Published:Updated:

"`நான் உனக்கு மகனா பிறக்கணும்டா'னு என் கணவர்கிட்ட சொன்னார்!"- மாணிக்க விநாயகம் குறித்து ராஜலட்சுமி

ராஜலட்சுமி செந்தில்கணேஷ் - மாணிக்க விநாயகம்
News
ராஜலட்சுமி செந்தில்கணேஷ் - மாணிக்க விநாயகம்

"எப்போ எங்களை சந்திச்சாலும், 'காற்றுள்ள போதே தூற்றுக்கொள்'னு அப்பா சொல்லுவாங்க. விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும்னு எங்ககிட்ட அடிக்கடி சொல்லுவாங்க!" - ராஜலட்சுமி

பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். தமிழ் உட்பட பல மொழிகளில் கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவருடனான நினைவலைகள் குறித்து மக்களிசை பாடகர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
மாணிக்க விநாயகம்
மாணிக்க விநாயகம்

"எங்களோட மானசீக குருன்னு தான் அப்பாவை சொல்லணும். எங்களுக்கும், அவருக்கும் ஏதோவொரு வகையில் தொடர்பு இருந்துட்டே இருந்திருக்கு. நான் மீடியாவிற்குள் அறிமுகமாவதற்கு முன்னர், +2 படிச்சிட்டு இருக்கும்போது வேதாரண்யத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். அப்பா அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. அங்கே என் பாட்டை கேட்டுட்டு மேடையிலேயே, 'ரொம்ப நல்லா பாடுனம்மா... கண்டிப்பா பெரிய ஆளா வருவ'ன்னு பாராட்டினார். அந்த நிகழ்ச்சி சிடியை ரொம்ப நாள் பத்திரமா வெச்சியிருந்தேன். வீடு மாற்றும்போது எங்கேயோ மிஸ் ஆகிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூப்பர் சிங்கரில் என் கணவர், பைனலில் பாடும்போதும் அப்பா விருந்தினரா வந்திருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும் அப்பா அவர்கிட்ட அந்த மேடையிலேயே, 'அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உனக்கு மகனா பிறக்கணும்!'னு சொன்னார். அந்தத் தருணம் எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலா இருந்துச்சு.

மாணிக்க விநாயகம் குடும்பத்தினருடன்
மாணிக்க விநாயகம் குடும்பத்தினருடன்

சமீபத்தில், அப்பாவுடைய பிறந்தநாள் விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டிருந்தார். அங்கே சினிமாத்துறையில் பிரபலமான பெரிய, பெரிய இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எல்லாரும் வந்திருந்தாங்க. எல்லாரையும் எப்படி வரவேற்று பேசினாரோ அப்படியேதான் எங்களையும் வரவேற்று உபசரிச்சார். அவ்வளவு எதார்த்தமா எல்லாரையும் கவனிச்சிக்கிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போ எங்களை சந்திச்சாலும், 'காற்றுள்ள போதே தூற்றுக்கொள்'னு அப்பா சொல்லுவாங்க. விளையாட்டுத்தனமா இருக்கக்கூடாது எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும்னு எங்ககிட்ட அடிக்கடி சொல்லுவாங்க.

மாணிக்க விநாயகம்
மாணிக்க விநாயகம்

தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். அவர் மறைவு செய்தியை கேட்டதும் ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனாலும், தமிழ் இருக்கிற வரைக்கும் அவருடைய பாடல்கள் மூலம் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்றார்.