Published:Updated:

சிறைக்கைதிகளும் தமிழ் படங்களும் ! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

Representational Image
News
Representational Image

தமிழ் சினிமாவில் "சிறைச்சாலை வாழ்க்கை" குறித்து பதிவுசெய்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நான் 90'ஸ் கிட் என்பதால் கடந்த இருபது வருடங்களில் வெளியான திரைப்படங்களில் உள்ள சிறைச்சாலை குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன்.

Published:Updated:

சிறைக்கைதிகளும் தமிழ் படங்களும் ! - சினிமா காதலர் ஷேரிங்ஸ்| My Vikatan

தமிழ் சினிமாவில் "சிறைச்சாலை வாழ்க்கை" குறித்து பதிவுசெய்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நான் 90'ஸ் கிட் என்பதால் கடந்த இருபது வருடங்களில் வெளியான திரைப்படங்களில் உள்ள சிறைச்சாலை குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன்.

Representational Image
News
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கடந்தாண்டு வெளியான பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் போது சிறைக்கைதிகளின் தேர்ச்சி விகிதம், அவர்களில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் குறித்து பத்திரிக்கைகள் கவனம் செலுத்தியிருந்தன. சிலர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார்கள்.

அதேபோல எழுத்தாளர் இமையம், "சிறைச்சாலை நூலகங்களை சீர்படுத்த வேண்டும்" என்றும், சிறைவாழ்க்கை வாழ்ந்த ஒருவர் கவிஞராக மாறியது குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை ஈரோடு அன்புராஜ் ("வாழ்வை எங்கிருந்தும் தொடங்கலாம்" என்ற தலைப்பில் அவரை பற்றி பவா செல்லத்துரை பேசிய காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது) பாராட்டி இருந்தார். இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்த போது "சிறைச்சாலை வாழ்க்கை" குறித்த திரைப்படங்கள் குறித்து எழுத தோன்றியது. அவ்வாறு எழுதப்பட்டது தான் இக்கட்டுரை.

Representational Image
Representational Image

தமிழ் சினிமாவில் "சிறைச்சாலை வாழ்க்கை" குறித்து பதிவுசெய்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நான் 90'ஸ் கிட் என்பதால் கடந்த இருபது வருடங்களில் வெளியான திரைப்படங்களில் உள்ள சிறைச்சாலை குறித்த பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன்.

சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள்" பற்றி அக்கறை கொண்டு பேசியிருந்ததை சமூக வலைதளங்களில் பாராட்டி இருந்தனர்.

மகாநதி
மகாநதி

*கமல் நடித்த "மகாநதி". எந்த தவறும் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்படுவார் கமல். சிறையிலிருக்கும் தன் அப்பாவை குழந்தைகள் சந்திக்க வருகிறார்கள். அப்போது இந்த வயசுலயே ஜெயிலு பக்கம் உங்கள வர வச்சுட்டனே என்று வருந்துவார் கமல். சிறையிலிருக்கும் கமலின் குழந்தைகள் சில காலங்களில் அனாதையாகி வழிதவறி போய்விடுவார்கள்.

*"காக்கா முட்டை" படத்தில் தன் அப்பா ஜெயிலில் அடைக்கப்படுவதால் அம்மா ஒருவரின் அரவணைப்பில் வளரும் இரண்டு சிறுவர்களும் வேறு வழியில்லாமல் அப்பாவை வெளியே கொண்டு வருவதற்காக அம்மாவுக்கு பணம் கொடுத்து உதவ, காசு சம்பாதிக்கும் பொருட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறுகிறார்கள்.

காக்கா முட்டை
காக்கா முட்டை

*"வானம் கொட்டட்டும்" படத்தில் சிறுவயதிலயே தங்களை பற்றி கவலைபடாமல் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போன தந்தை மீது கோபத்தில் இருப்பார்கள் அவர்களது பிள்ளைகள். சிறையிலிருந்து திரும்பி வந்த அப்பாவிடம் மகன் சரியாக முகம் கொடுத்து கூட பேசமாட்டார்.

*"கைதி" படத்தில் சிறையிலிருந்து வெளியேறும் கைதி கார்த்தி முதல் வேலையாக ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் தன் மகளை தான் பார்க்க செல்வார். அப்போது அந்த மகள் "ஏன் இவ்வளவு நாள் என்ன பாக்க வரல" என்று கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் மகளை கட்டிக்கொண்டு அழுவார் கார்த்தி. (அப்படத்தில், சிறையிலிருந்து வெளியேறும் ஒரு கைதியின் மகள் போலீஸ் உடையுடன் போட்டோ எடுத்திருப்பது போன்ற காட்சி, கவிதை!)

