தண்ணி குடம் எடுத்து வந்த தங்கம்

நந்தா பெரியசாமியின் ‘ அழகன் அழகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆருஷி. நான்கு மாதங்கள் சென்னையிலேயே தங்கி தமிழ் டியூஷன் படித்த பிறகே அம்மணி கேமரா முன் நிற்கத் தயாரானதில் இருந்தே அவரின் தீராத சினிமாக் காதலை அறிந்துகொள்ள முடியும். ‘அழகன் அழகி’யில் அப்பாவியாய் நடித்த பொண்ணு இப்போது ‘அடித்தளம்’ படத்தில் தன் திறமையை அழுத்தமாய்ப் பதிய வைக்க வந்திருக்கிறது.

முதலில் கதையே சொல்லாமல்தான் என்னை கேமராவுக்கு முன்னால் நிற்க வைத்தார் டைரக்டர் இளங்கண்ணன். ஒரு அழுக்குப் புடவையைக் கொடுத்தார். 'ஐயோ, இதைப் போய் கட்டணுமா' என்று நினைத்துக் கொண்டே கட்டினேன். டல் மேக்கப் போட்டாங்க. நிறைய செங்கல்லை எடுத்துத் தலையில் அடுக்கினாங்க. ஒரு வேலையும் செய்யாமல் செல்லமா வளர்ந்தவள் நான். அதன் கஷ்டம் அப்போதுதான் புரிந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்த பிறகுதான் எனக்கு இந்தப் படத்தின் கதையையே சொன்னார். படப்பிடிப்பு சின்ன குடிசையில் நடந்தது. அந்த வீட்டை நானே பெருக்கி, நானே பாத்திரம் தேய்த்து வேலை செய்வேன். இதற்கு முன் வீட்டில் ஒரு வேலையும் நான் செய்தது இல்லை. அங்கே எல்லா வேலைகளையும் நானே செய்யும்போது கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் தண்ணி எடுக்கக் குடத்தை இடுப்பில் வைத்தபோதுதான் படாத பாடு பட்டுவிட்டேன். குடம் இடுப்பிலேயே நிற்க மாட்டேங்குது. குடத்தின் மேல் கான்சன்ட்ரேஷன் போச்சுன்னா டயலாக் மறந்துடுது. டயலாக்கை மனசில் வைத்துக் கொண்டால் குடம் தடுமாறுது. எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கைகூடி வரும்னு நம்புறேன் என்றார் ஆருஷி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!