பாடல்... சரணம், பல்லவிக்கான சவால்..! விடைகள் இங்கே #LyricsChallenge

சரணம், பல்லவிக்கான சவால்..! இதென்ன பாடல் கண்டுபிடிங்க பாக்கலாம்? #LyricsChallenge என்ற க்விஸ் போட்டி நடத்தி இருந்தோம். அதற்கான விடைகள் இதோ...

 

பாடல்

பாடல் வரிகள்

1.  இது இருளல்ல அது ஒளியல்ல 

     இது ரெண்டொடும் சேராத பொன்நேரம்

     தலை சாயாதே, விழி மூடாதே 

     சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்  

 

பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே 

படம் - மின்சாரக் கனவு 

 

2.   சுற்றும் உலகின் விட்டம் தெரியும் 

      சூரியன் பூமி தூரம் தெரியும் 

      கங்கை நதியின் நீளம் தெரியும் 

     வங்கக்கடலில் ஆழம் தெரியும் 

     காதல் என்பது சரியா தவறா 

     இது தான் எனக்கு தெரியவில்லை 

பாடல் - பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

படம் - உயிரோடு உயிராக

 

3. பழகிய ருசியே பழகிய பசியே 

    உயிரில் உன் வாசம் 

    நெருங்கிய கனவே, நொறுங்கிய கணமே 

    உதட்டில் உன் சுவாசம் 

பாடல் - ஏதேதோ எண்ணங்கள் வந்து 

படம் - பட்டியல் 

 

4.  வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் 

     நீதான் என்று பார்த்தேனடி சகியே 

     பெண்கள் கூட்டம் வந்தால், எங்கே நீயும் என்றே 

     இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி!

பாடல் - மேற்கே மேற்கே 

படம் -  கண்ட நாள் முதல் 

 

5. என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல் 

    மனதுள்ளே  வந்தாடுவதாரோ 

    என் சுவாச அறையாகி, எனை தாங்கும் உடலாகி 

    உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ 

பாடல் - காதல் என்னுள்ளே

படம் - நேரம்  

 

6. தீப்பொறி எழ இரு விழிகளும் 

   தீக்குச்சி என என்னை உரசிட 

   கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே 

   அவள் அழகை பாட ஒரு மொழியில்லையே 

   அளந்து பார்க்க பல விழி இல்லையே 

   என்ன இருந்தபோதும், அவள் எனதில்லையே! 

பாடல் -  வெண்மதி வெண்மதியே நில்லு

படம் - மின்னலே 

 

7. எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன் 

    எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் 

    இனிமேல் நானே நீயானேன் 

    இவன் பின்னாலே போவேனே! 

பாடல் - விண்மீன் விதையில்

படம் - தெகிடி 

 

8. தனிமை உன்னை சுடுதா 

    நினைவில் அனல் தருதா 

    தலையனைப்பூக்களில் எல்லாம் 

    கூந்தலில் மனம் வருதா ?

பாடல் - கொஞ்சி பேசிட வேணாம், 

படம் - சேதுபதி 

 

9. ஹே நீ என்ன பாக்குற மாதிரி 

    நான் உன்ன பாக்கலையே 

    நான் பேசும் காதல் வசனம் 

    உனக்கு தான் கேக்கலையே 

   அடியே என் கனவுல, செஞ்சு வச்ச சிலையே 

    கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே 

பாடல் - தங்கமே உன்ன தான், 

படம் - நானும்  ரவுடி தான் 

 

10.  என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா?

       மலர்  சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

       உன் பெயரை சொன்னால் போதும்

       நின்று வழிவிடும் காதல் நதியே 

       என் சுவாசம் உன் மூச்சில், உன் வார்த்தை என் பேச்சில் 

பாடல் - மலர்களே மலர்களே... 

 படம் - லவ்பேர்ட்ஸ் 

 

11.  கலைந்தாலும் மேகம், அது மீண்டும் மிதக்கும் 

      அது போல தானே, உந்தன் காதல் எனக்கும் 

      நடை பாதை  விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு 

     நெருப்பிலும் முடியாதம்மா , நினைவுகளை அழிப்பதற்கு 

     உனக்காக காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன் 

பாடல் - போகாதே போகாதே நீ இருந்தால்... 

படம் - தீபாவளி 

 

12.  எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து 

      ஈர மழை தூவுதே 

      எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை 

      என்றபோதும் இது நீளுதே 

      யார் என்று தெரியாமல், பேர் கூட அறியாமல் 

      இவளோடு ஒரு சொந்தம் உருவானதே 

பாடல் - பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே  

படம் - மதராசபட்டினம் 

 

 13.  வாய் மொழிந்த வார்த்தை யாவும் 

        காற்றில் போனால் நியாயமா  

        பாய் விரித்து பாவை பார்த்த 

        காதல் இன்பம் மாயமா

பாடல்  - சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, 

படம் - தளபதி 

 

14.  உனக்குள் இருக்கும் மயக்கம், 

      அந்த உயரத்து நிலவை அழைக்கும் 

      இதழின் விளிம்பு துளிர்க்கும் 

       என் இரவினை பனியில் அணைக்கும்.

பாடல் - உன் சிரிப்பினில் 

படம் - பச்சைக்கிளி முத்துச்சரம் 

 

15.  எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல

       சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

       என் பெண்மையும் இளைப்பாறவே

       உன் மார்பிலே இடம் போதுமே

       ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

       மெதுவாக இதயங்கள் இணைகிறதே

பாடல் - யாரோ இவன் 

படம் -  உதயம்

 

16.  மழையில் கழுவிய மண்ணிலே 

       தொலைந்த காலடி நானடி 

       முகத்தை  தொலைத்த என் வாழ்வுக்கு 

       நிலைத்த முகவரி நீயடி 

      

பாடல் - பர பர பர பறவை ஒன்று

 படம் - நீர்ப்பறவை      

       

17.  ஒரு சிறு வலி இருந்ததுவே 

      இதயத்திலே இதயத்திலே 

       உனதிரு விழி தடவியதால் 

       அமிழ்ந்து விட்டேன் மயக்கத்திலே 

       உதிரட்டுமே உடலின் திரை 

  பாடல் - அனல் மேலே பனித்துளி,

  படம் - வாரணம்  ஆயிரம் 

 

18.  சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது.. 

       சில் வண்டுகள் காதல் கொண்டால்..செடி என்ன கேள்வி கேட்குமா..  

      வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே 

      ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் 

       அது ரொம்ப பாவம் என்பதா 

 

பாடல் - தாஜ்மஹால் தேவையில்லை 

 படம் - அமராவதி 

 

19.  பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ

       மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ

       ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 

       ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே 

       விரல்கள் தொடவா விருந்தைத் தரவா

       மார்போடு கண்கள் மூடவா

 

 பாடல் - மலரே மெளனமா 

 படம் - கர்ணா 

 

  20 . இரவும் அல்லாத பகலும் அல்லாத 

         பொழுதுகள் உன்னோடு கழியுமா ?

          தொடவும் கூடாத படவும் கூடாத 

          இடைவெளி இப்போது குறையுமா ?

 

  பாடல் - கண்கள் இரண்டால்

   படம் - சுப்ரமணியபுரம் 

 -தொகுப்பு: பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!