு. அதைத்தாண்டி பொதுஜனத்துக்கும் போய் சேரணும்; அவங்களும் இதை ரசிக்கணும்கிறதுதான் முக்கியமான விஷயம். அதுக்குத் தனியிசைக் கலைஞர்கள் ஒவ்வொரு ஊருக்கும் பயணம் செய்து, மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும்கிறதுதான் அடிப்படை. ஸ்ட்ரீட் மியூசிக், ஆல்பம், பல ஊர்களுக்குப் பயணம்னு எங்களாலான முயற்சிகளை செஞ்சிகிட்டிருக்கோம். இதுக்கு ஃபினான்ஷியல் பிரச்னைகளும் இருக்கு. இந்த இசையை சரியான ஒரு பிசினஸ் மாடலா எடுத்துட்டுப் போகும்போது அதோட ரீச் இன்னும் பெருசா இருக்கும்."

தனியிசைக் கலைஞர்கள் சினிமா துறையில இசையமைப்பாளர்கள் ஆகணும்கிறதுதான் வெற்றிக்கான அடையாளமா இருக்கு. அதுதான் உண்மையா?

தருண், பிரவேகா
தருண், பிரவேகா

``இதுதான் எல்லை, வெற்றினு இசையை நிர்ணயிக்க முடியாது. அதனால இந்த எண்ணமும் தப்பு. அதுமேல எனக்கு நம்பிக்கையும் இல்லை. இன்னைக்குத் தேதியில சினிமாங்கிறது பவர்ஃபுல்லான மீடியா. தனியிசைக் கலைஞர்கள் சினிமாக்குள்ள போகும்போது இயக்கம், கலைனு அவங்க கத்துக்கிறதுக்கான வெளி விரிவடையும். இதுதான் சினிமாக்குள்ள போனா கிடைக்கிற ப்ளஸ். அதைத்தாண்டி இசை பத்தி சொல்லணும்னா, அந்தக் கதைக்குத் தேவையான இசையை மட்டும்தான் ஒரு இசையமைப்பாளரால தர முடியும். சினிமாவுல செட் ஆகறதும், இல்லை அதுக்கான ஃபினான்ஷியல் சப்போர்ட் எடுத்துகிட்டு தனியிசை, சினிமா இசைனு ரெண்டுமே பண்றது ஆர்ட்டிஸ்ட்டைப் பொறுத்தது."

நடிகர் விஜய்சேதுபதியோட தொலைக்காட்சி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டீங்க. உங்களுடைய ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது. விஜய்சேதுபதி என்ன சொன்னார்?

விஜய் சேதுபதியுடன் பிரவேகா, தருண்
விஜய் சேதுபதியுடன் பிரவேகா, தருண்

``'நம்ம ஊரு ஹீரோ' மாதிரியான நிகழ்ச்சியில பங்கெடுக்க அழைப்பு வந்தபோது நிறைய மனிதர்களைச் சந்திக்கப்போறோம், நிறைய பேர்கிட்ட எங்களுடைய கருத்து போய்ச் சேர போகுதுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தது. `இன்னும் பெரிய இடத்துக்குப் போகணும்'னு விஜய் சேதுபதி வாழ்த்து சொன்னார்" என்றார்கள்.

நாமும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு இசையோடு விடைபெற்றோம்!