Published:Updated:

ஒன் டைம் ஒண்டர் அல்ல, ஆல்டைம் ஹிட் மேன்... அனிருத் எனும் என்டர்டெயினர் பற்றி 2K கிட்ஸ்!

அனிருத்

பாட்டு மரண ஹிட். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பள்ளியில் இந்தப் பாட்டைப் பற்றிய டிஸ்கஷனில்தான் அனிருத் என்கிற மனிதன் எங்கள் மனதில் விஸ்வரூபமெடுத்தார்.

Published:Updated:

ஒன் டைம் ஒண்டர் அல்ல, ஆல்டைம் ஹிட் மேன்... அனிருத் எனும் என்டர்டெயினர் பற்றி 2K கிட்ஸ்!

பாட்டு மரண ஹிட். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பள்ளியில் இந்தப் பாட்டைப் பற்றிய டிஸ்கஷனில்தான் அனிருத் என்கிற மனிதன் எங்கள் மனதில் விஸ்வரூபமெடுத்தார்.

அனிருத்
எனக்கு எட்டு வயதிருக்கும்போது, என் அம்மாவுடன் பேருந்தில் போய்க் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பாட்டைக் கேட்டேன். பாட்டு வரியெல்லாம் மனப்பாடமாக ஆகாவிட்டாலும் அந்த ஒரு வார்த்தை மட்டும் மனதுக்குள் ஒடியபடியே இருந்தது. இப்போதும் என் அம்மா சொல்வார் “எப்பப் பார்த்தாலும் அந்த வார்த்தைய மட்டும் சொல்லிட்டே இருந்தடீ” என்று. இப்போது அந்தப் பாட்டுக்கு 10 வயசு. என் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த வார்த்தை... ‘கொலவெறி.’

ஆம். ‘வொய் திஸ் கொலவெறி’ பாடல் வெளிவந்து... அனிருத் என்கிற எனர்ஜி பூஸ்டர் எங்களுக்கு அறிமுகமாகி பத்து வருடங்கள் ஆகின்றன. அந்தப் பாடல் வந்தபோது “அது தனுஷ் பாட்டு” என்றுதான் எனக்குத் தெரியும். ஒரு படத்துக்கு ஹீரோ என்று ஒருவர் இருப்பார், இசையமைப்பாளர் என்று ஒருவர்தான் பாடல்களெல்லாம் போட்டுத் தருவார் என்கிற புரிதல் எல்லாம் அப்போது எனக்கு இல்லை. ‘வைரல்’ என்கிற ஒன்று இன்று, நாளுக்கொன்றாய் நடக்கிறதே... அந்த வைரல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் இந்தப் பாடல் ரிலீஸான பிறகு நடந்தவற்றைக் கேட்டாலே போதும்!

அனிருத், தனுஷ் - கொலவெறி பாட்டு
அனிருத், தனுஷ் - கொலவெறி பாட்டு

பாட்டு மரண ஹிட். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பள்ளியில் இந்தப் பாட்டைப் பற்றிய டிஸ்கஷனில்தான் அனிருத் என்கிற மனிதன் எங்கள் மனதில் விஸ்வரூபமெடுத்தார். அவரே பின்னால் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல, “ப்ச்... அது ஒரு குத்துப் பாட்டுப்பா. ஒன் டைம் வொண்டர் மாதிரி... வரும் போகும்... இந்த மாதிரி எத்தனை பேரு வந்துட்டாங்க” என்று பேச்சுகள். ஆனால் அந்த ‘3’ படத்தின் முழு ஆல்பமும் வெளியாகிறது. 2K கிட்ஸ் மத்தியில் அந்தப் பாடல்கள் காதல் கீதமாய் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அந்தப் படத்தின் ‘கண்ணழகா’ பாடலும் ‘நீ பார்த்த விழிகள்’ பாடலும் எங்களின் சீனியர்களான யுவன் ரசிகர்களையும் “அட... செம மெலடிப்பா” என்று சொல்ல வைத்ததை நாங்கள் ரசித்தோம். இந்தப் படத்தின் ‘போ நீ போ’ பாடல் இன்றைக்கும் எங்களின் தனிமைக்குத் துணை.

அதன்பிறகு 2013-ல் ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயனின் கரியரை ஆரம்பித்துவைத்த இந்தப் படத்தின் ‘எதிர்நீச்சலடி’ பாடல் எங்களுக்குத் தந்த உற்சாகத்தைச் சொல்லில் விளக்கவே முடியாது. ‘பூமி என்ன சுத்துதே’, ‘மின்வெட்டு நாளில் இங்கே’, மெலடியாகக் கவர்ந்ததென்றால் ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ குத்தாட்டம் போட வைத்தது. அதே வருடத்தில் வெளியான ‘வணக்கம் சென்னை' படத்தின் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் அனிருத்தின் பெயரைச் சொல்லி ஒலித்தது.

அடுத்த 2014 அனிருத்துக்கு சொல்லி அடித்த வருடம். தன்னை அறிமுகப்படுத்திய தனுஷுக்கு மீண்டும் ஒரு ஹிட் ஆல்பம் கொடுத்தார் - 'வேலையில்லா பட்டதாரி'. அந்தப் படத்தின் பின்னணி இசையில் ‘நான் வேற மாதிரி’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தார் அனிருத். இன்றைக்கு, தனுஷின் ‘வொண்டர்பார் ப்ரொடக்‌ஷன்ஸ்’ திரையில் வந்தாலே இந்த இசைதான்.

வேலையில்லா பட்டதாரி
வேலையில்லா பட்டதாரி
இந்த வரிகளைப் படிக்கும்போதே உங்களுக்கு அந்த இசை மனதில் ஒலிக்கிறதல்லவா... அதான் அனி! அந்தப் படத்தின் பிற பாடல்களும் ஹிட்தான்.

இப்போதும் எதும் மனதளவில் சோர்ந்துபோனால் நான் உடனே ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கேட்கும் பாடலான ‘ஊதுங்கடா சங்கு’ பாடலும் இதே படம்தன்! அதே ஆல்பத்தில் 'அம்மா அம்மா' சென்டிமென்ட் பாடல் கண்களைக் குளமாக்கும். இப்படி ஒரு பக்கா பேக்கேஜாக அந்த ஆல்பம் இருந்தது.

அடுத்து ஃபேவரைட் காம்போவான சிவகார்த்திகேயனுக்கு அவர் இசையமைத்த ‘மான் கராத்தே’வும் மற்றுமொறு ஹிட் ஆல்பமாக அமைந்தது. படத்தின் ‘ஓபன் த டாஸ்மாக்’ பாடலில் கேமியோவாக வந்து தியேட்டரில் எங்களை விசிலடிக்கச் செய்தார் அனி. படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ அப்போது எல்லா சேனல்களிலும் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது.

இதே வருடத்தில் அதற்கடுத்து அனிருத் அடித்ததுதான் சிக்ஸர். விஜய்க்காக ஒப்பந்தமானார் அனிருத். விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவாரா என்றொரு மில்லியன் டாலர் கேள்வி அப்போது எழுந்தது. 'கத்தி' படத்துக்கு அவர் கொடுத்த அந்த ஒற்றை பிஜிஎம், அந்தக் கேள்வியை தவிடுபொடியாக்கியது. அதுவும் டீசரிலேயே தனது திறமையை நிரூபித்தார் அனிருத். 'விஐபி' படத்தைப் போலவே, விஜய் டேபிளுக்குக் கீழே பார்ப்பது போல உங்கள் மனதில் விஷுவல் ஓடினாலே, மூளைக்குள் ஒரு இசை கேட்கிறதல்லவா... டாட டாட டாடடா... டாட டாட டாடடா... ஆங்... அதான் அனிருத் ஸ்பெஷல்!

விஜய் - அனிருத்
விஜய் - அனிருத்

இந்தப் படம் வந்தபிறகு, எங்கள் ஃப்ரெண்ட்ஸ் கேங்குக்கு அனிருத் ஒரு ஐகானாகவே மாறினார். அனிருத்னா ‘ஹிட் மெஷின்’ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பிற்பாடு சமூகவலைதளங்களில் அனிருத்துக்கென்று ஸ்பெஷல் பேஜஸ் எல்லாம் உருவாக்கி அவரைக் கொண்டாடியபோது, எங்கள் வயதொத்த இசைப்பிரியர்கள் பலரும் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டாகிறது என்று சொல்வதைக் கண்டு ரொம்பவும் குஷியானது தனி வரலாறு!

