Published:Updated:

``நைட் கிளப் சிங்கரா இசைப் பயணத்தைத் தொடங்கியபோது..." - உஷா உதுப் ஷேரிங்ஸ்

உஷா உதுப்
உஷா உதுப்

``எல்லோர் வாழ்க்கையிலும் சந்தோஷம் மட்டுமே சாத்தியமில்லை. என் குடும்பத்திலும் சில கஷ்டங்கள், கண்ணீர் பக்கங்கள் இருக்கு”

`பத்மஸ்ரீ' உஷா உதுப்... நாடறிந்த இசை பிரபலம். `நைட் கிளப்' பாடகியாக இசைப் பயணத்தைத் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தவர். அவரது சிறப்பு ஷேரிங்ஸ்

``ஆரம்பக்கால புறக்கணிப்புகள் உங்களைப் பெரிசா பாதிச்சிருக்கா..."

``பலரின் வெற்றிக்குப் பின்னாலும் அவமானங்கள் நிச்சயம் இருக்கும். அதுபோல என் இளமைக்காலத்துலயும் நடந்திருக்கு. பி.சுசீலா அம்மா மாதிரி என்னோட குரல் மென்மையானது இல்லை. அடர்த்தியா கணீர்னு இருக்கும். `உன்னோட ஹெவி வாய்ஸுக்கு மியூசிக் செட் ஆகாது'ன்னு சின்ன வயசுல இசை வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டேன். இப்படிப் பல நிகழ்வுகள் நடந்திருக்கு.

ஆனா, நான் வருத்தப்படலை. என் குரல் மற்றும் இசை ஆர்வத்தின்மேல எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. உலகில் எல்லோருக்கும் ஓர் இடமும் அடையாளமும் உண்டுன்னாலும், அதை நாமதான் உருவாக்கிக்கணும். அதுபோல, என் குரலுக்கு வெஸ்டர்ன் மியூசிக் சரியா இருக்கும்னு முடிவெடுத்தேன்.

உஷா உதுப்
உஷா உதுப்

நைட் கிளப் பாடகியா இந்தியா முழுக்கப் பாடினேன். நைட் கிளப் சிங்கரா என் இசைப் பயணத்தைத் தொடங்கியதைப் பெருமையாகவே சொல்வேன். மேலைநாடுகள்லயும் நம்ம நாட்டிலும் இன்னிக்கு மாறிவிட்ட நைட் கிளப் கலாசாரம்போல அப்போதைய 1960-களில் நான் பாடலை. மேற்கத்திய பாடல்களுடன், நம்மூர் சினிமா பாடல்களையும் என்னோட வெஸ்டர்ன் ஸ்டைலில் பாடுவேன்."

`லவ் இஸ் எ பியூட்டிஃபுல்' (மேல்நாட்டு மருமகள்), `வேகம் வேகம்' (அஞ்சலி)னு நிறைய தமிழ்ப் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தாங்க. வெற்றி வசமானது. அந்த ஓட்டம் 50 வருஷத்தைக் கடந்து இன்னும் நிக்கலை.

``உங்க பர்சனல் உலகம் எப்படியானது..."

``சிம்பிள் பர்சன் நான். வீட்டில் இருக்கும்போது பக்கா இல்லத்தரசி. வீடு சுத்தமா இருக்கணும். தினமும் அதிகாலை எழுந்து, காலை விடியலுக்குள் பூஜை முடிச்சுடுவேன். நல்லா சமைப்பேன். என் உடல்நலம் தவிர, குடும்பத்தாரின் உடல்நலனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.

எல்லோர் வாழ்க்கையிலும் சந்தோஷம் மட்டுமே சாத்தியமில்லை. என் குடும்பத்திலும் சில கஷ்டங்கள், கண்ணீர் பக்கங்கள் இருக்கு. மகிழ்ச்சிக்கு இணையா அவற்றையும் ஏத்துக்கிட்டு, கடந்து வர்றேன். அவையெல்லாம் வீட்டைத் தாண்டும் வரைதான். என் வெளியுலகம், மக்களை மகிழ்விக்கும் உற்சாகமான இசைப் பயணத்துக்கானது மட்டுமே!

> சென்னை, தமிழ் மக்கள்மீதுதான் எப்போதும் நினைவுகள் அலைபாய்வதன் பின்புலம்...

> பெரிய பொட்டு, அதில் ஓர் எழுத்து, பட்டுப் புடவை, தலை நிறைய மல்லிகைப் பூ... டிரெடிஷனலான உங்க உடையலங்காரமும், நீங்க பாடும் வெஸ்டர்ன் பாடல் காமினேஷனும் எப்படி சங்கமிச்சது?

> பல மணிநேர நிகழ்ச்சியா இருந்தாலும், இறுதிவரை ரசிகர்களை கைதட்டி ஆரவாரம் செய்ய வைக்கிறீங்க. ஷாரூக் கான் முதல் தனுஷ் வரை எல்லா உச்ச நட்சத்திரங்களையும் உங்களோடு மேடையில் டான்ஸ் ஆட வைக்கும் எனர்ஜி லெவல் இந்த வயதிலும் எப்படிச் சாத்தியமாகுது?

> அன்னை தெரசாவுடன் பழகிய நினைவுகள் பற்றி...

- அவள் விகடன் இதழுக்கு உஷா உதுப் அளித்த பேட்டியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3kP7zbz

பட்டுப் புடவையும் மல்லிகைப் பூவும்... எனக்கு அடையாளம் மட்டுமல்ல பாதுகாப்பும்கூட! - உஷா உதுப் https://bit.ly/3kP7zbz

உஷா உதுப்
உஷா உதுப்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு