Published:Updated:

``விஜய் படத்தின் அந்த முதல் ரீல்தான் என்னை இன்றும் இயக்குது!" - டி.இமான் ஷேரிங்ஸ்

தாட்சாயணி
டி.இமான்
டி.இமான்

`` `தமிழன்' படம் பண்ணும்போது, `சின்ன பையன்னாலும், பாட்டைப் பண்ணிடுவான். பி.ஜி.எம்முக்கு என்ன பண்ணுவான்'னு நினைச்சாங்க

`கும்சிக்… கும்சிக்…' ஸ்டூடியோ கதவிடுக்கில் கசியும் இசை தடதடக்கிறது.

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்திற்கான இசைக் கோப்பு வேலையில் மூழ்கியிருந்த இசையமைப்பாளர் இமானை, ஒரு மழை நாளில் சந்தித்தேன்.

``கீ-போர்டு வாங்குறதே பெரிய விஷயமா இருந்த ஒரு சாதாரண குடும்பத்துலதான் நான் பிறந்தேன். ஆனா, என் அப்பா அம்மா என்னை இசைத்துறையில கொண்டுவரணும்னு ஆசைப்பட்டாங்க. நாங்க ஒரு கிறிஸ்தவக் குடும்பம். அதனால, `நம்ம பையன் சர்ச்ல கீபோர்டு வாசிக்கணும்'ங்கிறது அவங்களோட அதிகபட்ச ஆசை. அந்த ஆசை, என் எட்டு வயசுலேயே நிறைவேறிடுச்சு. பிறகு ஸ்கூல்ல வாசிச்சது, விளம்பரப் படங்களுக்கு வாசிச்சது, சீரியல், சினிமான்னு வளர்ந்தது எல்லாமே இறைவன் எனக்குப் போட்ட பிச்சைதான்."

டி.இமான்
டி.இமான்

``தொடர்ந்து பல புதுமுகங்களுக்குப் பாடுற வாய்ப்பைத் தர்றீங்களே!"

``ஒரு சக மனிதனா செய்யவேண்டிய விஷயமாதான் அதைப் பார்க்கிறேன். அறிமுகப்படுத்துறேன் பேர்வழின்னு திறமையில்லாதவங்களை நான் அறிமுகப்படுத்தலையே! எத்தனையோ திறமையானவங்க வாய்ப்புக்காகப் போராடிக்கிட்டிருக்காங்க. அவங்களுக்கு முடிஞ்சளவு வாய்ப்புகளை உருவாக்கித் தர்றேன். `தமிழன்' படத்துல இருந்தே இதைப் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். https://bit.ly/2yQOoHj

``இத்தனை ஆண்டு அனுபவங்கள் என்ன உணர்த்துது?"

`` `தமிழன்' படம் பண்ணும்போது, `சின்னப் பையன்னாலும், பாட்டைப் பண்ணிடுவான். பி.ஜி.எம்முக்கு என்ன பண்ணுவான்'னு நினைச்சாங்க. அதனால, டெஸ்ட்டுக்காக ஒரே ஒரு ரீலை மட்டும் கொடுத்து, பி.ஜி.எம் பண்ணித்தரச் சொன்னாங்க. `அது நல்லா இருந்தா கன்டினியூ பண்ணலாம், இல்லைனா பி.ஜி.எம்முக்கு வேற ஆள் வெச்சுக்கலாம்'னு சொன்னாங்க. அப்போ பிரபலமா இருந்த வேறொரு இசையமைப்பாளரையும் அதுக்காகப் பேசி வெச்சிருந்தாங்க. அதையெல்லாம் நான் மனசுல ஏத்திக்காம, அந்த ரீலுக்கு என்ன தேவையோ, அதுக்கு பி.ஜி.எம் பண்ணிக் கொடுத்தேன்.

டி.இமான்
டி.இமான்

தயாரிப்பாளர், இயக்குநர், விஜய் சார், எஸ்.ஏ.சி.சார்னு எல்லோரும் ஒண்ணா வந்து அதைக் கேட்டாங்க. அந்த ரீலோட முதல் சீனைப் பார்த்ததுமே, `ஓகேம்மா... நீயே கன்டினியூ பண்ணிடு'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அந்த முதல் ரீல் வாய்ப்புன்னு நினைச்சுதான், இன்னைக்குவரை எல்லாப் படங்களுக்கும் வொர்க் பண்றேன்."

> மெலோடி பாடல்கள்ல இளையராஜா டச், யுகபாரதி, ஸ்ரேயா கோஷல் உடனான கூட்டணி, உடல் எடை குறைப்பு எனப் பல விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ``இளையராஜா இடம் நோக்கி என் பயணம்!" https://cinema.vikatan.com/music/interview-with-music-director-imman எனும் அவரது பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு