வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (24/02/2015)

கடைசி தொடர்பு:15:56 (24/02/2015)

தெலுங்கில் ஒரேநாளில் பிசாசு, ஆம்பள!

மிஷ்கின் இயக்கத்தில் வித்யாசமான கதைக்களத்துடன் பேய்ப்படமாக வெளியான படம் ‘பிசாசு’. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 20ம் தெதி வெளியானது. படத்தை பலரும் பாராட்டிய வேளையில் தற்போது இந்த படம் தெலுங்கில் டப்பாகி வெளியாக உள்ளது. 

இதே நாளில் சுந்தர் .சி.இயக்கத்தில் பொங்கல் சிறப்பாக வெளியான ‘ஆம்பள படமும் தெலுங்கில் டப்பாகி வெளியாகியுள்ளது. 

இவையிரண்டும் ஒரே நாளில் வரும் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே தெலுங்கில் விஷாலுக்கு வரவேற்புகள் அதிகம், மேலும் ‘பிசாசு’ படம் வித்யாசமான கதைக்களம் என்பதாலும் இரண்டுமே தற்போது பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

’பிசாசு’ படம் ’பிசாச்சி’ என்ற பெயரிலும், ‘ஆம்பள’ படம் ‘மகமகாராஜு என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. இதே 27ம் தேதி தெலுங்கிலும் எந்த படங்களின் வெளியீடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்