வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மிஷ்கினின் "அஞ்சாதே" படத்தில் நடுரோட்டில் ஒருவர் வெட்டுப்பட்டு அல்லது அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, நாயகன் நரேன் அவரை காப்பாற்றுவதற்காக சாலையில் வருவோர் போவோரிடம் வண்டியை நிறுத்த சொல்லி போராடுவார்.
அப்போது பூக்கூடையுடன் வரும் பாட்டி உயிருக்கு போராடுபவரை பார்த்துவிட்டு நரேனை பார்க்க, "யாருமே வண்டியை நிறுத்து மாட்டிறாங்க பாட்டி" என்று தழுதழுத்த குரலில் சொல்வார் நரேன். உடனே அந்தப் பாட்டி உயிருக்குப் போராடுபவரை தூக்கி பைக்கில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாதி வழியில் அவரது உயிர் பிரிந்து விடுகிறது.

"தம்பி நின்னுடுச்சுப்பா..." என்று பாட்டி கலங்கிய குரலுடன் சொல்ல நரேன் வண்டியை நிறுத்துவார். இறந்தவர் அடிபட்டு கிடந்த இரத்தத்தில் பூக்களை வீசிவிட்டு செல்வார் அந்தப் பூக்கார பாட்டி. தமிழ் சினிமாவில் இதற்கு நிகரான ஒரு ஆகச் சிறந்த காட்சி இன்னும் வரவில்லை என்று கூட சொல்லலாம். அல்லது ஆகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று என குறிப்பிடலாம்.
"அஞ்சாதே" படத்தை போலவே அவரது எல்லா படங்களிலும் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையிலான மனிதம் நிறைந்த டச்-களை பார்க்க முடிகிறது. குறிப்பாக "சவரக்கத்தி" படத்தில் "என் பொண்ண இழுத்துட்டு ஓடுனவன் கால் விளங்காம போவ..." என்று அந்தப் பெண்ணின் அம்மா சாபம் விடுவார்.

அதே அம்மா தனது பெண்ணை காதல் திருமணம் செய்தவர் ஏற்கனவே கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்பதை உணர்ந்ததும் அவரது காலை பிடித்து தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி ரொம்பவே கனமானது.
கு.இலக்கியன் ஆனந்த விகடனில் எழுதிய "கல்மாலை பூக்கள்" சிறுகதையில், அப்பாவி இளம்பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்ட நாயகனின் கால்கள் பாதிக்கப்பட்டு அவர் நடக்க முடியாதவராக மாறி கஷ்டப்படும் நிலையையும் அதை அந்த இளம்பெண்ணின் அம்மா பார்த்து "ஐயோ..." என கதறி அழும் காட்சியையும் சிறுகதையில் படித்ததும் "சவகரக்கத்தி" திரைப்பட கால்கள் காட்சி நினைவுக்கு வந்து சென்றது.

மிஷ்கினின் "சைக்கோ" படத்தில் கொடூர வில்லனை தேடி வரும் கண் தெரியாத ஹீரோ, வில்லனை கொல்ல நினைக்காமல் வில்லனுடனான முதல் சந்திப்பில் அவனுடைய முதுகில் தன்னுடைய உள்ளங்கைகளை பதித்து சாந்தமாக உரையாடலை தொடங்கும் காட்சி மனிதம் நிறைந்தது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.