இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த 4 நிறுவனங்களுக்கு தடை! | ilayaraja, இளையராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (04/03/2015)

கடைசி தொடர்பு:12:24 (04/03/2015)

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த 4 நிறுவனங்களுக்கு தடை!

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு 4 நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை ஒப்பந்தம் முடிந்தும் தனது பாடல்களை எக்கோ ரெக்கார்டிங், யூனிசிஸ், அகி மியூசிக், கிரி டிரேடிங் ஆகிய 4 நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அவ்வாறு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே, அந்த நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (3ஆம் தேதி) நடைபெற்றது. அப்போது 4 நிறுவனங்களும் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தவதற்கு நிரந்தர தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்