Published:Updated:

"தாராவி,நெல்லை,மலேசியா மண்ணின் இசைகளை வெட்டியெடுத்துப் பட்டை தீட்டும் உன்னதக் கலைஞன்!" #HBDSanthoshNarayanan

'இசை அரக்கன்' சந்தோஷ் நாராயணன்!

`ஆடி போய், ஆவணி வந்தால் டாப்பா வருவான்' வசனத்தை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர், சந்தோஷ் நாராயணன்.

"தாராவி,நெல்லை,மலேசியா மண்ணின் இசைகளை வெட்டியெடுத்துப் பட்டை தீட்டும் உன்னதக் கலைஞன்!" #HBDSanthoshNarayanan

`ஆடி போய், ஆவணி வந்தால் டாப்பா வருவான்' வசனத்தை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர், சந்தோஷ் நாராயணன்.

Published:Updated:
'இசை அரக்கன்' சந்தோஷ் நாராயணன்!

இசையுலகின் புதிய பாதையைத் திறந்த இளைஞன். எல்லாப் பாணிகளையும் கரைத்துப் பூசிய கலைஞன். காதொலிப்பான்களைக் காதலிக்க வைத்த இசைஞன். இசையின் அரக்கன். சந்தோஷ் நாராயணன்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யுவனும், ஹாரீஸும் நுனிக்கொம்பைத் தொட்டபின் தொடங்கியது, நம் காதுகளுக்குத் தீராப் பசி. இசை எனும் இன்பத் தேனை அள்ளிப் பருகிய காதுகள், இரைச்சல்களால் பட்டினியில் நொடிந்தன. அப்போது, தேன் கூட்டோடு விருந்தளிக்க வந்தவர்கள்தாம், ச.நா, அனி மற்றும் சிலர். இதுவே, தமிழ்த் திரையிசை எனும் பெரும் சகாப்தத்தின் ஆரம்பப்புள்ளி. அதில், சந்தோஷ் நாராயணன் முக்கியமான புள்ளி.

இசையுலகின் புதிய பாதையைத் திறந்த இளைஞன். எல்லாப் பாணிகளையும் கரைத்துப் பூசிய கலைஞன்.
இசையுலகின் புதிய பாதையைத் திறந்த இளைஞன். எல்லாப் பாணிகளையும் கரைத்துப் பூசிய கலைஞன்.

`ஆடி போய், ஆவணி வந்தால் டாப்பா வருவான்' வசனத்தை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர், சந்தோஷ் நாராயணன். `ஆடி போனா ஆவணி' என மெட்டமைத்து பாட்டுக் கட்டியவரைப் பூரணியோடு சேர்ந்து தமிழகமே ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தது. இடையில் ஏழு வருடங்கள், இன்றும் அந்த ஆச்சர்யம் அப்படியே!

ப்ரதீப்பும், கிடாரும்தான் சந்தோஷ் நாராயணின் ஆரம்பகால அடையாளங்கள். `ஆசை ஓர் புல்வெளி'யில் பெய்ததுதான், முதல் மழை. `மோகத் திரை'யில் பெய்தது, இரண்டாவது மழை. மீட்டிய கிடாரின் ஒலி, ப்ரதீபின் குரலோடு இணையும் இடமெல்லாம் சூடான காபியில் மழைத்தூறல் கலந்தாற்போல் அத்தனை இதம். அப்படியே `உயிர்மொழி'யின் `ஒரு முறை'யையும் ஒருமுறை கேட்டுவிடுங்கள். `பூ அவிழும் பொழுதில்' உண்டாக்கும் பேரனுபத்தை வர்ணிக்க, வெளியில் வார்த்தைகளே இல்லை. அந்தப் பாடலுக்குள் மட்டுமே இருக்கிறது. `என் மூச்சுக் குழலிலே உன் பாடல் தவழுதே... உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெறையுதே'. குமுதவள்ளியிடம் `ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்' எனக் கபாலி கலங்குமிடத்தில், நம் செவிகளுக்குள் மாயநதி பெருக்கெடுக்கும். `தூண்டில் மீனி'ல் `அழகிய முகம் பார்க்க... மெழுகெனக் கரைந்தேனே' என்ற வரிக்குப் பிறகு மனம், `இவைகள் இளமாலைப் பூக்களே புதுச்சோலை பூக்களே' எனக் 'கோடைக்காலக் காற்றை' ஏனோ முணுமுணுக்கும்.

எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா, நம்மைத் தொட்டது இதில் தொட்டிருப்பார், சந்தோஷ். அவர் ப்ரதீப்புடன் மட்டுமல்ல, மற்ற சில பாடகர்களுடன் சேர்ந்து அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். ராஜன், சந்திராவின் காதல்தான் `வடசென்னை'யின் ஒட்டுமொத்த ஆன்மா. அதை ஒற்றைப் பாடலில் சொல்லிவிட்டுப் போயிருப்பார். `பட்டாக்கத்தி தூக்கி மிட்டாய் நறுக்குற' எனும் சித்ஶ்ரீராமின் குரல், மிட்டாயினும் இனிமை. `காலா'வின் `கண்ணம்மா', `கொடி'யின் 'சுழலி', `குக்கூ'வின் 'பொட்டப்புள்ள' எனப் பட்டியல் நீளும்! சக்திஶ்ரீயின் குரலில் `அனல் காயும் பறை ஓசை நம் வாழ்வின் கீதம் ஆகிடுமே' என்ற வரியை மட்டும் கொஞ்சம் கேட்டுவிட்டு வருகிறேன்.

`பட்டாக்கத்தி தூக்கி மிட்டாய் நறுக்குற'
`பட்டாக்கத்தி தூக்கி மிட்டாய் நறுக்குற'

காதல் உருகி வழிந்தோடும் மெலடிகளைத் தரும் சந்தோஷ் நாராயணன், இன்னொரு பக்கம் குத்தாட்டம் போடவைக்கும் கானாவையும் தருவார். தாராவியோ, திருநெல்வேலியோ, மலேசியாவோ, மெட்ராஸோ... அந்த மண்ணின் இசையை வெட்டியெடுத்து பட்டைதீட்டித் தருவதில், சந்தோஷ் உன்னதக் கலைஞன். `ஆடி போனா ஆவணி'யில் ஆரம்பித்தது ஆளு கானா. `வடசென்னை'யின் `எப்படியம்மா', `அலங்காரப் பந்தலிலே', `மெட்ராஸி'ன் 'இறந்திடவா நீ பிறந்தாய்' எல்லாம் மரண கானா. கானா பாலா, சிந்தை ரேவு ரவி, டோலக் ஜெகன், பாலச்சந்தர், குணா போன்ற பெயர்களை எல்லாம் சென்னையைத் தாண்டி பரீட்சயமாக்கியவர், சந்தோஷ்தான். அவர்களுடைய ட்யூன் என்றால், அதற்கான புகழையும் அவர்களிடமே கொடுத்துவிடுவார். `காலா'வில் தாராவியின் கல்லி பாய்ஸ் டோப்டேலிக்ஸை அழைத்துப் பாடச் செய்தது, பரியனின் ஊரான புளியங்குளத்துரார்களைக் கொண்டு `வணக்கம் வணக்கமுங்க' பாட வைத்தது... என மண்ணின் கலைஞர்கள் பலர் மீது வெள்ளித்திரையின் வெளிச்சத்தைப் பாய்ச்சிருக்கிறார். அந்தோணிதாசன் எத்தனை ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார், சந்தோஷுடன் இணைந்து! `உலகம் ஒருவனுக்காக' பாடலில் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தைப் போலவே ஒருவர் ஆடிப் பாடிக்கொண்டிருப்பாரே... அவர்தான், டார்க்கி. `அக்காமக எனக்கொருத்தி இருந்தாளே' எனும் பிரபலமான தனியிசைப் பாடலுக்குச் சொந்தக்காரர்.

பாடல்களுக்கு நிகராக தீம் இசைகளும் பட்டையைக் கிளப்பும். இசைக் கருவிகளின் அதிர்வுகளிலுள்ள துல்லியம்தான், சந்தோஷின் பெரும் பலம். அதை விட்டுக்கொடுக்காமல் செமத்தியான, பல தீம்களைத் தந்திருக்கிறார். ஸ்லோமோஷனில் கதவைத் திறந்து, கூலிங் கிளாஸை எடுத்து மாட்டும் விஜய் சேதுபதி. இந்தக் காட்சியை நினைக்கும்போதே, மனதுக்குள் `சடன் டிலைட்' சடாரென ஒலிக்கத் தொடங்கிவிடும். சில்க் பாரில் அடிவாங்கிவிட்டு வரும் கதிரவனுக்கு, `அட ஏய் பங்காளி' என யாரும் இவ்வளவு மாஸாய் இசையமைத்து உத்வேகம் அளித்திருக்கமாட்டார்கள்.

பிரபலமாகவே பிறந்த ஆளடா
பிரபலமாகவே பிறந்த ஆளடா

`மியூசிகல் கேங்ஸ்டர் ஸ்டோரி' என `ஜிகர்தண்டா' விளம்பரப்படுத்தப்பட மிக முக்கியக் காரணம், சந்தோஷ். ப்ரதீப், ஜிப்ரீஷ் மொழியில் பாடிய `ஜிகர்' தீம்தான் படத்தின் ஆன்மா. அசால்ட் குமார், அழுகுனி குமார் ஆனதை விளக்கும் இந்த இசைத் துணுக்கைக் கேட்கும்போதெல்லாம் நாம் அழுகைக் குமாராய் மாறிவிடுகிறோம். `கிங் ஆஃப் தி ஸீ' தீமின் ஆரம்பத்தில் வரும், வல்லூறுகளின் சிறு `க்ரீச்' ஒலி, ராஜனின் மாவீரத்தைப் பறைசாற்றும். `வடசென்னை' தீமில் குரோதத்தின் கனல் கக்கும். கூடவே, துரோகத்தின் வலியையும் சொல்லும். `சுவர் தீம்' வேறொன்றுமில்லை, அது காவு வாங்கிய உயிர்களின் ஓலம்.

கானா பாலாவும், தீயும் சந்தோஷ் நாராயணின் செல்லக்குட்டிகள். `கானா' பாலாவை கானா பாடவைத்ததைவிட, வெவ்வேறு வகையான பாடல்களைப் பாட வைத்ததுதான், சந்தோஷின் மாஸ்டர் மூவ்! `அட்டக்கத்தி'யில் கானா பாடியவர், `பீட்சா'வில் `நினைக்குதே' என ப்ளூஸ் பக்கம் போயிருப்பார். `மெட்ராஸி'ன் 'காகிதக் கப்பல்' அப்படியே வேறும் ரகம். `கபாலி'யின் 'வீரத்துரந்தரா' ஓல்டு ஸ்கூல் ஹிப்ஹாப். `ஏய் சண்டைக்காரா' எனக் கிறங்கடித்த தீ, `கண்ணம்மா'வில் அசரடித்திருப்பார். சந்தோஷின் இந்த இரு செல்லக்குட்டிகளும் `மாடில நிற்குற மான்குட்டி'யில் புகுந்து விளையாடியிருப்பார்கள். `கோவிந்தம்மாவால'வுக்கு தனுஷ், `பிரபலமாகவே பிறந்த ஆளடா'வுக்கு சித்தார்த், `குட்டிப்பூச்சி'க்கு மாணிக்க விநாயகம், `அக்கம் பக்க'த்திற்கு மனோ, `வாடி ராசாத்தி'க்கு லலிதா விஜயகுமார், `டிங் டாங்'கிற்கு அருண்ராஜா காமராஜ்... என சபையில் சந்தோஷ் இறக்கும் பாடகர்களின் சீட்டு, நிச்சயம் ரம்மியடிக்கும். இதில், `கருப்பி என் கருப்பி' பாடிய சந்தோஷ் நாரயணனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

`செவிக்கு உணவில்லாத' நிலையை மாற்றவந்த சந்தோஷ் எனும் ரட்சிப்பருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!