Published:Updated:

`கால்ல அடிபட்டாலும், வாய்ல அடிபடலையேனு இருப்போம். ஆனா, இப்போ...!'- RJ-க்களும் ஊரடங்கும்

RJ-க்களும் ஊரடங்கும்
RJ-க்களும் ஊரடங்கும்

`அப்புறம்' என ஒரு வார்த்தையோடு போனாலே, ஆயிரம் வார்த்தைகளை அள்ளிக்கொடுத்து அனுப்புவார்கள் ஆர்ஜேக்கள். அப்படி ஒரு காலத்தில்(!) எந்நேரமும் மைக்கும், ஸ்பீக்கருமாக இருந்த 4 ஆர்ஜேக்களிடம், `அப்புறம் ஊரடங்கு நாள்கள் எப்படிப் போகுது' என நான்கு வார்த்தைகளோடு போனைப் போட்டோம்...

`மிர்ச்சி' ரமணா:

``கால்ல மோசமா அடிப்பட்டிருந்தாலும், வாயில அடிபடலையேனு ஸ்டூடியோ போய் ஷோ பண்ற ஆள் நான். லீவும் எங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படி இருக்குறப்ப, ஒர்க் ஃப்ரம் ஹோம்லாம் எனக்கு ரொம்பவே புதுசு. சாஃப்ட்வேர் மூலமா, வீட்ல உட்கார்ந்துகிட்டே ஸ்டூடியோவை அக்செஸ் பண்ணமுடியும். அப்படித்தான் ஓடிட்டு இருக்கு. இது சவாலான ஒரு விஷயம். ஆனா, மக்களுக்கும் எங்களுக்குமான கம்யூனிகேஷன் சமூகவலைதளங்கள்ல முன்னவிட ரொம்ப அதிகமாயிருக்கு. மக்களே நிறைய கன்டன்ட்கள் தர்றாங்க. அதைதான், நிகழ்ச்சிகள்ல உள்ளடக்கிப் பேசுறோம்."

Mirchi Ramana
Mirchi Ramana

``ஸ்டூடியோவில் உட்காந்து பேசுற குவாலிட்டி கிடைக்காம இருந்தாலும், இது வேற மாதிரி ஓர் உணர்வைத் தருது. நான் ஹால் அல்லது பெட்ரூம்ல உட்கார்ந்து ஷோ பண்றப்ப, பக்கத்து வீட்ல என் ஷோவைக் கேட்டுட்டு இருக்குற மாதிரி தோணும். நாங்க ஸ்டூடியோல ஷோ பண்றப்போ, மக்கள் அதை வெவ்வேற இடங்கள்ல இருந்து கேப்பாங்க. இப்போ மக்களோடு மக்களா, வீட்ல இருந்துகிட்டே பேசுறது அதிக நெருக்கத்தை உருவாக்கியிருக்கு. அது புதுசாவும் அழகாவும் இருக்கு. எவ்வளவுதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னாலும், லாக் டெளன் முடிஞ்சு ஸ்டூடியோவுக்குள்ள போய் ஷோ பண்றப்ப வர்ற சந்தோஷம் இருக்கே. ஆஹா!"

`ராக்கோழி' விஷ்ணு ப்ரியா :

``ஸ்டூடியோவில் எங்களுக்கு முன்னால் இருக்குற மைக், ஸ்பீக்கர், சிஸ்டம் இதெல்லாம்தான் எங்களுக்கு சொர்க்கம், பத்து வருஷமா மைக்கை பிடிச்சே பேசிட்டு இப்ப வீட்டுல உட்கார்ந்து நாலு சுவத்த மட்டும் பார்த்துகிட்டு ஷோ பண்ணா, கை உதறது, வாய் உளறுது. அடுத்த நாள் ஷோவுக்கு முந்தின நாள் அர்த்த ராத்திரியில்தான் ரெக்கார்டிங் பண்ணுவேன். ஏன்னா, அப்பதான் இரைச்சல் கம்மியா இருக்கும். ரெக்கார்டிங் எல்லாம் முடிச்சுட்டு, ஹெட்செட் மாத்தி கேட்டா தூரத்துல ஒரு நாயி, `ஊ...'னு ஊளையிட்டிருக்கும். அப்புறம் என்ன, அந்த ரெக்கார்டிங்கையும் `ஊ'ன்னு ஊதிவிட்டு மறுபடியும் ரெக்கார்ட் பண்ண வேண்டியதுதான். இதுக்கு இடையில், என் குழந்தைங்களும் என்னை ஒருவழி பண்ணிடுவாங்க."

Rakkozhi Vishnu Priya
Rakkozhi Vishnu Priya
``விஜய்-யின் மனம் எனக்குத் தெரியும்... `மாஸ்டர்' நிச்சயம் OTT-யில் ரிலீஸ் ஆகாது!'' - `மெர்சல்' முரளி

``ஆபீஸ்ல ஒர்க் பண்றதும், வீட்டுல இருந்தே ஒர்க் பண்றதும் இக்கரைக்கு அக்கரை பச்சைன்ற மாதிரிதான் இருக்கு. உங்களுக்கு என்னப்பா ஒர்க் ஃப்ரம் ஹோமாச்சே, குடுத்து வெச்சவர்னு நானே என் ஷோவுல பலமுறை சொல்லிருக்கேன். ஆனா, அதோட கஷ்டம் புரியுது. ஹவுஸ் ஒயிஃபா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு இப்போதான் தெரியுது. `உங்க சேவை. இந்த நாட்டுக்குத் தேவை. உடனே ஓடியாங்க'ன்னு கூப்பிட்டா, வெளியே ஓடி வந்துடுவேன். எது எப்படியோ இந்த ஊரடங்கு நாள் முடிச்சு வர்றப்போ எல்லோரும் புது மனுஷனாதான் வெளியே வரப்போறோம்."

`லவ்குரு' ராஜவேல்:

``ஒர்க் ஃப்ரம் ஹோம், ரொம்ப போரிங்கா போகுது. சவுண்ட் ப்ரூப், ஸ்டூடியோ குவாலிட்டி இதெல்லாம்தான் ரேடியோ இண்டஸ்ட்ரிக்கு ரொம்ப முக்கியம். ரெக்கார்டிங் பண்ணிட்டு இருக்கப்போதான் என் பொண்ணு கத்துறது, பக்கத்து வீட்டுக்காரங்க மோட்டர் போடுறதுன்னு பல விஷயங்கள் நடக்குது. AIR வரலாற்றுலேயே 1920-க்கு அப்பறம், இந்த 100 வருஷங்கள்ல ஆர்.ஜே-க்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் பண்றது இதுதான் முதன்முறை."

Love guru Rajavel
Love guru Rajavel

``ஊரே ஊரடங்குல இருக்கறபோ லவ், எமோஷன், ஃபீலிங்ன்னு பேசிட்டு இருந்தா மக்கள் பயங்கர காண்டாகிடுவாங்க. அதனால், சமூகத்தை லவ் பண்றதுதான் பெரிய லவ்வுங்கிறதை மையப்படுத்தி நிகழ்ச்சிகளைக் கொண்டு போயிட்டு இருக்கேன். இந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற தகவல்களை மக்களுக்கு தினமும் கொண்டு போய் சேர்க்கணும்ங்கிற சவாலும் பொறுப்பும் முன்னாடி விட அதிகமாகியிருக்கு. என்னதான் ஃபேஸ்புக்ல லைவ் போனாலும், ஆபீஸ்ல உட்காந்து லைவ்ல மக்கள் கிட்டே பேசுறது மாதிரி வராது. வரவும் இல்ல! நிறைய புத்தகங்கள் படிக்கணும்னு வாங்கி வெச்சு படிக்காமலேயே இருந்தேன். இப்போ படிக்கத் தொடங்கிட்டேன்."

ஆர்ஜே டோஷிலா:

``நமக்குப் பிடிச்ச சில விஷயங்களை, நேரம் இல்லாத காரணத்தாலேயே செய்யாம இருந்திருப்போம். அதை எல்லாம் செஞ்சு பார்க்குறதுக்கான நேரமா இதைப் பார்க்குறேன். திரைக்கதை எழுதணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. இப்போ எழுத ஆரம்பிச்சுருக்கேன். வீட்டு வேலையும் சேர்த்து பண்றதால, நேரம் கிடைக்குறது இல்லைன்னு சொல்றாங்க. எனக்கு நிறைய நேரம் கிடைக்குது. ஒரு நாளைக்கு ரெண்டு படங்கள் பார்க்குறேன்னா பாருங்களேன். டெய்லி ஆபீஸ்க்கு கிளம்பணும்ங்குற டென்ஷன் இல்ல. கிடைக்குற டிரெஸ்ஸை போட்டுட்டு ஜாலியா வீட்ல இருந்தபடியே ஷோ பண்ணி அனுப்பலாம்.

RJ Toshila
RJ Toshila
``இந்தக் கலைஞனின் எதிர்பார்ப்பு அந்தக் கைத்தட்டல்தான்!'' - `உத்தம வில்லன்' ஏன் எடுத்தார் கமல்ஹாசன்?!

ஒரு பழக்கம் உருவாக 21 நாள் ஆகுமாம். அது தெரிஞ்சுதான் லாக் டெளனை 21 நாளைக்கு வெச்சிருப்பாங்களோ என்னவோனு முதல்ல யோசிச்சேன். இப்போ 21-வது நாளெலாம் தாண்டி போயிட்டு இருக்கு. ரொம்ப ஓடிக்கிட்டே இருந்த எனக்கு `மச் நீடட் ப்ரேக்'கா இந்த ஊரடங்கு நாள்கள் அமைஞ்சிருக்கு. குடும்பங்களோடு ஒண்ணா இருக்குறது சின்ன வயசுல எல்லாரும் ஒண்ணா விளையாண்ட ஞாபகத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்குது. என்னதான் வீட்ல ஜாலியா இருந்தாலும், சோஷியல் டிஸ்டென்ஸிங் அவசியம்!"

அடுத்த கட்டுரைக்கு