Published:Updated:

`சுஹாசினியின் ஐடியா, பிரபலங்களின் சர்ப்ரைஸ் மெசேஜ்!' - `மார்கழித் திங்கள்' வீடியோ குறித்து உமா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுஹாசினி, ரேவதி, கனிகா, அனுஹாசன்
சுஹாசினி, ரேவதி, கனிகா, அனுஹாசன்

`மார்கழித் திங்கள்' என்ற திருப்பாவை வீடியோவில் பிரதான பாடகியாக இடம்பெற்றிருக்கும் நடிகை உமாவிடம் பேசினோம்.

புதிய முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்துவரும் நடிகை சுஹாசினி, `மார்கழித் திங்கள்' என்ற பெயரில் திருப்பாவை பாசுரப் பாடலை தன் சினிமா தோழிகளுடன் இணைந்து ஆல்பமாக உருவாக்கியிருக்கிறார். சுஹாசினி, ரேவதி, நித்யா மேனன், அனு ஹாசன் உள்ளிட்ட எட்டு நடிகைகள் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு, நடிகை ஷோபனா நடனமாடியிருக்கிறார். கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன் உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று இந்தப் பாடலை வெளியிட்டனர். இந்த ஆல்பத்தில் பிரதான பாடகியாக இடம்பெற்றிருக்கும் நடிகை உமாவிடம் பேசினோம்.

தோழிகளுடன் சுஹாசினி
தோழிகளுடன் சுஹாசினி

``சுஹாசினியின் முயற்சியில்தான் இந்தப் பாடல் உருவானது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு, மார்கழி மாசத்துல பாடப்படும் திருப்பாவை பாசுரங்களின் அருமையைத் தெரியப்படுத்தும் நோக்கத்துலதான் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறோம். அதில் பாடியிருக்கிற எல்லாப் பிரபலங்களுமே சுஹாசினியின் தோழிகள்தாம்.

இந்த ஆல்பத்தின் இசை சார்ந்த எல்லாப் பொறுப்புகளையும் புகழ்பெற்ற `சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான சுபஶ்ரீ தணிகாசலத்திடம் சுஹாசினி ஒப்படைச்சிருந்தாங்க. அந்தப் பொறுப்பை சுபஶ்ரீ நேர்த்தியுடன் செய்திருந்தாங்க. எனக்கு கர்னாட்டிக் மியூசிக்ல முறையான பயிற்சி உண்டு. ஆனா, பெரிசா வெளியிடங்கள்ல பாடுறதில்ல. என்னோட பயணம் திசைமாறியதால தொகுப்பாளராவும் நடிகையாவும் மாறினேன்.

உமா
உமா

என்னோட குரல்வளம் பத்தி நல்லாவே தெரிஞ்ச சுஹாசினி, இந்த ஆல்பத்துல என்னையும் பாடச் சொன்னாங்க. நடிகர் சந்தானத்தின் புதுப்படமான `சபாபதி'யில அவருக்கு அம்மாவா நடிக்கிறேன். அதுக்காக கும்பகோணத்துல நடந்த படப்பிடிப்பில் இருந்தேன். இடையில் சென்னைக்கு வந்தபோது, உடனே என்னை வரச்சொன்னாங்க சுஹாசினி. ஒளிப்பதிவு துறையில அனுபவம் கொண்டவங்க, என்னைப் பாடச் சொல்லி முறைப்படி கேமராவுல ஒளிப்பதிவு செய்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரைமணி நேரத்துல என்னோட போர்ஷன் முடிஞ்சது. அதற்கு முன்பே சுஹாசினி, ரேவதி, அனுஹாசன், கனிகா ஆகியோர் இணைஞ்சு பாடி ஒளிப்பதிவு செய்திருந்தாங்க. வெளியூரில் இருந்து நித்யா மேனன், ரம்யா நம்பீசன் பாடி அனுப்பினாங்க. அமெரிக்காவில் இருந்து நடிகை ஜெயஶ்ரீ பாடி அனுப்பியிருந்தாங்க. நேத்து இந்த ஆல்பம் ரிலீஸானதுமே, `நீங்க நல்லா பாடுவீங்களா?'ன்னு பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டாங்க; பாராட்டினாங்க.

தோழிகளுடன் சுஹாசினி
தோழிகளுடன் சுஹாசினி

அதில், பத்மா சுப்ரமணியம், மாதவன் உட்பட சில பிரபலங்கள் எனக்கு மெசேஜ் அனுப்பினாங்க. இந்த ஆல்பத்துல வேலை செய்த எல்லோருக்குமே நிறைவான சந்தோஷம். அடுத்த வருஷம் வேறு ஒரு பாசுரத்தைப் பாடலாம்னு திட்டமிட்டிருக்கிறோம்" என்று புன்னகையுடன் கூறினார் உமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு