Published:Updated:

சனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்? #TVSchedule

நமது நிருபர்
சனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்? #TVSchedule
சனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்? #TVSchedule

ஐ.சி.சி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பா நடந்துக்கிட்டிருக்கும் இந்த நேரத்துல, எல்லா ஆண்களுக்கும் வீக்எண்ட் ப்ளான் டிவில மேட்ச் பார்க்கிறதுலதான் இருக்கும். வீட்டுல இருக்கும் பெண்கள் எப்பவும்போல`சீரியல்ஸ், மூவீஸ்னு ஏதோ ஒரு என்டர்டெயின்மென்ட் சேனல் பார்க்கணும்'னு ஆசைப்படுவாங்க. இதுபோக, குழந்தைங்க இருக்குற வீட்டுல கார்ட்டூன் சேனல் வேற அப்பப்போ எட்டிப்பார்க்கும். அதுக்கு ஏத்தமாதிரி இந்த வீக்எண்ட்ல எல்லா சேனல்கள்லயும் சூப்பர்-டூப்பர் ஹிட் மூவீஸ் வரிசையில இருக்கு. ஸோ, மூவீயா இல்ல மேட்சா'ன்னு நீங்களே முடிவு எடுங்க..!

ஸ்டார் மூவீஸ் (சனி): `எக்ஸ்- மேன் மூவி  சீரீஸ்' காம்போ:

கிட்டத்தட்ட ஆறு வருஷங்களா இந்த `எக்ஸ்-மேன் சீரீஸ்'  ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்கவைத்த  ஒரு  மெகா காமிக்ஸ் ஸ்டோரி. காலை 10 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 11.30 மணி வரை `எக்ஸ்-மேன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்', `எக்ஸ்-மேன்', `எக்ஸ்-மேன் 2', `எக்ஸ்-மேன் லாஸ்ட் ஸ்டாண்ட்', `எக்ஸ்-மேன் டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட்' ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. நம்ம ஊர்ல கடவுள், தீய சக்தியை அழிப்பதைப் படமா எடுப்பாங்க. அங்கே டெக்னாலஜியைப் பயன்படுத்தி `எப்படித் தீய சக்தியை அழிக்கலாம்'னு எக்ஸ்-மேன் நமக்குத் திரையில் பாடம் எடுப்பார். சனிக்கிழமை நாள் முழுக்க இந்த எக்ஸ்-மேன் சீரீஸ் ஒரு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜீ சினிமாஸ்: `பாஸிகர்', சனிக்கிழமை,  மாலை 8.35:

ஷாரூக் கான் இல்லாமல் பாலிவுட் வீக்எண்ட்  கிடையாது.  இந்த வாரமும் அப்படியே. ஷாரூக் கான் மற்றும்  கஜோல் நடித்த `பாஸிகர்'தான் சனிக்கிழமை ஸ்பெஷல் மூவீ.

சினிமா டி.வி (இந்தி) `பில்லா 2' சனிக்கிழமை, மாலை 8.20:

தமிழ்ப் படங்களை இந்தியில் டப் செய்து ஹிட் அடித்த மூவிகளில் அஜித் நடித்த பில்லாவும் ஒன்று. கேங்ஸ்டர் - ஆக்‌ஷன் மூவீ.

ஸ்டார் மூவீஸ்: `குங் ஃபூ பாண்டா 3' ஞாயிறு, காலை 11.00:

குழைந்தைகளுக்கான 3-டி ஆக்‌ஷன்- காமெடி மார்ஷியல் ஆர்ட்ஸ் மூவீ.

ஹெச்.பி.ஓ: `10,000 பிசி' ஞாயிறு, மதியம் 12.56:

ஸ்டீவன் ஸ்ட்ரைட் நடித்த ஹிஸ்டாரிக் அட்வென்சர் ஃபிலிம். ஆதி மனிதனின் வேட்டையாடுதல் வாழ்க்கையைத் தத்ரூபமாக எடுத்துக்காட்டிய படமும்கூட.

ஜீ ஸ்டூடியோ: `இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் க்ரிஸ்டல் ஸ்கல்' ஞாயிறு, மதியம், 12.15:

ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் ஹாரிசன் போர்ட் மற்றும் கேட் ப்ளான்சட்  நடித்த ஆக்‌ஷன் அட்வென்சர் ஃபிலிம். 

டபுள்யூ. பி: `ஷெர்லாக் ஹோம்ஸ்' ஞாயிறு, காலை 11.49:

கய் ரிட்சி இயக்கத்தில் ராபர்ட் டௌனி நடித்த பிரிட்டிஷ்-அமெரிக்கன் டிடெக்டிவ் - திரில்லர் மூவீ.

மூவீஸ் நவ் ஹெச்.டி: `ஃபைனல் டெஸ்டினேஷன்'  ஞாயிறு, மாலை 7.25:

ஜேம்ஸ் வோங் இயக்கத்தில் டேவன் சவா, அலி லார்ட்டர் நடித்த சூப்பர் நேச்சுரல் ஹாரர் ஃபிலிம்.

இப்படிப்பட்ட ஹிட் மூவீஸ் மத்தியில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மேட்ச்சில் சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கின்றன. இதில் இங்கிலாந்து ஏற்கெனவே அரையிறுதிக்குத் தேர்வாகியிருக்கிறது. ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு இந்தியா- சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோதவிருக்கின்றன. இரண்டு நாடுகளுக்குமே அரையிறுதிக்கான வாழ்வா-சாவா மேட்ச் இது. ஸோ, இந்த வார வீக்எண்ட் எல்லாருக்கும் மாபெரும் என்டர்டெயின்மென்ட்டா அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹேப்பி வீக்எண்ட்!!

நமது நிருபர்