பொது நலம் கருதி வெளியிடுகிறார் லட்சுமி மேனன்! | லெட்சுமி மேனன், U QUIT I QUIT, lakshimi menon

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (12/03/2015)

கடைசி தொடர்பு:12:34 (12/03/2015)

பொது நலம் கருதி வெளியிடுகிறார் லட்சுமி மேனன்!

’சுந்தரபாண்டின்’, ’கும்கி’, ’பாண்டியநாடு’, ’ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் தற்பொழுது நடிப்புக்கு ஸ்டாப் சொல்லி விட்டு படிப்பில் பிஸியாகி இருக்கிறார். தற்பொழுது இரண்டு பரிட்சைகள் முடிந்த நிலையில் அடுத்த பரீட்சைக்காக படித்து வருகிறார் லட்சுமிமேனன்.

நிக்கோடெக்ஸ் நிறுவனம், "நீங்கள் விட்டு விடுங்கள் நானும் விட்டுவிடுகிறேன்" (U Quit I Quit) என்ற வாசகத்துடன் பல குறு வீடியோக்களை வெளியிட்டு புகையிலைக்கு எதிரான இயக்கமாக நடத்திவருகிறது. பொதுநலம் கருதி லட்சுமிமேனனும் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளார்.

லட்சுமி மேனன் தன்னுடைய சமுக வலைதளத்தில், “ புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களின் அன்பானவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டுமென்றால் நீங்கள் உங்களிடமுள்ள ஏதாவது கெட்டப் பழக்கத்தினை கைவிடுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தினை நீங்கள் கைவிட்டால் நானும் என் கெட்ட பழக்கங்கள் சிலவற்றை விட்டு விடுகிறேன் என பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை அதிகமாக பகிருங்கள் என்று கூறி நீங்கள் விடுங்கள் நானும் விடுகிறேன் (U Quit I Quit) என்ற வாசகத்தினை கையில் வைத்தவாறு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்