Published:Updated:

நிழல் `கல்லி பாய்' ஆஸ்கார் வாங்குவதைவிட, நிஜ `கல்லி பாய்'கள் கிராமி வாங்கவேண்டும்! #TamilHipHop #Rap

கவிதை குண்டர்கள்

ராப் வெறும் வெற்றுக்கூச்சலா? போராட்டங்களில் முழங்கும் முழக்கங்களை, கூச்சல் என்றா சொல்வீர்கள்? ராப் இசையும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான். அது வாழ்க்கைக்கான போராட்டமாக இருக்கலாம்; இனத்திற்கான, மொழிக்கான போராட்டமாக இருக்கலாம்; கலைக்கான போராட்டமாகவும் இருக்கலாம்.

நிழல் `கல்லி பாய்' ஆஸ்கார் வாங்குவதைவிட, நிஜ `கல்லி பாய்'கள் கிராமி வாங்கவேண்டும்! #TamilHipHop #Rap

ராப் வெறும் வெற்றுக்கூச்சலா? போராட்டங்களில் முழங்கும் முழக்கங்களை, கூச்சல் என்றா சொல்வீர்கள்? ராப் இசையும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான். அது வாழ்க்கைக்கான போராட்டமாக இருக்கலாம்; இனத்திற்கான, மொழிக்கான போராட்டமாக இருக்கலாம்; கலைக்கான போராட்டமாகவும் இருக்கலாம்.

Published:Updated:
கவிதை குண்டர்கள்

குடிசையில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, ராப் எனும் கலை அறிந்து, குமுறல்களைச் சொற்களாய்க் கிறுக்கி, இசை கோத்து சொல்லிசை உருவாக்கி, பல செவிகளைத் தனதாக்கி, மேடை அடைந்து, மைக் பிடித்து `அப்னா டைம் ஆயேகா...' எனப் பாடித் தீர்த்த `கல்லி பாய்' திரைப்படம் கண்டங்கள் தாண்டி வரவேற்பு பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி!

மதுரை சோல்ஜர்ஸ்
மதுரை சோல்ஜர்ஸ்

நாஸி, டிவைன் எனும் இரண்டு ராப்பர்களின் உண்மைக் கதையைத் தழுவி புனைந்த திரைக்கதை அது. படம் வெளியான பின்புதான், அவர்கள் இருவரைப் பற்றியும் பலருக்கும் தெரிகிறது. அவர்களின் பழைய இசைத்துணுக்குகள் தூசி தட்டப்பட்டுப் பிரபலமடைகின்றன. அவர்களின் சக கலைஞர்கள் மீதும் புது வெளிச்சம் பாய்கிறது. `இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க. என் கண்ணுல படாம போயிட்டீங்களே' எனப் பலரும் ஆதங்கத்தை கொட்டிமுடித்துவிட்டு, கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் அந்தக் கலைஞர்களை. நாம் எப்போது அதைச் செய்யப்போகிறோம்? நம் ஊர் கலைஞர்களை, நம் கல்லி பாய்/கேர்ள்களை எப்போது கொண்டாடப்போகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராப் வெறும் வெற்றுக்கூச்சலா? நிச்சயமாக இல்லை. போராட்டங்களில் முழங்கும் முழக்கங்களைக் கூச்சல் என்றா சொல்வீர்கள்? ராப் இசையும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான். அது வாழ்க்கைக்கான போராட்டமாக இருக்கலாம்; அரசியல் போராட்டமாக, இனத்திற்கான, மொழிக்கான போராட்டமாக இருக்கலாம்; கலைக்கான போராட்டமாகவும் இருக்கலாம். ஆரம்பத்தில், அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகத்தான் ராப் பாடப்பட்டது.

