ட்விட்டரில் சூர்யா!

சினிமா பிரபலங்கள் தங்களுடைய மகிழ்சியையும், விருப்பங்களையும் தெரிவிக்கும் களங்களில் ஒன்று ட்விட்டர். மகளிர் தினத்தன்று சூர்யா ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சூர்யாவின் பெயரில் பல ட்விட்டர் பக்கங்கள் இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக நேற்று ட்விட்டர் பக்கத்தினை தொடங்கினார். @suriya_offl (suriya official) என்ற கணக்கில் தன்னுடைய ட்விட்டர் தளத்திற்கு பெயரிட்டுள்ளார்.

முதல் ட்விட்டாக ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் நான் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளேன். ரொம்ப நாளாக வரவேண்டும் என்ற ஆசையுடன் இருந்து, இன்று முதல் ட்விட்டர் தளத்தில் நான் இணைந்திருக்கிறேன். ஏன் என்று கேள்வி கேட்டால் நினைக்க முடியாத அளவுக்கு என் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு தான் என்று நெகிழ்த்திருக்கிறார். மேலும் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

சூர்யா ரசிகர்கள் #welcomesuriyaToTwitter என்ற ஹெஷ்டேக் ஒன்றை உருவாக்கி தங்களது மகிழ்சியை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த ஹெஷ்டேக் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 11 ட்வீட்களை செய்திருக்கிறார். 57, 290 ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!