ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் பெயர் “அகிரா”? | அகிரா, சோனாக்‌ஷி சின்ஹா, ஏ.ஆர்.முருகதாஸ், a.r.murugadoss, akira, sonakshi sinha, anurag gasyap,

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (19/03/2015)

கடைசி தொடர்பு:17:47 (25/03/2015)

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் பெயர் “அகிரா”?

'கத்தி' படத்திற்கு பிறகு ஹிந்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்திற்கு “அகிரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், வில்லனாக பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யாப்பும் நடிக்கிறார்கள்.

தமிழில் அருள்நிதி நடித்து வெளியான “மெளனகுரு” படத்தின் இந்தி ரீமேக் படமே “அகிரா”. தமிழில் கதாநாயகனை மையமாக வைத்து நகரும் கதை, ஆனால் இந்தியில் கதாநாயகியை மையமாக வைத்தே கதை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும் சோனாக்‌ஷியின் பெயர் அப்படத்தில் அகிரா என்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அகிரா” என்பதற்கு ஜப்பானிய மொழியில் பிரகாசமானவள், புத்திசாளியானவள் என்பது பொருள். மார்ச் 16ல் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றுவருகிறது. மேலும் சோனாக்‌ஷியின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

அமீர் நடிப்பில் ’கஜினி’ மற்றும் ’துப்பாக்கி’ ரீமேக் தொடர்ந்து மூன்றாவது படத்தினை இந்தியில் இயக்குகிறார் ஏ.ஆர். இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்