அறிவு மற்றும் ஆஃப்ரோ
அறிவு மற்றும் ஆஃப்ரோ

`ஆஃப்ரோ அறிவு' இணையின் `கள்ளமௌனி' பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். என்னையும் உங்களையும் நாம் வாழும் சமூகத்தையும் அவ்வளவு நுணுக்கமாய் நையாண்டி செய்திருப்பார்கள். ஆனால், அதை நாம் ரசித்து கேட்டுக்கொண்டிருப்போம். இது ஒரு கலைஞனால்தானே முடியும்! `நான் ஸ்னோலின் பேசுறேன்...' எனும் பாடலில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட ஸ்னோலினின் குரலாக ஒலித்திருப்பார்கள். அவர்கள் எப்போதோ அதிகாரத்தின் காலரைப் பிடித்து கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நாம்தான் அவர்களின் கேள்விகளைக் கேட்கத் தொடங்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகம் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, மலேசியா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள் எனத் தமிழ் ராப்பர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நல்ல பாடல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த `மதுரை சோல்ஜர்ஸ்'ன் ராப் பாடலை அமெரிக்கர் ஒருவர் மனதாரப் புகழ்கிறார். குமரியைச் சேர்ந்த 82 வயது வில்லுப்பாட்டு கலைஞர் பூங்கனி அம்மாளுடன் சேர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த ராப் கலைஞர் கலைவாணி (எ) லேடி காஷ் `வில்லுப்பாட்டு' எனும் ராப் பாடல் தருகிறார். இந்த இசை வடிவமே, அமெரிக்க நாடுகளில் உருவானது. இப்படித்தான் உலகம் இணைகிறது. இசையின் கீழ்தான் அனைவரும் ஒன்றாகிறோம், வெறும் மனிதர்களாகிறோம்.

ஏ.டி.கே மற்றும் ஶ்ரீ ராஸ்கோல்
ஏ.டி.கே மற்றும் ஶ்ரீ ராஸ்கோல்

ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (எ) ஏ.டி.கே, இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப்பர். நிறைய சினிமாப் பாடல்களும் பாடியிருக்கிறார். மற்ற ராப்பர்களை ஒப்பிடுகையில் புகழின் வெளிச்சத்தை நிறைய அனுபவித்தவர் எனலாம். அவர் "வெறும் 8 பாருக்கு ஒரு வெர்ஸ் பாடுறதுக்குத்தான் ராப்பர்ஸைக் கூப்பிடுறாங்க. பாட்டுக்கு இடையில் ஃபில்லர் மாதிரி. ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டும்தான் எங்களை சரியா பயன்படுத்துறாங்க. அதைத்தாண்டி தமிழ் ராப் இசை என்னவாக போகுது, இண்டிபெண்டென்ட் ராப் கலைஞர்கள் என்னவாகப் போறாங்கன்னு பயமா இருக்கு" என வருத்தம் தெரிவிக்கிறார்.

``உண்மையில் சொல்லிசையும் ஒரு நாள் உச்சம் பெரும்... அப்போது நமக்கென்ற காலம் அது கணிந்திடும்... ரசிகர் கூட்டத்தில் என் குரல் ஒலித்திடும்..."
செந்துழன்
லேடி காஷ்
லேடி காஷ்

தனியிசை எனப்படும் இண்டிபெண்டென்ட் கலைஞர்கள் வளர்ந்தால்தான் அவர்களோடு சேர்ந்து கலையும் வளரும். கலை வளர்ந்தால்தான் சமூகம் பண்படும். சமூகம் பண்பட்டால்தான் எல்லாம் வளமாகும். ஒரு பரிபூரண இசைக்கலைஞனின் இசைத்துணுக்கில் வரும் சிறு மௌனம் கூட பேரொலியாய் வெடிக்கும் வல்லமை கொண்டது. அதை எப்போதுதான் நாம் காணப்போகிறோம். நம் ஊர் `கல்லி பாய்' படம் ஆஸ்கர் வெல்வதை விட, நம் ஊர் நிஜ கல்லி பாய்கள் கிராமி வெல்வதில் இருக்கிறது உண்மையான வெற்றி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism