நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல்

நார்வே நாட்டில் ஆண்டுதோறும் அனைத்துலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழிலிருந்து 14 படங்கள் போட்டியில் இணைந்துள்ளன.

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் (NTFF) பல்வேறு பிரிவுகளில் “ காவியத் தலைவன்” திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியது. மேலும் சிறந்த படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த “குக்கூ” தேர்வாகியுள்ளது.


வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலுமகேந்திரா நினைவு விருதினை, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்திற்காக பார்த்திபன் பெறுகிறார். இதன் விருது வழங்கும் விழா நார்வேயின் ஆஸ்லோ நகரில் ஏப்ரல் 26ல் நடைபெறவுள்ளது.

விருது பெற்ற தமிழ் படங்கள் பட்டியல் இதோ,

சிறந்த படம் : குக்கூ

சிறந்த இயக்குனர்: வசந்தபாலன் (காவியதலைவன்)

சிறந்த நடிகர் : சித்தார்த் (காவிய தலைவன்)

சிறந்த நடிகை: வேதிகா (காவிய தலைவன்)

சிறந்த இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் (குக்கூ - ஜிகர்தண்டா)

சிறந்த தயாரிப்பு - ராமானுஜம் (கேம்பர் சினிமா)

சிறந்த பாடலாசிரியர் : யுகபாரதி (குக்கூ)

குணச்சித்திர நடிகர் : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

துணை நடிகர் : நாசர் (காவிய தலைவன்)

துணை நடிகை : குயிலி (காவியத் தலைவன்)

சிறந்த ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன் (கயல்)

சிறந்த பாடகர் : ஹரிசரண் (காவிய தலைவன்)

சிறந்த பாடகி : வைக்கம் விஜயலெட்சுமி (புதிய உலகை - என்னமோ ஏதோ)

சிறந்த எடிட்டிங் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

சமுக சேவை விருது : இயக்குனர் கவுரவ் (சிகரம் தொடு)

வாழ்நாள் சாதனையாளர் விருது : இயக்குனர் கே.பாலசந்தர்

கலைச் சிகரம் விருது : சிவகுமார்

ஸ்பெஷல் ஜூரி விருது : நடிகர் வின்செண்ட் (கயல்)

பாலுமகேந்திரா நினைவு விருது : இயக்குநர் பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!