Published:Updated:

``ஹர்ட் பண்ணிட்டாங்க; ரெண்டு சீரியலிலிருந்து விலகப் போறேன்!'' - `அப்செட்' நிவிஷா

`ஈரமான ரோஜாவே’ நிவிஷா ஃபேமிலி, சீரியல் அனுபவம் எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நிவிஷா
நிவிஷா

ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களில் வில்லியாக மிரட்டி வருபவர் நிவிஷா. வெள்ளித்திரையில் அறிமுகமாகி சின்னதிரைக்கு வந்தவர். இன்ஸ்டாவில் இவருக்கென்று தனி ஃபேன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஃபேமிலி, சீரியல் அனுபவம் எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்தினருடன் நிவிஷா
குடும்பத்தினருடன் நிவிஷா

என் சொந்த ஊர் அறந்தாங்கி. அப்பா தோப்பு வெச்சிருக்கார். கட்டடத் தொழிலும் பண்றார். நான் ஒரே பொண்ணு. என் குடும்பத்துக்கு மீடியாலாம் பழக்கம் கிடையாது. ரொம்ப பாரம்பர்யக் குடும்பம். எனக்கு சின்ன வயசுல இருந்தே மேக் அப் பண்ணிக்க ரொம்பப் பிடிக்கும். காலேஜ் படிக்கும்போது ஷார்ட் ஃப்லிம் வாய்ப்புகள் வந்துச்சு. நானும் ஆர்வமா நடிச்சேன்.

ஏற்கெனவே மேக் அப், ட்ரெஸ்ஸிங் இதெல்லாம் பிடிக்குமில்லையா. நடிப்பு வாய்ப்புகள் வந்தா சொல்லவா வேணும். அப்படியே பட வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் பேர் வாங்கிக் கொடுக்கல. அதன் பிறகு தெய்வ மகள் சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அப்படியே இப்போ வரைக்கும் நடிச்சிட்டு இருக்கேன். என் வீட்ல இப்போ வரைக்கும் நான் இந்தத் துறையில இருக்குறது பிடிக்கல. குறிப்பாக என் பாட்டிக்கு நான் வில்லியா நடிக்குறது சுத்தமா பிடிக்கல. ஆனா எனக்கு நடிப்பு பிடிச்சிருக்கு. இந்தத் துறையில சாதிக்கணும்.

நிவிஷா
நிவிஷா

எனக்கு ரெண்டு பேரோட மேக் அப் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். ``யாரடி நீ மோகினி’’ ஃபாத்திமா பாபு மேம் ஷூட்க்கு வரும்போது வேற மாதிரி வருவாங்க. மேக் அப் முடிச்சிட்டு வெளியே வரும்போது, உள்ள போனவங்க எங்கன்னு தேடுற அளவுக்கு நேர்த்தியா மேக் அப் பண்ணியிருப்பாங்க. அதே மாதிரி `மின்னல்’ தீபா அக்கா மேக் அப் ரொம்பப் பிடிக்கும். அப்புறம் வந்தனா அக்காவோட நடிப்பும் கேரக்டரும் ரொம்பப் பிடிக்கும்.

சமீபகாலமா எனக்கு வில்லி கதாபாத்திரங்களே தேடி வருது. இதற்கு முன்னாடி நான் பண்ண பாசிடிவ் கதாபாத்திரங்களை எல்லாரும் மறந்திருப்பாங்க. நான் இயக்குநர்கள் கிட்ட கேட்டேன் ஏன் எனக்கு நெகடிவ் கொடுக்குறீங்கன்னு.

நிவிஷா
நிவிஷா

அதற்கு அவங்க, `நீ உயரமா, கம்பீரமா இருக்க, ஹோம்லியா இல்ல, பாவமா இல்ல, ஹீரோயின் ஆக ஸ்லிம்மா குள்ளமா இருக்கணும். நீ சேலைக் கட்டி நடந்து வந்தா கம்பீரமா இருக்கும் அதனாலதான் வில்லி கதாபாத்திரங்கள் கொடுக்குறோம். அதற்கு தான் ரீச் அதிகம்’ - னு சொல்லி மழுப்புறாங்க.

ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சீரியல்களின் ஆரம்பத்தில் பாசிடிவ் ரோல், லீட் ரோல்னுதான் என்கிட்டச் சொன்னாங்க. அப்புறம் போகப் போக நெகடிவ் ஆக்கிட்டாங்க. நான் கேட்டதுக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ணமாட்றாங்க. எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னை ஹர்ட் பண்ணிடுச்சு. அதனால ரெண்டு சீரியலில் இருந்தும் நாம் விலகுறதா சொல்லிட்டேன்.

நிவிஷா
நிவிஷா

இனி பாசிடிவ் லீட் ரோலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். என் இன்ஸ்டா பக்கத்துக்கு ரசிகர்கள் கொடுக்குற ரெஸ்பான்ஸ் என்னை நெகிழ வைக்குது. ஒவ்வொரு போட்டோ போடும்போதும் ஏன் நீங்க நெகடிவ் ரோல்களில் நடிக்குறீங்கன்னு கேட்குறாங்க. என் வீட்லையும் ஃபீல் பண்றாங்க. அவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும் இல்லையா’’ என்றார் புது உற்சாகத்துடன்.