அதன்பின்னும் நிற்காமல் சுழன்றடித்தது இந்த மெஷின். 2015ல் ‘மாரி’யில் இவர் தனுஷுக்குப் போட்ட பாட்டில் ‘ஏ இந்தா ஏ இந்தா’ என்று தியேட்டர்கள் ரணகளமாகின. ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்களில் மொத்தமாக தன்னை மாற்றிக்கொண்டு வேறு வகை இசையை எங்களுக்குக் கொடுத்தார். அடுத்து அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியானதும் அனி ரசிகர்களோடு அஜித் ரசிகர்ளும் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். ‘ஆலுமா டோலுமா’ என்று அவர் கொடுத்த பாடலை உச்சி முகர்ந்து கொண்டாடி ஆடி மகிழ்ந்தோம். அடுத்து தனுஷுன் ‘தங்கமகனி’ல் மெலடிகளைப் பறக்கவிட்டார்.

ரெமோ, விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா என்று வரிசையாக சீட்டுகளை இறக்கி ஜெயித்துக் கொண்டிருந்தவருக்கு 2019 ஒரு குட் நியூஸ் வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு. விடுவாரா... 40+ல் இருக்கும் ரஜினி ரசிகர்களையும் 15+ல் இருந்த எங்களையும் ஒருசேர குஷிப்படுத்தும்படி பாடல்களைக் கொடுத்தார். ‘உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா’ என்று நாங்கள் கொண்டாடி மகிழ, அடுத்த வருடம் தர்பாரிலும் அனிருத் கொடி பறந்தது.

'மாஸ்டர்' விஜய்
'மாஸ்டர்' விஜய்
இதோ 2021ல் 'மாஸ்டர்', 'டாக்டர்' என்று தன் கிராஃபை உச்சத்திலேயே வைத்திருக்கும் அனிருத், இந்தப் பத்தாண்டுகளில் தொடாத உயரம் இல்லை. பெறாத விருதுகள் இல்லை. அடுத்து உலக நாயகன் கமலுக்காக 'விக்ரம்', 'இந்தியன் 2' என்று ஒரு பக்கமும், விஜய்யின் 'பீஸ்ட்', சிவகார்த்திகேயனின் 'டான்' என்று இன்னொரு பக்கமும் நம்மை எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறார்.

பாடகராகவும் அனிருத் ‘வேற லெவல் ப்ரோ’தான்! எல்லா இசையமைப்பாளர் இசையிலும் இவரது குரலில் பாடல் என்றால் ஷ்யூர் ஹிட் ரகம். மெர்சலாய்ட்டேன், டண்டனக்கா, நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா, யாஞ்சி யாஞ்சி, குலேபா, ஒத்தயடிப் பாதையில என்று பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் குரல் பாடல்கள் என்றால் செம எனர்ஜிதான்! அனிருத் குரல் ஒலிக்கத் தொடங்கும்போதே இந்தப் பாடல் நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் என்ற ஓர் எண்ணவோட்டத்தை நமக்குள் விதைத்துவிடுவார். தி ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி!

நல்ல இசையமைப்பாளர் எனப் பெயர் எடுப்பதைத் தாண்டி, 'என்டர்டெயினர்' என்று பெயர் எடுப்பது கடினமானது. ஆனால், அனிருத் அதை ஜாலியாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
அனிருத்
அனிருத்

வெறும் பத்து வருடங்களுக்கு உள்ளாகவே ஹீரோயிசம், காதல், ப்ரேக் அப், எனர்ஜி, ஃப்ரெண்ட்ஸ் என்று எல்லாவகை ஜானர்களிலும் ஒவ்வொரு ஃபோல்டர் கிரியேட் செய்துகொள்ளுமளவு வெரைட்டியாகப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் அனிருத். “30 வயசுக்குள்ள மியூசிக் டைரக்டராகணும்னு ஆசைப்பட்டேன். என்னை 20 வயசுலயே ஆக்கிட்டீங்க” என்று நேற்று #10YearsOfAnirudhக்காக தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் சொல்லியிருக்கிறார் அனிருத்.

இன்னும் நிறைய ஆல்பங்கள், நிறைய பாடல்களை எங்களுக்குத் தாருங்கள்.

THANKS FOR EXISTING 'ROCK STAR' ANIRUDH... WE LOVE YOU!

- ஆ. ஸ்ருதி கிருஷ்ணா