50 மில்லியன் பவுண்டு சம்பளம் வாங்கும் நடிகர், வொண்டர்வுமன் தீபிகா... டாப் சினிமா செய்திகள்!

50 மில்லியன் பவுண்டு சம்பளம் வாங்கும் நடிகர், வொண்டர்வுமன் தீபிகா... டாப் சினிமா செய்திகள்!

50 மில்லியன் பவுண்டு சம்பளமாக வாங்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்

கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்பெக்டர், ஸ்கைஃபால் ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் `ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டேனியல் கிரைக். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து தயாராகவுள்ள படத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்கும் இப்படத்தில் நடிக்க 50 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் லாஸென்பி, ரோஜர் மூர், டிமோத்தி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் என ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்த முந்தைய நடிகர்கள் யாரும் யோசித்துக்கூட பார்க்காத தொகை இது. இந்திய மதிப்பில் இது சுமார் 450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜேம்ஸ் பாண்ட் - சினிமா செய்திகள்

இந்தியாவின் வொண்டர் வுமன் ஆகிறார் திபீகா படுகோன்

'பத்மாவத்' படத்தைத் தொடர்ந்து தீபிகா படுகோன் அடுத்து என்ன படம்  நடிக்கப்போகிறார் என்ற கேள்வி பாலிவுட் ரசிகர்களிடமிருந்து வந்தது. தற்போது, மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் என்னும் சண்டைக் கலையைப் பயின்று வருகிறார். ஹாலிவுட்டில் வெளியான வொண்டர் வுமன் படம் போன்றே பெண் சூப்பர் ஹீரோ கதை பாலிவுட்டில் தயாராகவுள்ள படத்தில் நடிப்பதற்காக இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 300 கோடி செலவில் தயாராகவுள்ள இப்படம் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்பது குறீப்பிடத்தக்கது.

திபீகா படுகோன் - சினிமா செய்திகள்             

பரபரப்பை ஏற்படுத்திய மம்மூட்டியின் ஃபிடல் காஸ்ட்ரோ வேடம்

மலையாள சினிமாவில் கம்யூனிஸ கொள்கைகளைப் பற்றி சொல்லும் படம் அதிகம் வருவதுண்டு. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ஃபிடல் காஸ்ட்ரோபோல் சுருட்டுடன் இருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராஃபிக் டிசைனர் தனது கற்பனையில் வடிவமைத்த இந்தப் போஸ்டர் ட்விட்டரில் வைரலானது. இந்தப் போஸ்டரில் அச்சு அசல் காஸ்ட்ரோபோல் சுருட்டும் புகையுமாக மம்மூட்டி காட்சியளிக்கிறார். ஃபிடல் சுப்ரீம் என்ற பெயரும் இந்தப் போஸ்டரில் இடம்பெற இதை ரசிகர்கள் பலர் மம்மூட்டியின் புதிய படம் என்றே நினைத்து ஷேர் செய்தனர்.

மம்மூட்டி - சினிமா செய்திகள்

`மஹாநடி' படத்தைத் தொடர்ந்து தயாராகிறது என்.டி.ஆர் பயோபிக் 

ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு திரையுலகை கலக்கிய சாவித்திரியின் பயோபிக் 'மஹாநடி' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து என்.டி.ஆரின் பயோபிக் வேலைகளில் துரிதம் காட்டி வருகிறார் படத்தின் கதாநாயகனும் என்.டி ஆரின் மகனுமான பாலகிருஷ்ணா. என்.டி ராமா ராவ் பிறந்த நாளையொட்டி பேசிய பாலகிருஷ்ணா, என்.டி.ஆர் பயோபிக்கை இயக்கப்போவது தெலுங்கில் கம்யம், வேதம், கௌதமிபுத்ரா சத்கர்ணி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய க்ரிஷ் எனத் தெரிவித்தார். 

என்.டி.ஆர் - சினிமா செய்திகள்      

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!