“அஜித் மெகா ! சூர்யா அமேசிங்! “ துல்கர் ஓபன் டாக்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கேரளாவின் யங் ஸ்டார். " "உஸ்தாட் ஹோட்டல்", "பெங்களூர்டேஸ்" போன்ற படங்களின் மூலம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தவர்.

தமிழில் சரளமாக பேசும் துல்கர் சல்மான் சென்னையிலேயே படித்து வளர்ந்தவர். ’வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகி தற்பொழுது மணிரத்னம் படமான “ஓ காதல் கண்மனி” படமும் இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது.

துல்கர் சல்மான் மற்றும் நித்யாமேனன் இருவருக்குமிடையேயான காதலும் காதல் சார்ந்த படமே “ஓ காதல் கண்மணி” என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் பேசியுள்ளார்.

அதிகமான ரசிகர்கள் அஜித் பற்றிச் சொல்லுங்க என்று கேட்டதற்கு, “ அஜித் அற்புதமானவர். அஜித் சார் மெகா ! இதற்கு மேலே அவரை பற்றிச் சொல்ல வார்த்தைகள் தேவையிருக்காது” என்றார்.

மேலும் சூர்யாவைப் பற்றி கூறும் போது, “ தான் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செய்பவர். என்னுடைய உன்மையான இன்ஸ்பரேஷன் இவர் தான்” என்று புகழ்ந்து தள்ளுகிறார் துல்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!