சமந்தா வைரல் டீசர், இந்தி ஹீரோயினின் காப்பிகேட், த்ரிஷாவின் ஸ்பெஷல் இசை..!

த்ரிஷாவின் மலையாள முதல் மலையாளப் படத்தின் இசை வெளியீடு

ஹே ஜூட் | த்ரிஷா | நிவின் பாலி


தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துவரும் த்ரிஷா, திரையுலகுக்கு நடிக்க வந்து 15 வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால், தற்போதுதான் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளப் படவுலகின் உச்சநட்சத்திரம் நிவின் பாலியுடன் த்ரிஷா இணையும் 'ஹே ஜூட்' படத்தின் இசை நேற்று வெளியாகியிருக்கிறது. த்ரிஷா நடிக்கும் முதல் மலையாளப் படம் என்பதால், மலையாள ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்

உலகளாவிய ரசிகர்களின் எதிரபார்ப்பைத் தூண்டியுள்ள 75 வயது ஹாலிவுட் இயக்குநர்

மார்ட்டின் ஸ்கோர்செஸி | தி ஐரிஷ்மேன்

ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களின் முன்னோடியாகக் கருதப்படுபவர் மார்ட்டின் ஸ்கோர்செஸி. 75 வயது நிரம்பிய இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி 'டாக்ஸி டிரைவர்', ரேஜிங் புல், 'கேஸினோ', 'தி டிபார்டட்', ஹியூகோ, 'தி உல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்' ஆகிய படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். இவர் இயக்கத்தில் 'டாக்ஸி டிரைவர்' படம் உட்பட பல படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, அல் பசினோ இணைந்து நடிக்கும் 'தி ஐரிஷ்மேன்' படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'தி ஐரிஷ்மேன்' அடுத்த வருடம் நெட் ஃப்லிக்ஸில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளாவிய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

முதன் முறையாக ஆங்கிலத் தொடரில் நடிக்கும் நவாஸுதின் சித்திக்கி

நவாஸுத்தின் சித்திக்கி

பாலிவுட்டின் முன்னணி குணசித்திர நடிகரான நவாஸுதி சித்திக்கி முதன் முறையாக ஆங்கிலத் தொடரில் நடிக்கிறார். பி.பி.சி ஒன் என்கிற இங்கிலாந்து தொலைக்காட்சி இத்தொடரைத் தயாரிக்கிறது. 'மெக் மாஃபியா' என்று பெயரிடப்பட்ட இத்தொடர், மிஷா க்லென்னி என்னும் பத்திரிக்கையாளர், உண்மைச் சம்பவங்களைக் கொண்டு தொகுத்த 'மெக் மாஃபியா : சீரியஸ்லி ஆர்கனைஸ்டு க்ரைம்ஸ்'  என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கும்  இத்தொடரில் நவாஸுத்தின் சித்திக்கி ஒரு இந்திய வம்சாவழியை சேர்ந்த வணிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக பாலிவுட்டின் முன்னணி நாயகி ப்ரிங்கா சோப்ரா அமெரிக்காவின் 'குவான்ட்டிக்கோ' என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வளைதளங்களில் வைரலாகும் சமந்தா, ராம் சரண் தேஜா படத்தின் டீஸர்.

சமந்தா, ராம்சரண் தேஜா நடிப்பில் தயாராகிவரும் தெலுங்கு திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவிஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். 1985-களில் நடப்பதை மையமாக கொண்டு உருவாகிவரும் இத்திரைப்படம், தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்பபைப் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் டீசர் வெளியான 24 மணிநேரத்தில் 1 கோடி ரசிகர்கள் யூ-டியூப் மற்றும் முகநூல் வழியாகப் பார்த்துள்ளனர். படம் மார்ச் 30-ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹிச்கி

'ஹே ராம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட்டின் முன்னணி நடிகை ராணி முகர்ஜி. இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை மணந்துள்ளார். இயக்குநர் சித்தார்த். பி. மல்ஹோத்ரா இயக்கிவரும் திரைப்படம் 'ஹிச்கி'. சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு நெட்டிசன்கள் இது 'ஃப்ரெண்ட் ஆஃப் தி கிளாஸ்' என்ற ஆங்கிலப் படத்தின் காப்பி என்று கலாய்க்க, 'படம் ப்ராட் கொஹென் என்பவர் எழுதிய 'ஃப்ரெண்ட் ஆஃப் தி கிளாஸ்' என்ற புத்தகத்தைத் தழுவியது. அதைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுவிட்டோம் எனத் தெரிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு. 'டோரெட் சின்ரோம்' என்ற நரம்பு குறைபாடு கொண்ட கதாநாயகி எப்படி தான் நேசிக்கும் டீச்சர் பணியை மேற்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த். 'ஹிச்கி' திரைப்படம்  பிப்ரவரி 23 அன்று தமிழிலும் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!