நெல்சன் திலீப்குமார் இயக்கி, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் `டாக்டர்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மூலம் பிரபலமடைந்த `Soul of doctor' பாடல் பலருடைய மனதைக் கவர்ந்ததோடு, பலரின் ரிங்டோனாகவும் மாறியிருக்கிறது. அந்தப் பாடலை பாடிய நிரஞ்சனா ரமணனுடன் ஒரு நேர்காணல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``சினிமாவில் பாடும் வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?"
``15 வருஷமாக கர்னாடக சங்கீதம் கத்துக்கறேன். விஜய் டிவியில் ஒளிப்பரான சூப்பர் சிங்கரில் போட்டியாளராக கலந்துகிட்டேன். அந்த ஷோ முடிஞ்ச அடுத்த வருஷமே, திரைப்படங்களுக்கு பாடும் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. தெலுங்கில் சில பாடல்கள் பாடியிருக்கேன்.
`மருது' திரைப்படத்தில், `அக்கா பெத்த ஜக்கா வண்டி' பாடல்தான் தமிழ் திரைப்படத்துக்காக நான் பாடிய முதல் பாடல். அந்தப் பாட்டுக்கு கோரஸ் பாடத்தான் முதல்ல போயிருந்தேன். இமான் சார் டிராக் பாட சொன்னாங்க. ஆனா அதுவே மெயினா வந்தது கனவு மாதிரிதான் இருந்துச்சு. அந்தப் பாட்டில் ஆண் குரலுக்கான பாடல் வரிகளை அனிருத் சார் பாடினாங்க. முதல் பாடல்லயே நல்ல வரவேற்பு கிடைச்சுது. இப்போ அடுத்தடுத்த திரைப்படங்களுக்காகப் பாட ஆரம்பிச்சுருக்கேன்."
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`` `Soul of doctor' பாடல் வைரல் ஆகும்னு நினைச்சீங்களா?"
`` `So Baby' பாட்டில் வந்த ஸ்வரம் பாடணும்னு அனிருத் சார் கூப்பிட்டாங்க. ஏற்கெனவே வைரல் ஆன பாடலை என்னோட ஸ்டைல் கலந்து பாடுனேன். ரெக்கார்ட் பண்ணும் போது அனிருத் சார் ரொம்பவே கூலா இருந்தாங்க. நான் பாடின பாட்டு திரைப்படத்தில் வரும்னு கூட நம்பிக்கை இல்ல. ஆனால் ட்ரெய்லர்ல வரப்போகுதுனு சொன்னதும் ரொம்பவே ஹேப்பி ஆயிட்டேன். பொதுவா ட்ரெய்லருக்கு கர்னாட சங்கீதம் பயன்படுத்த மாட்டாங்க. இது புது முயற்சிதான். அதே பாடலை தீம் மியூசிக்காகவும் வெளியிட்டது கூடுதல் சந்தோஷம். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. புது முயற்சியை ரசிகர்கள் வைரலாக்கி, வேற லெவல்ல சந்தோஷப்படுத்திட்டாங்க. அந்தப் பாட்டு என்னுடைய 28-வது பிறந்தநாள் அன்னிக்கு ரிலீஸ் ஆச்சு. ரொம்பவே ஸ்பெஷலான பிறந்தநாள் பரிசுனுதான் அதை சொல்லணும்."
``தலைவி படத்தில் வின்டேஜ் பாடல் பாடிய அனுபவம் எப்படி இருந்துச்சு?"
`` `உந்தன் கண்களில் என்னடியோ' பாடல் வரிகளை முதல் முதலா பார்க்கும்போதே மனசுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. வின்டேஜ் பாட்டு பாடும் அனுபவம் புதுமையாவும் இருந்துச்சு. கொரோனா நேரத்துல எங்கேயும் வெளிய போக முடியல. ஸ்டூடியோ இல்லாம, என்னுடைய ஹோம் ஸ்டூடியோவில் நான் பாடினதை ஜி.வி சார் ஆன்லைன்ல கவனிச்சு ரெக்கார்டு பண்ணார். அவுட் புட் ரொம்பவே நல்லா வந்திருந்துச்சு. நிறைய பேர் பாராட்டுனாங்க."
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`` `Soul of doctor' பாடலுக்கு கிடைச்ச மிகப்பெரிய பாராட்டு?"
``நிறைய பேர் சமூக வலைதளங்களில் பாராட்டுறாங்க. எல்லாருடைய பாராட்டுமே முக்கியமானதுதான். எல்லாருக்கும் நன்றி. சிவகார்த்திகேயன் சார், `இன்னும் நிறைய பாடுங்க'னு சமூக வலைதளத்தில் வாழ்த்து சொல்லியிருந்தார். அது என் மனசுக்கு ஸ்பெஷலா இருந்துச்சு."
``உங்களுடைய அடுத்த புராஜெக்ட் பத்தி சொல்லுங்க?"
``சூர்யா சாரின் அடுத்த படமான `ஜெய் பீம்'ல தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நான்கு மொழிகள்லயும் பாடியிருக்கேன். ரஹ்மான் சார் மியூசிக்ல பாடணுங்கிறது நீண்ட நாள் ஆசை. நிச்சயம் நிறைவேறும்னு நம்புறேன்."