ஹாட்ரிக் கூட்டணி! | வெற்றிமாறன், தனுஷ்

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (08/05/2013)

கடைசி தொடர்பு:16:37 (08/05/2013)

ஹாட்ரிக் கூட்டணி!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி  மூன்றாவது முறையாக இணைகிறது. இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.  ‘‘ தனுஷ்-வெற்றிமாறன் படம் உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தொடக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

படம் குறித்த பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மூன்று வருட காத்திருப்புக்கு இப்போது தான் பலன் கிடைத்திருக்கிறது. நான் தயாரித்த படங்களில் இது பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் ’’ என  டிவிட்டரில் கூறியிருக்கிறார் தயாநிதி அழகிரி.

பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இப்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. மரியான், நையாண்டி, ராஞ்சனா என பிஸியாக நடித்து வரும் தனுஷ் இந்தப் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்