Election bannerElection banner
Published:Updated:

``கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்போறேன்... ரசிகர்களே தூண்டுதல்!'' - யுவன் ஷேரிங்ஸ்

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்தவற்றிலிருந்து...

"யுவனிசம் - ஒரு மாஸ் ஹீரோவுக்கான பாலோயிங் அளவுக்கு உங்களுக்கும் இருக்கு. எப்படி நடந்தது இது?''

- சுதர்சன் காந்தி

"வெங்கட் பிரபுவும் இதையேதான் சொல்லிகிட்டிருப்பார், 'எந்த ஒரு கம்போஸருக்கும் இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் கிடையாது'ன்னு. இது எனக்குக் கிடைச்ச வரம். இசைதான் என்னையும் அவங்களையும் இணைக்குதுங்கிறபோது அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்துக்கிட்டே இருப்பேன்.

என் பிறந்தநாள் அப்போ ரத்ததானம் பண்ணுறது, ஆதரவற்றோர் இல்லம் போறதுன்னு நிறைய விஷயங்கள் என் ரசிகர்கள் பண்ணுறாங்க. அவங்களோட இந்தச் செய்கைகளால ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு முடிவுக்கு இப்போ வந்துருக்கேன். 'யுவன் கல்வி அறக்கட்டளை' ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன். நிறைய பேரை இந்த அறக்கட்டளை வழியா படிக்க வைக்கப்போறேன். போக, ஆதரவற்றோர் இல்லத்தையும் முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்துல இணைக்கிற புள்ளியாவும் இந்த அறக்கட்டளை இருக்கும். இதனால அன்பு ரெண்டு தரப்புக்குமே கிடைக்கும்ங்கிறது என்னோட எண்ணம். இதுபத்தி வெளியே இதுவரைக்கும் சொல்லல. ஆனந்தவிகடன் வழியா இதை உலகத்துக்குச் சொல்றதுல ரொம்பவே மகிழ்ச்சி."

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

"உலகம் முழுக்க அரசியலும் இசையும் இணைந்த புள்ளிகள் நிறையவே இருக்கு. பாப் மார்லியை உதாரணமாச் சொல்லலாம். தமிழ்ச் சூழல்ல மட்டும் ஏன் இசை அரசியலில் இருந்து விலகியிருக்கணும்னு நினைக்கிறீங்க?''

- சுகுணா திவாகர்

"தனித்தனியா இருக்கணும்னு நான் சொல்லல. 'Blacklives matter' பிரச்னையாகட்டும், என் டி-ஷர்ட் சர்ச்சையாகட்டும், ஏன் மக்கள்கிட்ட ரீச் ஆகுதுன்னா மக்களும் என்னோட உணர்வுகளைப் பிரதிபலிப்பதால்தான். நான் சொல்றதை அவங்களும் பொருத்திப் பாத்துக்குறாங்க. அது அப்படித்தான் நடக்கும்.

மத்தபடி நான் எந்தெந்தப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறேன், எதைத் தவிர்க்கிறேங்கிறது எல்லாம் என்னோட விருப்பம்தானே!"

> `` 'வலிமை' படத்தில் என்ன மாதிரியான சிக்னேச்சர் தீம், என்ன ஜானர்ல பாடல்களை எதிர்பார்க்கலாம்?''

> ``ஒரு தயாரிப்பாளரா கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க? 'மாமனிதன்' ஓடிடில ரிலீஸாகப்போகுதுன்னு வரும் தகவல்கள் உண்மையா?''

> ``தமிழ் சினிமால நிறைய சிக்கல்கள் இருக்குன்னு நிறைய தயாரிப்பாளர்கள் புகார் சொல்றாங்க. யுவனுக்கு எப்படி?''

> ``யுவனோட மியூசிக்கல் ப்ராசஸ் எப்படியிருக்கும்?''

> ``இப்போ எந்தப் பாடல் வெளியானாலும் 'அது இந்தப் படத்துல இருந்து எடுத்ததுப்பா'ன்னு மறுநாளே சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகிடுது. இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்குமான வித்தியாசம்தான் என்ன? ஒரு பாட்டை எப்பவோ கேட்டு மனசுல பதிஞ்சு பின்னொரு சமயத்துல நமக்கே தெரியாம நம்ம இசையா வெளியே வர்ற வாய்ப்புகள் உண்டா? ''

> ``நிகழ்கால அரசியலை கவனிக்கிறீங்களா? இப்போ நம்பிக்கையான தலைவரா யாரைப் பார்க்குறீங்க?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பகுதியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > ‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம் https://bit.ly/2Ttja3H

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு