ஆக்‌ஷன் ஹீரோவாக உதயநிதி அடுத்த ஸ்டெப்! | எமி ஜாக்சன், உதயநிதி டாலின், நண்பேன்டா, Amy Jackson , Udhayanidhi Stalin, nanbenda

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (24/02/2015)

கடைசி தொடர்பு:17:02 (24/02/2015)

ஆக்‌ஷன் ஹீரோவாக உதயநிதி அடுத்த ஸ்டெப்!

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நண்பேன்டா’ ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தப் படத்தை தொடர்ந்து திருகுமரன் இயக்கும் படத்தில் உதயநிதி நடித்துவருகிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் கொச்சினுக்கு சென்றுள்ளனர். இந்த படத்திற்கு முதலில் ‘கெத்து’ என தலைப்பு வைக்கபப்ட்டதாக கூறப்பட்டது எனினும் இந்த தலைப்பை வேறு ஒருவர் ஏற்கனவே பதிந்து வைத்துள்ளதால் படத்திற்கு இன்னும் தலைப்பு உறுதியாகவில்லை.

கொச்சியில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இவ்வளவு நாட்களாக காமெடி , காதல், நண்பர்கள் போன்ற கதைக்களம் உள்ள படங்களில் நடித்து வந்த உதயநிதி இந்த படத்தில் ஆக்‌ஷனை முதன்மையாக கொண்டு நடிக்க இருக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்