என் ராசாவின் மனசிலே பாகம் - 2

ராஜ்கிரண் மற்றும் மீனா நடிப்பில் 1991ல் வெளிவந்த “ என் ராசாவின் மனசிலே” படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது.

இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தயாரிப்பாளராக இருந்த ராஜ் கிரண் அறிமுக நடிகராகவும், நகைச்சுவை உலகின் மன்னனாக சாதனைகள் படைத்த வடிவேலு அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான். மீனா, சாரதா ப்ரீத்தா, ராஜ் சந்தர், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த படம்.

”என் ராசாவின் மனசிலே” படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக, ’குயில் பாட்டு’, ’பெண்மனசு ஆழமென்று’, ’பாரிஜாத பூவே’ மற்றும் வடிவேலுவிற்கு ஹிட் அடித்த ’போடா போடா புண்ணாக்கு’ போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விழா கொண்டாடிய இப்படம் 24 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் எடுக்கவிருக்கிறார்கள். இப்படத்திலும் ராஜ்கிரணே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் மீனாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

முதல் பாகத்தில் மாயாண்டியும், சோலையம்மாவும் இறந்து விடுவது மாதிரி கதை கையாளப்பட்டிருக்கும். இரண்டாம் பாகத்தில் இறக்காமல் இருந்தால் என்ன நிகழும் என்பதே கதையாம். மேலும் இளையராஜா தான் இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!