அஞ்சலியின் ஆசை

சித்தி கொடுமையில் வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலி பற்றிய செய்திகள் இன்னமும் அணையாமல் இருக்கிறது. அதற்குள் வீராட் கோஹ்லி போல மாப்பிள்ளை வேண்டும் என்று அஞ்சலியே ஆசை ஆசையாய்க் கூறுகிறார். மு.களஞ்சியம், ஜெய், தெலுங்கு நடிகர் என்று அஞ்சலியின் காதலர்கள் லிஸ்ட் மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்காக அலட்டிக்கொள்ளாமல் அஞ்சலி பதில் அளித்த விதம்தான் சுவாரஸ்யம்.

மழுமழுவென தாடியை ஷேவ் செய்திருப்பதைவிட டிரிம் செய்யப்பட்ட தாடியோடு உள்ளவரைத்தான் பிடிக்கும். அதைவிட முக்கியம் எனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் தன்னம்பிக்கை உடையவராகவும், தனது உறுதியில் மாற்றம் இல்லாதவரும் கடினமான தருணங்களிலும் என்னைக் கைவிடாமல் பாதுகாப்பவராக இருக்க வேண்டும். என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வீராட் கோஹ்லி போல இருக்க வேண்டும் என்கிறார் விழிகள் படபடக்க. அஞ்சலியை இனிமேல் எத்தனை பேர் அஞ்சலையாகப் பார்க்கப் போகிறார்களோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!