ரஜினி, கமல் ஒரே படத்திலா? | rajini, kamalhassan, pk, sanjaydat, சஞ்சய் தத், அமீர்கான், பிகே, ரஜினி, கமல்

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (11/03/2015)

கடைசி தொடர்பு:17:26 (11/03/2015)

ரஜினி, கமல் ஒரே படத்திலா?

அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளிவந்து ஹிட் அடித்த “பிகே” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது ஜெமினி லேப் நிறுவனம்.

பிகே படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. கதையில் சில மாற்றங்கள் செய்தால் கமல் நடிப்பார் என்று சினிமா வட்டாரம் தெரிவித்து வந்தது.

மூன்று இயக்குநர்களிடம் கமலை வைத்து இயக்க தயாரா என்று பேசியிருக்கிறார்கள். மூவருமே சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷம் அடிக்கப்போகிறது என்பது கமலுக்கும் ஜெமினி நிறுவனத்திற்கும் தான் தெரியும்.

பிகே இந்தியில் சஞ்சய்தத் நடித்த கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்ற பேச்சுவார்த்தை நிலவுகிறது. ஆனால் இந்தியில் சஞ்சய்தத் படத்தில் இறந்துவிடுவார். ஆனால் தமிழில் ரஜினி இறந்தது போல எடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால் சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர். 

பிகே படத்தில் யாரெல்லாம் நடிப்பார்கள், யார் இயக்கவிருக்கிறார்கள் என்ற முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்