ஆபாச வீடியோ - சீறிப்பாயும் ஹன்சிகா! | ஆபாச வீடியோ, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன், hansika, sridivya, laxmi menon,

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (05/03/2015)

கடைசி தொடர்பு:14:25 (05/03/2015)

ஆபாச வீடியோ - சீறிப்பாயும் ஹன்சிகா!

சமீபத்தில் நிறைய ஹீரோயின்களின் ஆபாச வீடியோக்கள் என நெட்டில் பரவி வைரலாகி வருகிறது. தன்ஷிகா, லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹா வரை இந்த பாதிப்புகள் உருவாகியுள்ளது. இதுகுறித்து சினிமா விகடனிலும் விழிப்புணர்ச்சி கட்டுரை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்த வீடியோ சர்ச்சைக்கு ஹன்சிகா பதில் கூறியுள்ளார். இது இதயமற்ற செயல். நாங்கள் ஒன்றும் பகட்டான வாழ்க்கை வாழவில்லை. வருடம் 365 நாட்களுக் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம். எங்களின் தரத்தை குறைக்க எப்படி இவர்கள் சிந்திக்கிறார்கள் தெரியவில்லை. 

முகத்தை மறைத்து ஆபாச வீடியோ வெளியிடுவது , கற்பழிப்பு குற்றத்தை விட கொடுமையானது. கடவுள் இவர்களை தண்டிக்கனும் என கோபமடைந்துள்ளார்.

இது குறித்து ஏன் புகார் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டபோது, என்னை சேர்ந்த நண்பர்களுக்கும், சினிமா துறையிலும், ஏன் என்னை நேசிப்பவர்களுக்கும் கூட அது நான் இல்லை என்பது அப்பட்டமாக தெரியும். மேலும் அது ஒரு அரேபிய பெண் என்னை போலவே இருப்பவர். பிறகு ஏன் நான் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார். நியாயம் தான் . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்