Published:Updated:

"அப்பாவைப் பற்றிக் கடந்த 5 வருடமாகத்தான் எனக்குத் தெரியும்!"- எஸ்.பி.பி.சரண் உருக்கம்

இசை நிகழ்ச்சி

மதுரையில் பாடகர் மனோவுடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண் தன் அப்பா எஸ்.பி.பி உடனான உருக்கமான தருணங்களை நினைவுகூர்ந்தார்.

Published:Updated:

"அப்பாவைப் பற்றிக் கடந்த 5 வருடமாகத்தான் எனக்குத் தெரியும்!"- எஸ்.பி.பி.சரண் உருக்கம்

மதுரையில் பாடகர் மனோவுடன் இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண் தன் அப்பா எஸ்.பி.பி உடனான உருக்கமான தருணங்களை நினைவுகூர்ந்தார்.

இசை நிகழ்ச்சி

"மதுரைக்காரங்க மாதிரி ரசனை உள்ளவர்கள் வேறு எந்த ஊரிலும் இல்லை" என்று மதுரையில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி

ரஜினியின் திரைப்படப் பாடல்களைக் கொண்டாடும் வகையில் மௌனராகம் இசைக்குழுவினர், மனோ - எஸ்.பி.பி.சரணை இணைத்து குரு சிஷ்யன் என்ற இசை நிகழ்ச்சியை மதுரை காந்தி மியூசியத்தில் நடத்தினார்கள்.

மேடையில் பேசிய எஸ்.பி.பி.சரண், "அப்பா, மதுரையில் கடைசியாக இங்குதான் கச்சேரி செய்தார். அவருக்குப்பின் இரண்டாவது முறையாக நான் இங்கு வருகிறேன்.

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி

மதுரைக்காரர்கள் பேருந்துகளில், கடைகளில், வீட்டு விசேஷங்களில் ரசனையுடன் பாடல்களைக் கேட்பார்கள். அதை நான் கவனித்திருக்குறேன். எந்தக் கலையாக இருந்தாலும் மதுரைக்காரங்க மாதிரி ரசனை உள்ளவர்கள் வேறு எந்த ஊரிலும் இல்லை. அவர்களுக்குப் பிடித்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம்.

மனோ அண்ணாவுடன் முதல் முறையாக மேடை ஏறுகிறேன். அப்பாவுடன் அவர் பயணித்த அளவுக்குக்கூட நான் பயணித்ததில்லை.

அவர்களைப் போன்றவர்கள் அப்பாவைப் பற்றி செல்லும்போதுதான் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு வாழ்நாள் முழுவதும் இசைக்காக மட்டுமே அவர் பயணித்தார்.

எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.

அப்பாவை பற்றி எனக்கே எதுவும் சொல்லத் தெரியாது. கடந்த 5 வருடங்களாகத்தான் நான் அவருடன் பயணிக்க ஆரம்பித்தேன். இந்த இசை வாய்ப்புகள் எல்லாம் அவர் போட்ட பிச்சை!

அப்பா இருந்தபோது இந்த இசைக்குழுவினர் என்னை அழைத்ததில்லை. அப்பாவைத்தான் அழைப்பார்கள். என்னை மேடை ஏற்றியது கிடையாது. இன்றைக்கு நான் இந்த மேடையில் ஏற அப்பாவின் ஆசியே காரணம்" என்று நெகிழ்ந்து பேசினார்.

பாடகர் மனோ
பாடகர் மனோ

அவரை வாழ்த்தி பேசிய மனோ, "எல்லோரும் சரணை ஆசீர்வதியுங்கள். மதுரைக்காரர்கள் ஆசீர்வதித்தால் அவர்கள் சிறப்பாக இருப்பார்கள். சரண் தற்போது தன் வழியை மாற்றிக்கொண்டு இசையில் சிறப்பாகப் பயணித்து வருகிறார்" என்று கூற, சரண் நெகிழ்ந்தார்.

பின்னர் இருவரும் தனித்தனியாகவும், இணைந்தும் ரஜினியின் படப் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.