கைதி
கைதி

*"கபாலி" படத்தில் சிறையில் புத்தகம் படிப்பது போல் அறிமுகமாகும் ரஜினி, சிறையிலிருந்து வெளியேறியதும் தொலைந்து போன தனது குடும்பத்தை தேடிப்போவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். வளர்ந்து நிற்கும் துடிப்பான தன் மகளை சில நொடிகள் அதிசயித்து பார்ப்பார் ரஜினி.

சிறுவர் சீர்திருத்த பள்ளி:

*சிறுவர் சீர்திருத்தபள்ளி குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட மிக முக்கியமான படம் "நந்தா". அந்தப் படத்தில், தவறான பாதையில் பயணிக்கும் தன் தந்தையை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அப்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் அங்கேயும் அடிதடியில் ஈடுபடுவதை பார்த்த தாய், அன்று முதல் அவன் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆவது வரை அவனை பார்க்காமல் அவனை நினைத்து அழுதபடி இருக்கிறார். சிறையிலிருந்து வெளியேறிய பிறகும் அவன் கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க தொடங்க, அம்மா அவனை வெறுக்கிறார். இறுதியில் அவனுக்கு தாய் கையாலயே மரணம் நேர்கிறது.

நந்தா
நந்தா

*விஜய் ஆண்டனி நடித்த "நான்" படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளி குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படத்தில் தவறான பாதையில் பயணிக்கும் தன் தாயை கொலை செய்துவிட்டு சிறுவயதிலயே சிறைக்குச் செல்கிறான் நாயகன். அவன் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிறகு சொந்தக்காரர்களால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.

*"மூடர்கூடம்" படத்தில் தனியார் கம்பெனிக்கு நேர்முகத் தேர்விற்குச் செல்லும் நாயகன் கடைசி சுற்று வரை தேர்வாகி இறுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படித்தவன் என்ற விஷயம் வெளியே வந்தவுடன் கம்பெனியால் வேலை கொடுக்கப்படாமல் நிராகரிக்கப்படுகிறான்.

மூடர்கூடம்
மூடர்கூடம்

*வசந்தபாலனின் "ஜெயில்" படத்தில் பாண்டி என்கிற நாயகன், சிறுவயதில் பொய் வழக்கில் சிக்கி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தபிறகு அவனுக்கு அக்கம்பக்கத்து சின்ன சின்ன கடைகளில் கூட வேலை கிடைக்காமல் கடைசியில் பொய் சொல்லி வேலைக்கு சேரும் நிலைமைக்கு ஆளாகிறான்.

*"காதலும் கடந்து போகும்" படத்தில் தவறான சகவாசத்தால் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகி சரியான வேலை எதுவும் கிடைக்காமல் இருக்கும் விஜய்சேதுபதி, தன்னிடம் அடியாள் அசிஸ்டன்டாக சேர துடிக்கும் மணிகண்டனின் கன்னத்தில் நாலு அறைவிட்டு "இதெல்லாம் பண்ணா உன்ன தலைல தூக்கி வச்சு கொஞ்சுவாங்கனு நினைச்சியா?" என்று திட்டி வேறு வேலைக்குப் போக சொல்வார்.

காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும்

சிறைச்சாலை மரணங்கள் & அதிகார மீறல்கள்:

*"விசாரணை" படத்தில் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆதரவற்று கர்நாடகாவில் வேலை செய்யும் இளைஞர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவர்களை அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கி கடைசியில் அவர்களை சுட்டுத்தள்ளுகிறது போலீஸ் துறை.

*"ஜெய்பீம்" படத்தில் இருளர் இன மக்களில் ஒருவரான ராசாக்கண்ணு மீது திருட்டு பட்டம் சூட்டி பொய் குற்றம் சுமத்தி சிறையிலடைத்து அடித்து உதைத்து நெஞ்சில் மிதித்தே கொல்கிறார்கள். நெஞ்செலும்பு உடைந்து இதயத்தில் எலும்பு குத்தி இறந்து போகிறார் ராசாக்கண்ணு.

*"ரைட்டர்" படத்தில் காவல் துறையில் நிகழும் தற்கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு இளைஞன் மீது பொய் வழக்கு சுமத்தி கடைசியில் அந்த இளைஞனை சுட்டுத்தள்ளுகிறது காவல் துறை.

*"மௌனகுரு" படத்தில் அப்பாவி இளைஞன் மீது பொய்க்குற்றம் சுமத்தி அவனை சுட்டுத்தள்ள முயலுகிறது காவல்துறை. மனநிலை மருத்துவமனையில் அடைக்கப்பட்டு மெண்டல் என முத்திரை குத்தப்படுகிறான் அப்பாவி இளைஞன்.

ஜெய்பீம்
ஜெய்பீம்

*"வழக்கு எண் 18/9" படத்தில் ஒரு இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தி அப்பாவி நாயகனை கைதுசெய்து சிறையில் அடைத்து அடித்து சக்கையாக்கி அவனை துன்புறுத்துகிறார்கள்.

(கொஞ்சம் சம்பந்தமில்லை என்றாலும் "சிவாஜி" படத்தையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். காவல்துறையினரால் லாக்கப்பில் கடுமையாக தாக்கப்படும் ரஜினி, மின்சார கம்பிகளை பிடித்து உயிரிழப்பது போல் வைத்திருக்கும் காட்சியும் கவனிக்கத்தக்க ஒன்று!)

சிறைச்சாலையில் நிகழும் குற்றங்கள்:

*கமலின் "விருமாண்டி" படத்தில் பொய் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருக்கும் கமல் மீது தாக்குதல் நடத்தப்படும். நேர்மையான சில கைதிகள் தவறான சில காவலாளிகள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து சிறைச்சாலைக்குள் பெரிய வன்முறை நிகழ்கிறது.

*விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் சிறுவர் சீர்திருத்தபள்ளி சிறுவர்களை போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். சிறுவர் சீர்திருத்தபள்ளியில் உள்ள சீனியர் ஜூனியர் பாகுபாடு, சிறுவர்களின் தற்கொலைகள் குறித்து பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

விருமாண்டி
விருமாண்டி

*வெற்றிமாறனின் "வட சென்னை" படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சார்ந்த இளைஞர்கள் சிறையிலடைக்கப்பட்டு எப்படி அவர்கள் போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு அடிமையாகிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கும். சிறைக்குள் நிகழும் "கேங்" வன்முறைகளை அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட படம்.

சிறையில் பெண்கள் நடத்தப்படும் விதம்:

*"பாய்ஸ்" படத்தில் ஜெனிலியா சிறையிலடைக்கப்பட்டு அவதிக்குள்ளாவார். "கொசுவே கொசுவே குண்டு குண்டு கொசுவே" என்ற பாடலில் அவரது சிறை வாழ்க்கை துயரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

*"ராவணன்" படத்தில் காவால்துறை அதிகாரிகள் வீரன் என்கிற நாயகனின் தங்கையை தூக்கிச் சென்று விடிய விடிய கற்பழிக்கப்பட்டதை பற்றி வசனமாக வைத்து அந்தக் கொடுமையை அனுபவித்த தங்கை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

*"அருவி" படத்தில் அருவியை கைது செய்து விசாரணை செய்யும் பெண் போலீஸ் அருவியை அடிக்க கை ஓங்க "தொட்றீ பாக்கலாம்" என்று அருவி வசனம் பேசுவதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கும்.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை
புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

சிறையில் சில நல்லவர்கள்:

*"புறம்போக்கு எனும் பொதுவுடைமை" படத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஒரு மக்கள் போராளியின் சிறைச்சாலையில் அவரது இறுதிகட்ட போராட்டங்களை படமாக்கி இருப்பார்கள்.

சிறை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு:

* சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதிகளின் குழந்தைகளின் நிலைமை என்ன?

*சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட பெற்றோர்களின் நிலைமை என்ன?

*சிறைச்சாலையில் மரணமடைந்த இளைஞர்களின் உறவினர்களின் நிலைமை என்ன?

*சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அங்கு நடைபெறும் குற்றங்களுக்கு துணை போகும் இளைஞர்களின் எதிர்கால நிலைமை என்ன?

நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில்

*சிறைச்சாலையில் அடைக்கப்படும் இளம்பெண்களின் நிலைமை என்ன?

*சிறைச்சாலையில் அடைக்கப்படும் மக்களுக்கான போராளியின் நிலைமை என்ன? போன்றன குறித்து நாம் இன்னும் அதிகம் விவாதிக்க வேண்டும்.

சிறைச்சாலை பற்றிய முக்கியமான வரிகள்:

*சமுத்திரக்கனியின் "நிமிர்ந்து நில்" படத்தில், "உலகத்துலயே பெரிய சிறைச்சாலைய கட்டி வச்சுட்டு அத பொது அறிவு புத்தகத்துல கேள்வியா கேட்குற நிலைமைல இருக்கோம்" என்று ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும்.

*கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடனில் வெளியான "ஜெயில் மதில் திகில்" தொடரை எழுதிய காவல் துறை அதிகாரி சொன்ன ஒரு வாக்கியத்தை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அந்த வாக்கியம்,

"ஒரு ஊரில் புதிதாக ஒரு சிறைச்சாலை கட்டப்படுகிறது என்றால் அது அந்த தேசத்திற்கே ஏற்பட்ட அவமானம்!"

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.