வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (16/09/2018)

கடைசி தொடர்பு:14:37 (16/09/2018)

"இப்போ இந்த வகை கவுன்களே டிரெண்ட்!" - ஃபேஷன் டிசைனர் சொல்லும் சீக்ரெட்

ஃபேஷன் நம்முடைய வாழ்வின் மிகப்பெரிய அங்கம். புத்தம் புது கலெக்‌ஷன்களை அணிவதில் கொள்ளை ஆர்வம் நமக்கு. வித்தியாசமான டிரெண்ட் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவதில் கூடுதல் மகிழ்ச்சி. இன்றைய டீன் ஏஜ் பெண்கள் வித்தியாசமான கலர்ஃபுல் ஆடைகளை அணியவே விரும்புகிறார்கள். கேஷுவலுக்கு தனி செலக்‌ஷன், விசேஷங்களுக்குத் தனி செலக்‌ஷன் என அவர்களின் தேடலும் வித்தியாசமாகவே இருக்கும். தற்போது, ஸ்கர்ட் வடிவில் அணியும் ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம். கேஷூவல், ஃபங்ஷன் என இரண்டுக்கும் மேட்சாக இருக்கும் அந்த ஆடைகளுக்கு டீன் ஏஜ் பெண்கள் அடிமை. அப்படிப்பட்ட புது கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துகிறார், 'யோஸ்னாஸ் பொட்டிக்' உரிமையாளர் இலவஞ்சி.

ஃபேஷன் கவுன்

நிறத் தேர்வு

எந்த ஆடையாக இருந்தாலும், நிறத் தேர்வு ரொம்ப அவசியம். அவங்க நிறத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுக்கணும். சிலருக்கு டார்க் கலர் பொருத்தமாக இருக்கும். சிலருக்கு அதுவே டல்லாக காண்பிக்கும். எனவே, அவரவர் ஸ்கின் நிறத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.

கவுன்ஸ்

முட்டிக்குக் கீழ் வரை இருக்கும் இந்த வகை கவுன்ஸ், பார்ப்பதற்கு ரிச் லுக் கொடுக்கும். எல்லோருக்கும் செட் ஆகும் வகையில் வித்தியாசமாகக் கிடைப்பதால், பலரும் விரும்புகிறார்கள். கொஞ்சம் ஷார்ட்டாக இருப்பவர்கள், முட்டி வரையிலான ஸ்கர்ட்ஸைப் பயன்படுத்தினால், நீட் அண்டு பர்ஃபெக்ட் லுக் இருக்கும். இந்த வகை ஆடைகள், காட்டனிலும் கிடைக்கிறது. அணிந்துகொள்ள ஏதுவாகவும், டிரடிஷனலாகவும் இருக்கும்.

அக்ஸசரீஸ் தேர்வு 

இந்த வகை ஆடைகளுக்கு சிம்பிளான அக்ஸசரீஸ் போதும். காட்டன் கவுனுக்குக் கழுத்தில் எந்த அக்ஸசரீஸும் அணியத் தேவையில்லை. சிம்பிளான கம்மல் போதும். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும். பெரிய சோக்கர் நகைகள் அணிந்தால், அதற்குச் சின்ன கம்மல் போட்டால் போதும். ஆனால், இந்த வகை ஆடைகளுக்கு சோக்கர் போன்ற அக்ஸசரீஸ் தேவையில்லை.

கவுன்

டிரடிஷனல் டிசைன்ஸ்

இந்த வகை கவுன்களில், களம்காரி ஆடைகளும் இருக்கின்றன. பழைய காலத்தில் டிரெண்டிங்காக இருந்த சுங்குடி துணிகளிலும் இதுபோன்ற கவுன்கள் கிடைக்கின்றன. இயல்பான நீட் லுக் விரும்பிகளுக்கு, இந்த வகை ஆடைகள் உதவியாக இருக்கும். பட்டுச்சேலையில்தான் டிரடிஷனல் லுக் கிடைக்கும் என நினைப்பவர்கள், இந்த வகை கவுன்களைப் பயன்படுத்தலாம். மிகவும் லைட் வெயிட்டாக இருப்பதால், பலரும் இந்த வகை ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஷூ செலக்‌ஷன்ஸ்

இந்த வகை ஆடைகளுக்கு ஷூ பொருத்தமாக இருக்கும். ரெகுலர் ஷூவாக இருந்தாலும் ஓரளவுக்கு செட் ஆகும். பார்டி ஷூ புரொஃபஷனல் ஹை லுக் கொடுக்கும். இந்த ஆடைகளுக்கு, மார்டன் ஸ்லிப்பர்ஸ் அவ்வளவாகப் பொருந்தாது. ஷூ மட்டுமே பர்ஃபெக்ட் மேட்ச்.

ஸ்லீவ்லெஸ் கவுன்

இதில், ஸ்லீவ்லெஸ் வகை கவுன்களும் இருக்கும். பார்ட்டிகளுக்கு செல்லும்போது, ஸ்லீவ்லெஸ் கவுன் வகைகள் செட் ஆகும். சிம்பிளான டிசைன்களுடைய கவுன்களுக்கு ஸ்லீவ்லெஸ் ஹேண்டு கச்சிதமாகப் பொருந்தும். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஸ்லீவ்லெஸ் செட் ஆகும்.

இந்த வகை கவுன்களில் உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப, பாதி அளவு, முழு அளவு என்று கை தைத்துக்கொள்ளலாம். ஒருமுறை அணிந்து பிடித்துப் போய்விட்டால், இந்த கவுன் கலெக்‌ஷன்ஸ் நிச்சயம் உங்களுடைய வார்ட்ரூப்பில் இடம்பெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்