தலைமுறைகள் தாண்டி இசையமைக்கும் இளையராஜா! | விக்ரம் பிரபு, பிரபு, சிவாஜி, ராகவன், illayaraja, vikram prabhu, sivaji ganeshan, ragavan, இளையராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (12/03/2015)

கடைசி தொடர்பு:11:38 (12/03/2015)

தலைமுறைகள் தாண்டி இசையமைக்கும் இளையராஜா!

’கும்கி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ’இவன் வேற மாதிரி’, ’சிகரம் தொடு’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசன், பிரபு இருவரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி விக்ரம் பிரபுவின் படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார்.

இயக்குநர் விஜய் இயக்கும் “இது என்ன மாயம்” படத்திலும், குமாரவேலன் இயக்கும் “வாகா” படத்திலும் நடித்துவருகிறார் விக்ரம் பிரபு. தொடர்ந்து ’மஞ்சப்பை’ இயக்குநர் ராகவனின் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகிகள், மற்றும் படக்குழுவிற்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார்.

சிவாஜிகணேசனுக்கு பல படங்களில் இசையமைத்தவர் இளையராஜா. தொடர்ந்து பிரபுவின் ’சின்னதம்பி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர். அடுத்ததாக மூன்றாம் தலைமுறையான விக்ரம்பிரபுவின் படத்திற்கும் தற்போது இசையமைக்கவிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்